Monday, December 3, 2012

MORAL STORY நீதி முறை



குட்டி கதை  
                                          நீதி முறை 
மார்தாண்ட  ராஜாவுக்கு  ராஜ்ய  பாரம் தாங்க  முடியவில்லை. நீதி  நேர்மை  மிக்க    ஒருவரிடம்   நீதி பொறுப்பை  ஓப்படைக்க  ஆள்  தேடினார்  
மந்திரிகள்  யார் யாரையோ சிபார்சு செய்தபோதிலும்  ராஜாவுக்கு   அஸ்வத  யோகி     மேலேயே எண்ணம்  சுற்றி  ஓடியது.    ராஜ்யத்தில்  ஊர்  கோடியில்  ஆஸ்ரமத்தில்   அனைவருக்கும்  தர்ம  உபதேசங்களையும்,  இறை  பணியும்,   வாழ்க்கை  நெறிகளையும், போதித்து  வரும்  அவரே  தகுதியானவர்  என்று  முடிவு பண்ணி  யோகியை அணுகினார்.
“”ராஜாவே உங்கள்முடிவு   சரியல்ல  நான் அரச  நீதி,  தர்மத்திற்கு,  அப்பாற்பட்டவன்.   மனசாட்சி,   தர்மம்  நியாயம் இவை  தான்  எனக்கு   தெரியும். சட்டம்  எல்லாம் எனக்கு  தெரியாது.   நான் நீதிபதியாக இருந்தால்  ஒருநாள்  கூட  உங்களால்  நிம்மதியாக  இருக்க முடியாது  வேறு  யாராவது பாருங்கள்””.  . என்ன   சொல்லியும்     ராஜா  தீர்மானமாக இருந்தான்..  யோகி  நீதிபதியாக   இருப்பது  மக்களுக்கு  நல்லது  நாடு செழிக்கும்  என்று  ஒருவாறு யோகியை   மடக்கி  ராஜா  அவரை நீதிபதியாக   பண்ணிவிட்டான் 

முதல்  நாளன்றே  ஒரு  வழக்கு.  ஊரில்  ஒரு   பணக்கார வியாபாரி. நூறு  பருப்பு மூட்டைகள் சேமித்து வைத்திருந்ததில்  அவனிடம் வேலை செய்பவனே   ராவோடு ராவாக  கூடவே இருந்து குழி பறித்து விட்டான். கிட்டத்தட்ட  அம்பது மூட்டைகளை  அவன்  அபேஸ்  பண்ணிவிட்டான் என்று  வியாபாரி வாதம்.   திருடனோ  தான்  எடுக்கவில்லை என்றான். யோகி வழக்கை  விசாரித்ததில் திருடன்  கொஞ்சம் கொஞ்சமாக  அம்பது மூட்டை காலி  செய்தது நிருபணம்  ஆயிற்று. தீர்ப்பு கூறிய  யோகி,  திருடனுக்கு   ஒரு வருட  சிறை தண்டனை. வியாபாரிக்கு  ஒருவருட  தண்டனை  என  ஆணை இட்டார்.  இரண்டு வருட தண்டனை  எதிர்பார்த்த  திருடனுக்கு பரம சந்தோஷம்  வியாபாரிக்கு   “”ஹார்ட்  அட்டாக்” !! இது  அநீதி  நேர்மையல்ல”  என்று  கதறினான்  
யோகி நிதானமாக  “”ஏழை திருடும்படியாக வழியேற்படுத்தி கொடுத்தது குற்றம். வழியின்றி திருடியவன் ஒப்புக்கொண்டான். தண்டனை ஒருவருடமாக குறைக்கப்பட்டது.  நீயோ மக்கள்  உபயோகிக்கும் பொருளை  வெளியே விடாது விலையேற்றி  விற்று மக்களை  அவஸ்தை படுத்தி வேறு வழியின்றி அவர்கள் பணம்  கொடுக்கும்படி  திட்டமிட்டு  செயல் புரிந்தாய் .  இது  கொள்ளை யடிப்பது.   எனவே  உன்குற்றம் பெரியது. அதற்காகவே  இந்த தண்டனை.”” என்றார் 
ராஜா சந்தொஷமாக பெருமூச்சு விட்டான்.  மக்கள்  மயக்கமுற்றனர்.  இவர்  ஏன்        2G, CWG, COALGATE போன்ற வழக்குகளை  எல்லாம் கவனிக்க கூடாது என்ற எண்ணம்  அவர்களுக்கு  தோன்றியதோ என்னவோ?????

நீதி:  வெளியே தெரிந்த குற்றத்தைக் காட்டிலும்  தெரிய வராமல்  தடுக்கப்படும் குற்றங்களுக்கு   கூடுதல் தண்டனை உண்டு  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...