குட்டி கதை 40 யமுனா நீ உயர்ந்தவள்?
ஒரு எண்பது வயது கிழவி அவள். கோதாவரி என்று பெயர். அவள் எபோதும் தனியாகவே இருப்பவள். அவளுக்கு யாரும் இல்லை வாழ்க்கையின் பெரும்பகுதி நதிக்கரையிலேயே எங்காவது வசிப்பவள். இரவோ பகலோ அவளுக்கு உற்ற சினேகிதி எதாவது ஒரு நதியே. கங்கைக்கரையில் வெகுகாலம் வாழ்ந்த அவள் மெதுவாக இப்போது யமுனைக்கு வந்து விட்டாள்.
யாரும் இல்லை நதிக்கரையில். நதியை ரசித்துக்கொண்டு அதோடு பேசுவாள். எவ்வளவு அழகாக இருக்கிறாய் நீ! . நுங்கும் நுரையும் மலர்களும் நறுமணமும் வீச ஒரு இளம் பெண்ணாகவே கங்கையை விட அழகானவளாகவே
எனக்கு காட்சியளிக்கிறாய் யமுனா".
குரல் கேட்டது பதிலாக: “ நீயும் ஒருகாலத்தில் இளம் பெண் தானே. என்னை விட அழகானவளாகவே இருந்திருப்பே என தோன்றுகிறது".
யார் பேசுகிறது என்று கிழவி அங்கும் இங்கும் பார்த்தாள்.
"கோதாவரி, நான் தான் பேசுகிறேன் உன் யமுனா".
"நான் எப்படி இருந்தேன் என்றே எனக்கு தெரியாது யமுனா. நான் வயதுக்கு வரும் முன்பே எனக்கு கணவனாக இருந்தவன் கங்கையில் மூழ்கி போனானே. அன்றிலிருந்து நான் கங்கை கரையிலேயே வருவானா என்று வெகு காலம் பார்த்து கொண்டே பிறகு அவனை மறந்து, கங்கையின் அழகில் வாழ்ந்தவள்".
"கோதாவரி, நீ சொல்வது சரியே. கங்கை மிக பெரியவள். பெரிய இடத்தை சேர்ந்தவள் .எங்களுக் கெல்லாம் தலைவி. புண்ய நதி. அவளுக்கு நான் ஈடாக முடியுமா? நான் சாதாரண மானவள் கோதாவரி".
"அம்மா , யமுனா நீ ரொம்ப அடக்கமானவள் என்றுமே. கங்கைக்கு கோபமும் சீற்றமும் அடிக்கடி வரும். உன் பெருமை நான் அறிவேன். என் வாழ்வு முடியும் முன்பு உன்னை அடையவேண்டும் உன்னிலே
கலந்து என் மூச்சை விடவேண்டும் என்பதற்காகவே வந்தவள்"
"கோதாவரி, நீ எனக்கு மகிழ்ச்சியூட்ட இப்படியெல்லாம் சொல்கிறாய். நான் கங்கையின் முன்பு ஒரு சிறு ஓடை. அவ்வளவே."
"யமுனாதேவி, நீயும் கங்கையும் ஒன்றே. உன் பெருமை நான் உணர்ந்தவரை சொல்கிறேன் கேள். கங்கையை நூறு மடங்கு புனிதப்படுத்தினால் கிடைப்பவள் நீ. விஷ்ணு என்கிற நாராயணனின்
ஆயிரம் நாமத்தை விட ராமா என்கிற பெயர் உசத்தி. அப்படிப்பட்ட ராமனின் மூன்று நாமங்களுக்கு ஈடு கிருஷ்ணன் என்கிற ஒரு நாமம். இது பாகவதத்தில் இருக்கு. யமுனையில் நீராடினால் ஒருவன் செய்த பாபத்தின் விளைவுகள் அவனை விட்டு விலகும் அம்மா யமுனா, நீ ரொம்ப புண்யம் செய்தவள். புண்யம் தருபவள். உன்னில் ஒருமுறை
ஸ்நானம் செய்தவன் குளித்து எழும்போது மனம் பூரா கிருஷ்ணனின் நினைவுகளோடு தான் கரையேறுகிறான். சைதன்யர் சொன்னதம்மா இது. உனக்கு தெரியுமா? பிருந்தாவனத்தில் வசித்து அன்றாடம் உன்னிடம் ஸ்நானத்துக்கு வருபவர்களால் இந்த உலகமே சுத்தமாகிறது. நீ மறந்துவிட்டாயா? எத்தனை ஆயிரம் முறை உன்னில் மூழ்கி விளையாடியிருக்கிறான் கிருஷ்ணன் நண்பர்களுடனும் கோபியர்களுடனும்!! அவன் பாதத்தை எவ்வளவு ஆயிரம் தடவை
நீ தொட்டு புனிதமடைந்தவள். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்???
கிழவி யமுனையில் கலந்து கிருஷ்ணனில் கரைந்தாள்.
No comments:
Post a Comment