குட்டிகதை- 2
வீடு
நம்பிக்கைக்கு பாத்திரம், உழைப்பாலே உயர்ந்த மனிதர் ஒருவரை தெரியுமா என்றால் கண்ணை மூடிக் கொண்டு வேலாயுதம் பிள்ளை பெயரை சொல்லலாம். பெரிய பில்டிங் காண்ட்ராக்டர். பல வருஷம் எல்லா பகுதிகளிலும் அவர் கட்டிய வீடுகள் ஏராளம். அவரிடம் சோமு பதினைந்து வயதிலிருந்து எடுபிடி முதல் இன்று
மேஸ்திரி மற்றும் தச்சு வேலை நிபுணன் வரை அனுபவம். வேலையில் கெட்டிக்காரன். வாரா வாரம் கூலி வந்துவிடும். வேலை சுத்தம்.
ஒருநாள் சோமுவுக்கு எதற்கு இனிமேல் இந்த பிழைப்பு?
. ஊரை பார்க்க மனைவி பிள்ளைகளுடன் சென்று சொச்ச காலத்தை நிம்மதியாக கழிக்கலாமே என்ற நினைப்பு வந்தவுடன் பிள்ளையிடம்
"முதலாளி, தை மாதம் முதல் நின்னுக்கிறேங்க. பட்டின வாழ்க்கை முப்பது வருஷம் போதுமுங்க” "
பிள்ளைக்கு வருத்தம்.
நல்ல ஆள் வேலையில் நம்பகமானவன் கெட்டிக்காரன் இவனைப்போல் கிடைப்பது அரிதாயிற்றே.
எவ்வளவு சொல்லியும் சோமு அவன் முடிவில் தீர்மானமாக இருந்தான்.
“சரி, சோமு ஆனால் எனக்காக ஒரு வீடு மட்டும் கட்டிகொடுத்துவிட்டு போ. இதை நீ கடைசி வேலையாக நினைத்து கொண்டு நன்றாக செய்து கொடு”.
அரை மனசோடு சோமு ஒப்புகொண்டான்.
வீடு கட்டப்பட்டது. சோமுவுக்கு நாமோ வேலையை
விடப்போகிறோம் எதற்கு உண்மையாகவும் சத்தியமாகவும் உழைக்கவேண்டும்??. இதுவரை அப்படி இருந்ததற்கு என்ன ஸ்பெஷலாக கிடைத்தது??
. எப்போவும் உள்ள வார கூலி தானே!!. ஆகவே வீடு கட்டுவதற்கு மட்டமான சாமான்களை உபயோகித்தும் , அரைகுறை வேலையோடும் தவறுகளோடும் ஏனோ தானோ என்று வீடு ஒரு அவசர வீடு (சினிமா செட் போல ) கட்டி முடித்தான். அவன் புறப்படும் நாள் வந்தது. பிள்ளை அவன் கணக்கை தீர்த்தார். என்ன தோன்றிற்றோ அவருக்கு, போகுமுன் "சோமு இங்கே வா"
என்றார். உள்ளே சென்று புதிதாக அவன் கட்டிய வீட்டின் சாவியை அவனிடம் தந்து " இந்தா இத்தனை வருஷம் நீ எனக்கு உதவியதற்கு நீ கடைசியாக கட்டிய வீடு உனக்கே தருகிறேன்"
என்றார்
சோமுவுக்கு தலை சுற்றியது. அடப்பாவி இத்தனை வருஷம் யார் யாருக்கோ அருமையாக உழைத்து நல்ல வீடுகளை கட்டி கொடுத்துவிட்டு எனக்கு நானே துரோகம் செய்து கொண்டேனே என்று வருந்தினான்"
இறைவன் சிரித்தான்.
நீதி: செய்யும் தொழிலே தெய்வம். அதில் நீ காட்டும் உண்மையான உழைப்பும் உற்சாகமும் தான் உன்னை நிலை நிறுத்தும்.
J.K. SIVAN
No comments:
Post a Comment