THIS BLOG REPRESENTS THE SPIRITUAL, EDUCATIONAL, HISTORICAL, NOSTALGIC RECOLLECTIONS OF J.K. SIVAN BESIDES HIS STORIES AND TRAVELLOGUES & PILGRIMAGES AND PICTURES
Sunday, January 31, 2021
SURDAS
LOST TEMPLE
ஒரு அக்ரமத்தின் கதை. J K SIVAN
பிறகு (TO APPRECIATE MY WRITING)
''கோவில் போய் கோர்ட் வந்தது டும் டும்''
ஸ்ரீ வீரபாகு ஒழுக்க சீலர். ப்ரம்மச்சரியத்தை கடைபிடிப்பவர். இனிய குணத்தவர். மக்களிடம் நேசம் கொண்டவர். எல்லாவற் றிற்கும் மேலாக இந்திய தேசிய வார இதழ் ''விஜய பாரத'' ஆசிரியர் , ஸ்ரீ ம . வீரபாகு. RSS இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட சமூக சேவகர். அரைநூற்றாண்டுக்கு மேல் தன்னலமற்ற தேச சேவை: வணங்குகிறேன்:
விஜய பாரத ஏடு தனது அக்டோபர் 3-2017 இதழில் ஒரு பூதாகரமான செயதியை வெளியிட்டது
ஏற்கனவே இருந்த சிவ, விஷ்ணு கோயில் களை இடித்துவிட்டு அந்த இடத்தில் தான் ஆங்கிலேயர்கள் இப்போதிருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தை கட்டினார்கள்'' -
'' சென்னை சௌகார்பேட்டை பகுதியில் சென்னகேசவ பெருமாள் கோயில் இருக் கிறது. இதை பாரதத்தை சுரண்ட வந்த கிழக்கிந்திய கம்பெனி நிதி அளித்து கட்டச் செய்தது என்று 'வரலாறு' . இது உண்மையல்ல. சுத்தப் பொய் . சென்னை உயர்நீதிமன்றம் இப்போது இருக்கிறதே அங்கே தான் சென்னை மல்லீஸ்வரர், சென்னை கேசவர் ஆலயங்கள் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனி வெள்ளையன் இவற்றை இடித்து விட்டு கோர்ட் கட்டினார்கள்.
ஹை கோர்ட் கட்டிட 150வது ஆண்டுவிழா நிகழ்ச்சியின் போது இந்த வெளியே பரவாத செயதி அம்பலமானது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பேசும்போது: 'ஆஹா நமது நீதிமன்றம் ஒரு புனிதமான இடத்தில் அமைந் திருக்கிறது' என்று கொண்டாடினார். புனிதமான இடத்தில்' என்றால் கோயில் இருந்த இடம் தானே!.
சென்னை மாநகருக்கே அந்தப் பெயர் வருவ தற்கு ஒரு காரணம் சென்ன கேசவ பெருமாள், சென்ன மல்லீஸ்வரர் இரட்டை ஆலயங் கள்தான். கிழக்கிந்தியக் கம்பெனி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிப்பதற்காக இந்த இரட்டைக் கோயில்களை தகர்க்கப் போவதாக அறிவித்ததும் அன்றைய பக்தர்கள், ஹிந்து பெருமக்கள் புயலாய் சீறினார்கள். கவலை வேண்டாம் இந்த வேறு இடத்தில் கோயில் கட்ட பணமும் இடமும் தருகிறோம் என்று கிழக்கிந்திய கம்பெனி அவசரமாக சொல்லிப் பார்த்தது. அன்றைய ஹிந்துக்களின் தலைவ ரான மணலி முத்துக்கிருஷ்ண முதலியார் ஆவேசமுற்றார். ஆங்கிலேயர்களுக்கு மொழி பெயர்ப்பாளராக இருந்தவர்.
