KUTTIKADHAI 10
சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது!!!!
திருமழிசை கிராமம் மூங்கில் காடாக இருந்த காலம்.பார்கவ ரிஷி கனகாங்கி என்னும் பத்னி யோடு மனம் நொந்து அந்த காட்டிற்கு வந்தார்.அவள் கண்ணில் காவேரி .அவர் கையிலோ 12 மாசம் கருவில் இருந்தும்
உடல் உறுப்புகள் இன்றி ஒரு உயிரற்ற மாமிச
பிண்டமாக
(கிட்டத் தட்ட நாம் இப்போது சொல்கிறோமே ஸ்டில் பார்ன் என்று அதுபோல்) பிறந்த ஒரு சிசு.இறைவா இதுவும் உன் செயலாலே என்றால் அப்படியே ஆட்டும்"!! ஒரு மூங்கில் புதரில் அந்த சிசு கை விடப்பட்டது இதயம் வெடித்து சிதற இருவரும் சென்றனர். எம்பெருமானின் கருணையை வார்த்தைகளில் ரொப்ப முடியுமா?தனித்து விடப்பட்ட "அது" சில நேரத்திலேயே பூரண தேஜஸோடு முழு வளர்ச்சயடைந்த குழந்தையாக அழுதது.காட்டில் உலவிக்கொண்டிருந்த குழந்தை செல்வமில்லாத இரு வயதான காட்டுவாசிகளான திருவாளன் பங்கயற்செல்வி காதில் குழந்தை அழும் ஒலி கேட்டதும் ஆச்சர்யத்தோடு குழந்தையை தேடி கண்டு பிடித்து திருமழிசையான் என்றே பெயரிட்டுவளர்த்தனர். மிக்க ஆனந்தத்தோடு அதற்கு பசும்பால் ஊட்டினர். குழந்தையோ ஆகாரமே உட்கொள்ளாததால் "ஹே! திருமழிசையானே நீயே அருளவேண்டும், இந்த சிசு பாலுண்ண வேண்டும் என அந்த கிழ தம்பதியர் வேண்டியவுடன், குழந்தை சிறிது பால் அருந்தி விட்டுமீதியை அவர்களே மீதியை அவர்களே குடிக்க வைத்தது. என்ன ஆச்சர்யம்! கிழ வேட தம்பதிகள் இளம் தம்பதிகள் ஆகி அவர்களுக்கு விரைவில் ஒரு குழந்தையும் பிறந்து அவனுக்கு கணிக்கண்ணன் என்று பெயரிட்டு அவன் திருமழிசையானுடன் வளர்ந்தான். திருமழிசையான் கல்வி கேள்விகளில் சிறந்தவனாகி பல மதங்களை ஆராய்ந்து பின்னர் சிவபக்த சிரோமணியாக மாறி சிவவாக்யர் ஆனார் என்றும் பேயாழ்வார் அவரை நாராயணனின் மகத்வம் உணர வைத்து வைணவராக மாற்றி திருமழிசைஆழ்வார்சம்ஸ்க்ருதத்தில் மழிசை என்பது 'மஹீஸாரம்', அது மஹீஸார க்ஷேத்ரம் "பூமிக்கே ஸாரமான ஊர் அது". மஹீஸாரத்தில் பிறந்து வளர்ந்தவர் பக்திஸாரர்!) என்று நாம மிட்டார் என்றும் சொல்வதுண்டு.ஆழ்வார் கூடவே இருக்கும் கணிக்கண்ணன் ஆழ்வாரின் பிரதம சிஷ்யனானான்.

ஒரு முறை அவர் காஞ்சீபுரத்துக்கு வந்து வாஸம் பண்ணிக் கொண்டி ருந்தார். அங்கேயிருக்கிற
ஒரு பெருமாள் கோவிலில் பாசுரம் பாடிக் கொண்டும்,உபதேசம் பண்ணிக்கொண்டும் அவ்வப்போது அப்படியே
யோக ஸமாதியில் போய்க்கொண்டும் இருந்தார். ராஜா ஒருநாள் அந்த கோவிலுக்கு
வந்தான். பெருமாளை வழிபடும்போது கணிக் கண்ணனின் அழகு தமிழில் செவிக் கினிய
பாசுர மியற்றும் பாங்கில் மயங்கி ராஜா தன் மீது பாடல் இயற்ற உத்தரவிட்டதும்,
கணிக் கண்ணன் "இறைவன் மீதன்றி மற்றவர் மேல் புகழாரம் அல்ல" என மறுத்ததும்,அரசன் கோபம் கொண்டு கணிக்கண்ணனை மறு நாள் காலைக்குள் ஊரை விட்டே போகச்சொன்னதும்,கணிக்கண்ணன் தன் குருவிடம்
சென்று "ஸ்வாமின், நான் உங்கள் நிழல்,எவ்வாறு உங்களை விட்டு பிரிந்து செல்ல முடியும் என்றதும், ஆழ்வார் அமைதியாக பெருமாளை நோக்கி,
"ஹே!! நாக சயனா, கணிக்கண்ணன் போகின்றான், நானின்றி அவனில்லை எனவே நானும் போகிறேன்,
நீயின்றி நானில்லை எனவே நீயும் சட்டு புட்டு என்று உன்னுடைய இந்த நாக படுக்கையை சுருட்டி கொண்டு ஐந்தே
நிமிஷத்தில் கிளம்பு மூவரும் செல்லலாம்" என்று ஆர்டர் போட்டார்! மூவரும் காஞ்சியை
விட்டு அகன்றனர். ஊரே அஸ்தமித்து விட்டது. மண்மாரி பெய்தது. ராஜாவுக்கு விஷயம் தெரிந்து
அலறி புடைத்துக்கொண்டு ஓடினான். பெருமாள்,ஆழ்வார் கணிக்கண்ணன்
காலில் விழுந்தான் அழுது புரண்டான். மா பெரும்
தவறிழைத்தேன். திருந்தினேன் என்று அலறினான். நீங்கள் வராமல் திரும்பேன்
என்று கெஞ்சினான். ஆழ்வார் கணிக்கண்ணா வா திரும்புவோம்
என்றார். பெருமாளை பார்த்து "நீயும் தான், நீ இல்லாமல் நாங்கள்
ஏது? சுருட்டிய உன் பாம்பு படுக்கையை மீண்டும் அங்கு வந்து விரித்துக் கொள் "என்றார்.
மூவரும் திரும்பினர் "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்"
(யதோக்த காரி'யதா உக்த':='சொன்னபடி', 'சொன்ன வண்ணம்';காரி'=செய்பவர்) என்று பெயர் வாங்கினான். காஞ்சீபுரத்தில் இந்த கோவில்
ஒரு திவ்யதேசம்.
நின் கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணி செய்து கிடப்பதே என்று இறைவனே மூச்சாக வாழ்வார்க்கு
இறைவன் சொன்னதையும் ஏன் சொல்லாததையும்
செய்வான் இறைவன் பக்தனுக்கு அடிமை என்பதற்கு இந்த கதை ஒன்றே
போதுமே!
No comments:
Post a Comment