Monday, December 3, 2012

MORAL STORY 14 ஓபுல் ரெட்டியின் குறை




KUTTI KADHAI 14

                       ஓபுல்  ரெட்டியின்  குறை  

ஓபுல்  ரெட்டி  ஒரு  கிருஷ்ணபிரியன்.  கண்ணன் மீது அபார பக்தி.   தெலுங்கு மலையாள சினிமாவில்  யாராவது  ஒரு   கொழுக்கட்டை ஆசாமி  கிருஷ்ண வேஷம்  போட்டிருந்தாலும்  அவன் படத்தை  வெட்டி   மேசையில்  கண்ணாடி கீழே  வைத்து கொள்பவன் 

ஐப்பசி  அடைமழை  ஒருநாள்.   ஜோ வென்று வானம் பொத்துக்கொண்டு சுனாமியாக மழைதெரு நிரம்பிவீடு
 நிரம்பி ஏரியும் உடைந்து எல்லோரும்  ஊரைவிட்டு ஓடினபோது  "அடே ரெட்டி,  நெல்லூரில்  புயல்  வீசப்போகிறதுவீட்டை காலி பண்ணிக்கொண்டு ஓடி வாதண்ணியே இல்லாத சென்னைக்கு போவோம்"என்று கோபாலன் 
சொன்னான். "
கிருஷ்ணன் என்னை காப்பாற்றுவான்  நீ ஓடுஎன்று சொல்லி காப்பாற்ற வந்த ஜீப் வண்டியையும் திருப்பி அனுப்பினான்  ஓபுல்ரெட்டி.  வீடெல்லாம் மூழ்கி கழுத்தளவு தண்ணீரில் இருந்தபோதும் காப்பாற்ற வந்த 
படகுக்காரனை " போ அப்பனேஎன் கிருஷ்ணன்  இருக்கவேஇருக்கிறான்  என்னை காப்பாற்றுவான் . நீ உன்னை முதலில் காப்பாற்றிக்கொள் " என்று விரட்டினான்.  இன்னும் நீர் மட்டம் ஏறி வீடு மூழ்கியதுகூரையின் மீது நின்றுகொண்டிருந்த ஓபுல் ரெட்டிக்கு எலிகாப்ட்டர் ஏணியை இறக்கியதுகையை ஆட்டி "ஏறிக்கொள்என்றபோதும் கடவுளுக்காக 
காத்திருந்தான்.
 நீரில் மூழ்கி மூக்கை சிந்திக்கொண்டு  வைகுண்டத்தில்  ஓபுல் ரெட்டி  கிருஷ்ணனை கோபமாக கேட்டான்:
"உன் மீது அபார நம்பிக்கையுடன் நீ வருவாய் காப்பாற்றுவாய் என நம்பினேனே??!  ஏன் ஏமாற்றினாய் ?
அடே,  முட்டாளேஜீப்பையும்படகையும்எலிகாப்டரையும் கொண்டுவந்து உன்னை கூப்பிட்டது யாரென்று நீ எண்ணினாய்.?"
பதில் சொல்ல தெரியாத  ரெட்டிக்கு  தும்மல் தான் வந்தது.

நீதி:         கடவுளை நம்பினோர் கைவிட படார். கடவுள்  சங்கு சக்கரத்துடன் தான்  வரவேண்டும்  என்று காத்திருந்தால்  அவர்  எந்த ரூபத்திலும்  வந்து உதவுவதை இழப்பாய் 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...