''போய்யா, உன் பணம் யாருக்கு வேண்டும்'' என முடிவெடுத்து கோயில் இடிக்கப் படுவதைக் கேள்விப்பட்டு தன்னுடைய சொந்த செலவில் சென்ன கேசவப் பெருமாளையும் சென்னமல்லீஸ்வரரையும் தேவராஜ முதலித் தெருவில் 1700 ல் பிரதிஷ்டை செய்தார். வெள்ளையன் அரசாங்கம் தருவதாக சொன்ன பணத்தை நிராகரித்து தன் சொந்த செலவில் கோயில் கட்டிமுடித்தார். குறிப்பாக சென்ன மல்லீஸ்வரர் கோயிலை ஆலங்காத்தா பிள்ளை என்ற வணிகர் கட்டிக்கொடுத்தார். ஆதியில் இந்த இரு கோயில்களும் 1646லேயே கட்டப்பட்டவை என்கிறார் சென்னை பற்றி வரலாற்று குறிப்புகள் தரும் எஸ். முத்தையா. அந்த இரண்டு கோயில்களையுமே பேரி திம்மப்பா என்ற மொழிபெயர்ப்பாளர் கட்டியிருந்தார். யார் கட்டினால் என்ன?
கோயில் இருந்த காலத்தில் அந்த வளாகத் தில் இருந்த சிறிய நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வருகிறவர்கள் கோயிலிலிருந்து அர்ச்சகர்கள் கொண்டுவரும் துளசி தீர்த்தத்தை வார்த்து 'நான் சொல்லும் சாட்சி உண்மை. பொய் அல்ல' என்று சபதம் ஏற்பார்கள். இதைப் பார்த்துவிட்டு வழக்குத் தொடர்ந்தவர்கள் சிலரும் 'நான் தொடுத் திருப்பது உண்மையான வழக்கு. பொய் வழக்கு அல்ல' என்று சபதம் ஏற்பார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாதாரண மக்களின் மன நிலை எப்படி இருந்தது,
புனித ஜார்ஜ் கோட்டையை விஸ்தரிக்க கோயிலை இடித்தது மட்டும் அல்ல. 1844ல் வெள்ளையன் ஒரு சட்டம் இயற்றி அதன்படி கிறிஸ்தவராக மதமாற்றப்பட்டவர் சொத்துக்கு வாரிசாக தொடர்ந்து இருக்க முடியும். ஏறக்குறைய அதே சமயத்தில் கிறிஸ்தவ இறை இயலை (தியாலஜி) சென்னை பல் கலைக்கழகத்தில் கட்டாயப் பாடம் ஆக்கினான்.
பிரபல அவுரி வர்த்தகரான கஜுலு லட்சுமிநரசு செட்டி இந்த மதமாற்ற சட்டத்தை எதிர்த்து 1846ல் சென்னை நகரில் கண்டன கூட்டம் நடத்தி னார். இதையடுத்து அந்த சட்டம் வாபஸ் பெறப்பட்டது. 1888ல் சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஒரு மாணவர் மதமாற்றப்பட்டார். அது மாநிலமெங்கும் கடுமையான பதட்டத்தை ஏற்படுத்தியது.
இதெல்லா ம் நடந்து முன்னூறு வருஷங்க
ஹை கோர்ட் நாலு வாசலை கொண்டது. பெரிய கோவில்களில் இன்றும் நான்கு வாசல்கள் இருப்பதை நினைவூட்டு கிறது. ஆமாம் இங்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல், மேற்கு வாசல், வடக்கு வாசல் உள்ள பெரிய கோவில்கள் இருந்தது. இப்போது வெறும் வாசல் மட்டும் நீதி மன்றத்துக்கு என்று தெரிகிறது.
நல்ல நீதிபதி, நல்ல பக்தர் நல்ல நீதிபதியாக திகழ்ந்த டி. முத்துசாமி ஐயர் நல்ல பக்தரா கவும் திகழ்ந்தார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அவர் அமரும் இடம் பழைய கோயிலில் மூலஸ்தானம் என்று அவருக்குத் தெரியும். எனவே, தனது பணிக்காலம் முழுதும் நீதிமன்றத்திற்கு உள்ளேயே அவர் காலணி அணிந்து செல்வது இல்லை.
Wikipedia படித்தேன். அதில் கோவில்களை அகற்றிய செயதி இருக்கிறது. சென்னை நில உடமை பற்றிய பழைய சில விவரங்களை படித்தேன். அதிலும் இது ருசுவாகிறது.
