Monday, December 3, 2012

SIVAN'S MORAL STORIES 1 EDHU THEVAI ?




தினமும்  ஒரு குட்டி கதை சொல்லலாமே  என்ற  எண்ண  அடிப்படையில்  இன்று  முதல்  கதை  இதோ:



குட்டி கதை 1
                          
                                    எது தேவை??

அந்த  காட்டில்  இருந்த  ஒரு  முனிவர்  ஊர்  மக்களை  கவர்ந்தது  அவரின்  கருணை நிறைந்த மனதாலும் எவரையும்  பாசத்தோடு  வித்யாசமின்றி   பலன் எதிர்பார்க்காது  உதவியதாலும்  தான்.  அவரை   எப்போதும்  மக்கள் கூட்டம்  சூழ்ந்து கொண்டே இருக்கும்.    ஒருநாள்  ஊரை சேர்ந்த  தண்டபாணி  அவரிடம்  " குருவே,  எனக்கு  ஒரு வேலையும்  கிடைக்காமல்  வருமானமின்றி  தவிக்கிறேன்.  நீங்கள்  உதவி செய்யவேண்டும்  என்று கேட்டவுடன்  முனிவர்  “நாளைக்கு வா”   என்றார்.  நடுவே  ஒரு முறை  அந்தவூர்  பெரிய வியாபாரி  முத்தையா,   முனிவரை நேரில்  கண்டபோது  " ஒருவர்  வேலையின்றி  வாடுகிறேன் என்று என்னிடம்  உதவிகேட்டார்.  நீ  அவருக்கு உதவ    முடியுமா?    “ஆஹா,   எனக்கும்  ஒரு  ஆள்  இப்போ  தேவை தான்”.  
மறுநாள்  தண்டபாணி  முத்தையா விடம்  வேலைக்கு சேர்ந்தான்.  அவனை  வேறு  ஒரு ஊருக்கு  “”இந்த  சாமான்களை  விற்றுவிட்டு  வா””   என்று கொடுத்தனுப்பினார்  முத்தையா.  வெகுதூரம்  மூட்டையுடன்  நடந்து சென்ற  தண்டபாணி  வழியில்  ஒரு  குருட்டு  கழுகுக்கு  மற்றொரு  கழுகு  மாமிச துண்டுகளை  கொண்டுவந்து  ஊட்டுவதை கண்டு  ஆச்சர்யபட்டான்.  அவன்  யோசனை  எங்கோ  போய்விட்டது.

பல நாட்கள் கழித்து  ஒருநாள்  முனிவர்  தண்டபாணியை  பார்த்த  போது  அடையாளம்  தெரியாமல் இளைத்து வாடி இருந்தான்.  என்ன  ஆயிற்று உனக்கு  என்று கேட்டதற்கு  " முத்தையா விடம்  வேலைக்கு சேர்ந்து  மூட்டை தூக்கி  வழியில்  கழுகுகளை  பார்த்தது  எல்லாம்  சொல்லி "   சாமி!!  அந்த  குருட்டு கழுகுக்கே  கடவுள்  வேறு  ஒரு கழுகை அனுப்பி  உணவு கொடுக்கும்போது  நமக்கு  கொடுக்க  மாட்டானா  என்று  யோசித்தேன்.  வீடு திரும்பி  முத்தையா விடம்  மூட்டையை திருப்பிகொடுத்துவிட்டேன்.  கடவுள்  ஏனோ என்னும் கண் திறக்க வில்லை”  
என்று அழுதான்.    முனிவர்  அமைதியாக  சொன்னார்.   “ஏன்  குருட்டு கழுகை  முன் மாதிரியாக  கொண்டாய்.  மற்றொரு கழுகை பார்.  எந்த நிர்பந்தமும் இன்றி குருட்டு கழுகுக்கு  அது கேட்காமலேயே  தன்  உணவை  அளித்ததே  அதை ஏன்  கவனிக்க வில்லை”

நீதி:  பெறுவதை காட்டிலும்  கொடுப்பது தான்  உத்தமம். இறைவன் அவ்வாறு தானே  நமக்கு  அருள்கிறான்.  நமது தேவை எது  என்று   நாம்  அறிவதை விட  நமக்கு  எது தேவை  என்று  இறைவன்  நன்றாக அறிவானே

J.K. SIVAN

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...