குட்டிகதை 49 பாச" கயிறு"
விஷமம் என்றால் கொஞ்ச நஞ்சமல்ல.
சரியான முள்ளு அந்த பையன்.“இவனை எப்படி டீ, கட்டி மேய்க்கறே? என்று பக்கத்து வீடு கோகிலா கேட்டபோது தான் அந்த கேள்வியிலேயே ஒரு விடை இருப்பதை
யசோதை உணர்ந்தாள். சேர்ந்தாற்போல் இது இரண்டாவது வாரம். ஒவ்வொரு
நாளும் வீட்டில் வெண்ணை சட்டி உடைந்திருக்கும் ஆனால் வெண்ணை மட்டும் காணாமல் போயிருக்கும். காரணம் யார்
என்பதோ வெட்ட வெளிச்சம். ஆகவே அதட்டி பார்த்தாள். உருட்டி விழித்தாள், கையை ஓங்கினாள். அடிக்க மனசு வரவில்லை. சிரித்தே அல்லவா மயக்கி விடுகிறான்.
சரி, கோகிலாவின் கேள்வியில்
என்ன பதிலிருந்தது.?
"எப்படி கட்டி மேய்க்கறே"
.ஆஹா, இது முன்னாலேயே தோன்றாமல் போய்விட்டதே!!.
தோட்டத்தில் ஒரு பெரிய நெல் இடிக்கும் உரல் இருக்கிறதே அருகில் ஒரு சிறிய தாம்புக்கயிறு கண்ணில் பட்டதும் அந்த கயிறு கண்ணனுக்கும் உரலுக்கும் நெருங்கிய உறவாகி விட்டது. அவன் வயிற்றில் ஒரு முனை மற்றொன்று அந்த உரலின் வயிற்றில். கண்களில் கண்ணீர் குளமாக தேம்பி எப்போது நீர் சொட்டாக விழுமோ என்று தளும்பி நின்றதை பார்த்தால் அந்த கல்லும்
உருகிவிடும்.!! கட்டிபோட்ட வருத்ததோடு " இது
உனக்கு சரியான தண்டனை. இனிமேல் ஒவ்வொரு
தடவையும் நீ செய்யும்
விஷமத்துக்கும் இது போலவே கட்டிபோடபோகிறேன்" என்று அவனுக்கு வார்னிங்
கொடுத்துவிட்டு மத்யானம் வரை இங்கே கிட, பிறகு தான் உனக்கு விடுதலை” என்றாள்
யசோதை..
அவள் சென்ற சில மணி
நேரத்திலே கண்ணன் சுற்றுமுற்றும் பார்த்தான். சற்று தூரத்தில் இரு நெடிய மரங்கள் இணைந்து நெருக்கமாக வளர்ந்து சற்று இடைவெளியுடன் தென்பட்டது .கண்ணன் உரலோடு
மெதுவாக நகர்ந்தான் அவ்விரு நெடிய மரங்களின் இடையில் சென்றபோது கயிற்றின் மறு
முனையில் இருந்த உரல் மரங்களுக்கு இடையில் சிக்கி மேலே செல்ல முடியாமல் தடுத்தது. சிரித்து
கொண்டே கண்ணன் ஒரு இழுப்பு இழுக்கவே என்ன ஆச்சர்யம்!
உரல் அந்த மரங்கள் இரண்டையும் வேரோடு சாய்த்தது.
நாரதரால்
ஒரு காலத்தில் சபிக்கப்பட்டு மரமான குபேரன் பிள்ளைகளான இரு வானவர்கள் அவற்றிலிருந்து சாப விமோசனம்
பெற்று கண்ணனை வணங்கி வானுலகு சென்றனர்.
வெகுநேரம்
கழித்து மனம் இளகி கண்ணனுக்கு விடுதலை வழங்க வந்த யசோதை மயங்கி கீழே விழுந்தாள். இரண்டு
நெடிய மரங்கள் தரையில் சாய்ந்து கிடந்தன. கண்ணன் உரலுடன் கட்டிய கயிற்ருடன் அவளை ரொம்ப
இன்னோசெண்டாக பார்த்துக்கொண்டு நின்றான் .ஏதோ பெரிய ஆபத்து குழந்தைக்கு வந்திருக்கிறதே
அந்த மரங்கள் குழந்தை மேல் கடவுள் கிருபையால் விழவில்லை என்று கடவுளை மனமாற வேண்டினாள். கண்ணன் சிரித்துக் கொண்டே அவளது வேண்டுதலை வெளிகாட்டி கொள்ளாமல்
ஏற்றான் !!
இறைவன்
உள்ளன்பினால் மட்டுமே "கட்டு" படுபவன்.
No comments:
Post a Comment