''மெட்ராஸ்'' 22.8.1639 அன்று பேர் பெற்று உருவானது. அதில் வாழ்ந்த முக்கிய பிரமுகர்களில் இருவர் பேரி திம்மண்ணன் எனும் பிரான்சிஸ் டே Francis Day எனும் வெள்ளைக்காரரின் உதவியாளன். இன்னொ ருவர் நாக பட்டன் எனும் கிழக் கிந்திய கம்பனிக்கு பீரங்கி வெடி மருந்து தயாரிப் பாளர். சென்ன கேசவ பெருமாள் கோவிலை, சென்னமல்லீஸ்வரர் கோவிலொடு சேர்த்து திம்மண்ணன் நாராயணப்பையர் என்பவ ருக்கு தானமளித்தான்.
ஸர்வதாரி வருஷம் சாலிவாகன சகாப்தம் 1569 சித்திரை மாசம் 28ம் நாள் அன்று மெட்ராஸ் சென்னை கேசவ பெருமாள் கோவிலை தான பத்ரம் எழுதி நாராயணப்பய்யருக்கு அளித் தான். மெட்ராஸ் சென்னை ஆனது இந்த கோவிலால் தான் என்று சொல்கிறார்கள். ''சென்னபட்டணத்தில் நான் சென்னை கேசவ பெருமாள் கோவில் காட்டினேன். அதை மானியமாக நிலத்தோடு உனக்கு மாற்றி அளிக்கிறேன். இனி நீ புத்ர பௌத்ராதி உரிமையோடு சூரிய சந்திரர்கள் உள்ளவரை ஆண்டு அனுபவிக்கவும். இந்த தானத்தை எதிர்த்து தடுத்தவர்கள் கங்கைக்கரையில் காராம்பசுவை கொண்ட பாபத்தை அனுபவிப்பார்கள். மனப்பூர்வமாக பேரி திம்மண்ணன் ஆகிய நான் எழுதி கொடுத்த தான பத்ரம்'' இந்த சென்னைகேசவ பெருமாள் கோவில் அதற்கு முன் நாகபட்டன் வசம் இருந்தது . இதற்கு தாய் பாத்திரம் ரெண்டு வருஷம்முன்பு அதே கோவில் மானியத்தை நாகப்பட்டன் பேரி திம்மண் ணனுக் கு எழுதிக் கொடுத்தது. இந்த ஆலயம் இப்போது உயர்நீதி மன்றம் இருக்கும் இடத்தில் கட்டப்பட்டிருந்தது. அப்புறம் காணாமல் போனது.
GOPALAKRISHNA BHARATHIYAR
கோபாலக்ரிஷ்ண பாரதியார் - 2
தமிழ் தாத்தா உ.வே.சா.வின் தமிழ் ஆசான் திருச்சிரபுரம் (திருச்சி) மஹா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அக்காலத்தில் தலை சிறந்த தமிழாசிரியர். அறிஞர். கவிஞர். அவருக்கு கோபாலக்ரிஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம் பிடிக்கவில்லை.
என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு சிவபக்த நாயனாரின் மூலக் கதையை சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தில் வரும் திருநாளைப் போவார் நாயனார் சரிதத்தை '' நந்தனார் சரித்திரம்'' என்ற கற்பனைப் பாத்திர சரித்ரமாக்கி பாடி வருவது சரியில்லை எனறு மனதில் எண்ணம்.
இது தெரியாமல் ஒரு நாள் பாரதியார் பிள்ளைவாளிடம் தனது நந்தனார் சரித்திரத்திற்கு வாழ்த்துப் பாயிரம் பெறுவதற்கு பிள்ளையின் வீட்டைத் தேடி திருச்சி வந்தார். வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று பிள்ளைவாள் நினைத்தார்.
'' கோபாலக்ரிஷ்ண பாரதியாரே, நீங்கள் இதை முக்கியமாக சங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம்'' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.பிள்ளை அவர்கள், தமது மாணாக்கர் உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்களிடம் மேலே சொன்ன தனது மனசில் இருந்ததைச் சொன்னார். இதை உ.வே.சா. தனது என் சரிதத்தில் எழுதியுள்ளார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்த விஷயத்தைச் சொல்ல முடிகிறது.
கோபாலகிருஷ்ண பாரதி பிள்ளையை விடுவதாக இல்லை. ஒருநாள் மறுபடியும் திருச்சிக்கு பிள்ளைகளின் வீட்டுக்கு வந்தார்.
'' பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே பிரசித்தி அடையும். என் வாழ்த்துப் பாயிரம் அவசியமேயில்லை'' . பிள்ளை அவர்கள் இப்படிச்சொல்லி, பாரதியாரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.
பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு மீண்டும் ஒரு நாள் விடா முயற்சியோடு கொளுத்தும் வெயிலில் நடுமத்தியான வேளையில் பிள்ளை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் தான் இயற்றிய நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார்.
உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பாரதியின் பாடலில் உள்ள பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டு விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷணமாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய் விட்டாற் போலத் தோன்றிற்று. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்.
''வருகலாமோ? ''என்ற பாட்டுக்கு பாரதி வந்தார். ( யூ ட்யூபில் M M தண்டபாணி தேசிகர் பாடிய இந்த நந்தனார் திரைப்பட பாடல் இணைத்திருக்கிறேன். கேட்டுவிடுங்கள்.)
ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டு மில்லாமல் இதென்ன ''வருகல்'' ?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியா யிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.
ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டதாம்.
இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ? என்று நம்மிடமே கேட்பது போல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். ''வருகலாமோ''அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது.
MM தண்டபாணி தேசிகர் என்ற சங்கீத வித்துவான் நந்தனாராக நடித்து ஒரு கருப்பு வெளுப்பு படம் 1942ல் வெளிவந்தபோது எனக்கு 3 வயசு. ஜெமினிஸ்டுடியோ தயாரிப்பு. செருகளத்தூர் சாமா தான் வேதியர். படத்தில் பேச்சை விட பாட்டுகள் தான் அதிகம் அந்தக்காலத்தில். இன்றும் இந்த படத்தை யூ ட்யூபில் பார்க்க முடிகிறது.
அருமையான சில பாடல்கள் அந்த படத்தில் தேசிகர் பாடி இருக்கிறார். சில:
ஆனந்த நடமிடும் பாதன்
பிறவா வரம் தாரும் (இராகம்: லதாங்கி, ஆதி தாளம், தேசிகர்)
சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் (நாதநாமக்கிரியை, ரூபகம், தேசிகர்)
பாவிப்பறையன் இந்த ஊரில் வந்துமிவன் (தோடி, ஆதி, தேசிகர்)
எனக்குமிரங்கினான் எம்பிரான்(கேதாரகௌளை, மிச்ரம், தேசிகர்)
கனகசபையைக் கண்ட பிறகோர் காட்சியுமுண்டோ (காபி, ரூபகம், தேசிகர்)
எல்லோரும் வாருங்கள் சுகமிருக்குது பாருங்கள் (பிலகரி, ஆதி, தேசிகர்)
காக்க வேண்டும் கடவுளே (பந்துவராளி, ஆதி, தேசிகர்)
தில்லையம்பலத் தலமொன்றிருக்குதாம் (ராகமாலிகை-ரூபகம், தேசிகர்)
சிதம்பர தெரிசனமா (முகாரி-ஆதி, தேசிகர்)
காணவேண்டாமோ - இருகண் இருக்கும்போதே (ஸ்ரீரஞ்சனி-ஆதி, தேசிகர்)
ஜாதியிலும் கடையேன் மறையாகம நூல்கள் (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது (சங்கராபரணம்-ஆதி, தேசிகர்)
ஹரஹர ஜகதீசா அருள்புரி பரமேசா (சிந்துபைரவி, தேசிகர்)
என்னப்பனல்லவா எந்தாயுமல்லவா (வராளி, பஜனை, தேசிகர்)
ஐயே மெத்தக்கடினம் உமதடிமை (ராகமாலிகை-ஆதி, தேசிகர்)
வருகலாமோ ஐயா நாமங்கே (மாஞ்சி-மிச்ரம், தேசிகர்)
வீறாடுமுயலகன் முதுகில் ஒரு கால் வைத்த (ராகமாலிகை-விருத்தம், தேசிகர்)
இதில் வறுகலாமோ பாட்டுக்கான யூட்யூப் லிங்க் தருகிறேன். தேசிகர் ராக பாவத்துடன் பக்தி பொங்க பாடுவதை கேளுங்கள் . எச்சரிக்கை: இக்கால ஹீரோக்களை மனதில் கொண்டு படத்தை பார்க்கவேண்டாம்:
https://youtu.be/urcPeMDyxmo
GOPALAKRISHNA BHARATHI
Saturday, January 30, 2021
SURDAS
ஸூர் தாஸ் J K SIVAN
உணர்ச்சியின் உச்சத்தில் திளைத்திருக்கும் போது பேச்சு வராது என்பது நூற்றுக்கு ஆயிரம் மடங்கு வாஸ்தவமானது. புரிகிறது எனக்கு. வாய் பேச வரவில்லையே ? பேச மறந்து போய்விட்டேனா? பேச தெரிந்தும் வார்த்தைகளே அகப்படவில்லையா ? திடீரென்று ஊமையாகிவிட்டேனா ? மற்ற நேரத்தில் எல்லாம் பொட்டுக் கூடை பேச்சு பேசும் என் வாய் அந்த கறுப்புப் பயல் கிருஷ்ணனைப் பற்றி பேச நினைக்கும் போது மட்டும் ஏன் இப்படி மக்கர் செய்கிறது? நெஞ்சில் நிறைந்தது வாயில் வரவில்லையே? என்ன காரணமாக இருக்கும்? ஒருவேளை அவனது பெருமைகளை அருமைகளை, அதீத செயல்களை நினைத்தால் இந்த மாபெருங் கருணா சமுத்திரத்தை எந்த வாய்ச் சொற்களால் அளந்து சொல்லமுடியும் என்ற மலைப்பா? திகைப்பா? பிரமிப்பா?
