KUTTI KADHAI 41
பீஷ்மன் தந்த பரிசு
பத்து நாள் யுத்தம் முடியும் தருவாயில் பேரிடி காத்திருந்தது கௌரவ சைன்யத்துக்கு. பிதாமகர் பீஷ்மர் பாண்டவர்களை வறுவலாக ஒன்பது நாளாக. எப்படியோ தாக்கு பிடித்தனர் பாண்டவர்கள். கிருஷ்ணன் தான் காரணம் இதற்கு.
“அர்ஜுனா, உன் வீரம் பீஷ்மன் முன் செல்லாது. வீணாக பிரயாசை படாதே. நான் பார்த்து கொண்டு தானே இருக்கிறேன். தர்மனை வரச்சொல் உடனே” என்றான் கிருஷ்ணன். ஓடி வந்தான் தர்மன்
“தர்மா பீஷ்மனை பூமியில் எவராலும் வெல்ல முடியாது. எனக்கு தெரிந்து ஒரு வழி தான் உண்டு. பீஷ்மன் பெண்களை எதிர்த்தோ அல்லது ஆணல்லாதவருக்கு எதிராகவோ ஆயுதம் எடுக்க மாட்டான். துருபதனிடம் பேசிக்கொண்டிருந்தபோது அம்பை என்ற பெண் பீஷ்மனை கொல்ல வென்றே தவமிருந்து ஆணாக மாறியவள்-
- அவள் இந்த போரில் உனக்கு உதவ வந்திருக்கிறாள். அவள் பீஷ்மனை பழி வாங்க வென்றே நீல தாமரை மாலை சூடிக்கொண்டவள்.
ஆணாக மாறி சிகண்டி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டிருக்கிறாள் என்றான் கிருஷ்ணன். உடனே சிகண்டியை வரவழை. என் மீது பீஷ்மனின் பாணங்கள் முழுதும் என்னை சல்லடை கண்ணாக்கி விட்டன. அவ்வளவும் அர்ஜுனனை நோக்கி வந்தவை.
ஒரு கணம் நானே பீஷ்மனை கொன்றுவிட தேரிலிருந்து இறங்கி விட்டேன். பிறகு அமைதியானேன் . என்னை ஆயுதம் எடுக்க வைக்கிறேன் என்று பீஷ்மன் சபதமிட்டது நினைவு வந்தது. பொறுத்து கொண்டேன்
நாளை சிகண்டியை உனக்கு கவசமாக முன்னிறுத்தி கொள் எனக்கு இனி பீஷ்மனின் சித்ரவதை தாங்க முடியாது” என்று சிரித்து கொண்டே சொன்னான் கிருஷ்ணன்.
பத்தாம் நாள் யுத்தம் துவங்கும்போது பீஷ்மன் ஆக்ரோஷத்தோடு வந்தான். இன்றே கடைசிநாள் அர்ஜுனனையும் பாண்டவர்களையும் வென்று யுத்தம் இன்று முடியும் என்று முடிவெடுத்தான்.
அர்ஜுனன் முன்னால் சிகண்டி நீல தாமரை மாலையுடன் போரிட வந்ததை எண்ணி சிந்தித்தான். இது நிச்சயம் கண்ணனின் திட்டம் என சட்டென்று புரிந்து கொண்டான். சிகண்டி சரமாரியாக பொழிந்த அம்புகளை ஏற்றுகொண்டான். திருப்பி தாக்க முயலவில்லை. அவன் சிகண்டியின் சரங்களை தாக்காமல் இருந்த நேரத்தில் அர்ஜுனன் தாக்குதல்கள் அவனை துன்புறுத்தின. கடைசியில் வேறு வழியின்றி பீஷ்மன் குற்றுயிரும் குலையுயிருமாய் யுத்த களத்தில் சாய்ந்தான்.
பெரிய ஆபத்திலிருந்து பாண்டவரை கண்ணன் இவ்வாறு மீட்டான்.
“யுதிஷ்டிரா பீஷ்மன் செத்து கொண்டிருக்கிறான் உடனே செல். அவனுக்கு பணிவிடை செய் என்றான்
கிருஷ்ணன்.
அர்ஜுனா, ஒரு தாத்தாவுக்கு பேரனிடம் யுத்தம் செய்து தோற்பதில் என்ன ஆனந்தம் இருக்கும் என்று புரியும் வயதில்லை உனக்கு. இங்கே வா. எனக்கு மரணம் அடுத்த அயனத்தில் தான்.
43 நாள் காத்திருக்க வேண்டும் நான். அதுவரை எனக்கு ஒரு நல்ல அம்பு படுக்கை விரித்து கொடு” என்றான்
பீஷ்மன். அவ்வாறே செய்தான் அர்ஜுனன்.
“யுதிஷ்டிரா இங்கே வா. உனக்கு நாராயணனின் ஆயிர நாமங்களை சொல்கிறேன் எழுதிக்கொள் இதையே ஸ்ரத்தையாக யுதிஷ்டிரன் வியாசரிடம் சொல்ல அவர் நமக்கு விஷ்ணு சஹஸ்ரநாமம் தந்திருக்கிறார்
ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்
No comments:
Post a Comment