KUTTI KADHAI 45 கண்ணனின் குழல்
கிருஷ்ணன் யமுனையில்
ஆயர்பாடி சிறுவர்களோடு
விளையாடிக்கொண்டிருந்தான். கரையில்
அவர்கள் வஸ்திரங்கள்.
கிருஷ்ணனுடைய புல்லாங்குழல்
அவன் ஆடைகளுடனும்
மணி மாலைகளுடனும்
கலந்து அவனுக்காக
காத்திருந்தபோது இது
நிகழ்ந்தது.
“நம் அனைவரிலும்
யார் விளையுயர்ந்தவர்கள்
யாருக்கு மதிப்பு
ஜாஸ்தி?”
பீதாம்பரம்
தான் விலை யுயர்ந்தவன்
தனக்கே மதிப்பு அதிகம்
என்று கர்வத்தோடு
இதை கேட்டது. மணிமாலை
சொல்லியது. “இது ஆயர்பாடி கோபியர்கள்
எங்கிருந்தெல்லாமோ சேகரித்து
கோர்த்து கிருஷ்ணனுக்காக செய்தது. இதற்கு
மதிப்பு போடமுடியாது.”
புல்லாங்குழல் பேசாமலேயே
இருந்தது.
“இந்த மூங்கில்
குழாய்க்கு என்ன
மதிப்பு போடலாம்?” என்று வஸ்திரம்
மணிமாலையை கேட்டது.
“எதாவது இருந்தால் தானே
போடுவதற்கு” என்று
இரண்டும் கேலியாக
சிரித்தன.
அருகில் மரத்தடியில்
ஒரு முனிவர்
தவம் செய்து கொண்டிருந்தவருக்கு இந்த
சம்பாஷணை அறிய முடிந்தது.
மதிப்பு பற்றி
பேசும் மதியிலிகளே
இதை கேளுங்கள்:
நீங்கள் நினைப்பது போல்
இந்த மூங்கில்
குழாய், புல்லாங்குழல் அற்பமானதல்ல.
கண்ணன் குழல் இசைக்காத
போதும்,மற்ற பிள்ளைகளோடு
விளையாடும்போதும், ஆவினங்களிடம்
கோபியர்களுடனும் அவன் சல்லாபிக்கும்போதும்
அவன் இடுப்பில் அது
ஏன் எப்போதும் குடிகொண்டிருக்கிறது
? . அவன் அதை
ஏன் தனக்கு பிடித்த பொருளாக
உபயோகிக்கிறான் என்றாவது உங்களுக்கு தெரியுமா.?”அவன் கையிலிருக்கும் இந்த
குழல் தான்
நாம் அனைவரும்.
இந்த குழலில் எட்டு
துளைகள் இருக்கிறதே, அதுவே நம் 8 உறுப்புகள் - கண்கள், காதுகள் மூக்கு,
நாக்கு, சருமம்,
புத்தி, மனம்,
அஹங்காரம் ( இது
தான் நான் மற்றவனை
காட்டிலும் வேறானவன்
என்று நினைக்க
வைக்கிறது) கிருஷ்ணன்
வாசிக்காதபோது வெறும்
காற்று உள்ளே நுழைந்து
வெளியேறினால் ஏதோ
ஒரு சப்தம் தான் வரும் இசை
வராது. நம்மை
கண்ணனுக்கு அர்ப்பணம்
செய்து அவனே
வழிகாட்டி என
உணர்ந்தால் நம்மில்
அபூர்வ நாதங்கள் தோன்றும்.
அதுவே அவன்
வாசிக்கும் இசை.
நாம் வெறுமையுடன், அவன் மூலம், இயங்கினால் நம்முடைய,
கோபம், தாபம்,
நேர்மையின்மை, வெறுப்பு,
அசூயை, எல்லாம்
காலியாகி, அவன்
நம்மை உபயோகித்து
இசைக்கும் “தெய்வீகம்”
நமது வாழ்க்கை
ஆகிறது. இதுவே புல்லாங்குழல் தத்துவம். மஹா பெரிய ஞானிகளும் முனிவர்களும் ரிஷிகளும்
இத்தகைய புல்லாங்குழல்கள்.
அவர்கள் மூலமே
நாம் மேன்மையுருகிறோம்.
பரமானந்தம் பெறுகிறோம்.
இதைகேட்ட புல்லாங்குழல் அமைதியாக கண்ணனின் வரவுக்காக காத்திருந்தது.
இனியாவது நம்மை
அவனது புல்லாங்குழலாக
மாற்றிகொள்வோமே
No comments:
Post a Comment