சரி, அந்த பயல் சிறு குழந்தை தானே, சுலபத்தில் அவனை விஷ மூட்டி கொன்றுவிடலாம். அது ஒரு சுண்டைக் காய் வேலை என்ற திமிரோடு வந்த பூதகிக்கு , ''இந்தா எனக்கு பால் ஊட்ட வந்த ''தாயென வந்த பேயே, உனக்கு என் பரிசு என்று அவள் உயிரையே குடித்து விட்டு பொக்கை வாய் சிரிப்பைக் காட்டியதை எந்த வார்த்தைகளால் விவரிப்பேன்?
''அதிசயம்'' என்ற வார்த்தையை யார் கண்டுபிடித்தது? . இந்தா ஐயா உனக்கு ஒரு பிடி சர்க்கரை அதற்கு மேல் ஒரு வார்த்தை சொல்ல வழியில்லையே! பல காலம் கம்சனால் சிறையில் வாடிய உக்கிரசேனனை, கம்சனைக் கொன்று மதுராபுரியை மீட்டு, மீண்டும் ராஜாவாக் கினாயே, எப்படி?
கிருஷ்ணனாக, நீசொன்னதை, ராமனாக நீ செய்ததையாவது சொல்வோம் என்றால், ஒரு சின்ன சம்பவத்தை கூட சொல்ல முடியவில்லையே. உதாரணமாக தனது கணவர் ரிஷி கௌதமர் இட்ட சாபத்தில் பல வருஷங் கள் கல்லாக மாறி வாடிய அஹல்யாவை ஒரு நொடியில் உன் காலடியால் மீண்டும் உயிர்ப் பித்தாயே அவள் அப்போது கடல் மடையாக கொட்டிய வார்த்தைகளை வெறும் அர்த்தமற்ற, நாம் அடிக்கடி காரணமில்லாமல் நன்றி உணர்ச்சியே இல்லாமல் சொல்லும் ''தேங்க்ஸ்'' என்ற வார்த்தையால் சொன்னால் சரியா? முறையா? அடுக்குமா? நியாயமா?
விடாத மழையில் அந்த தொத்தல் குடிசை கூரைகள் காற்றில் பறந்து விழுந்த போது உடனே ஒரு கூரை வேய்ந்தாயே, அப்போது அந்த ஏழை பக்தர் நாமதேவர் வாய் பிளந்து ''பாண்டு ரங்கா ஆஆஆ'' என்று அடி வயிற்றிலிருந்து ஒலித்தாரே , அதன் பின் ஒளிந்து கொண்டி ருந்த நன்றி உணர்ச்சி களை எந்த வார்த்தை களால், எப்படி எழுத்தால் விவரிப்பேன் சொல் ?
மேலே சொன்னதெல்லாம் நான் எழுப்பும் கேள்விகள் அல்லவேஅல்ல, கண்ணில்லாத சூர்தாஸ் அருமையான ப்ரஜ்பாஸி எனும் பழைய வடமொழியில் எவ்வளவு அழகாக கேட்கிறார். அது எந்த மொழி வார்த்தை களாக இருந்தால் என்ன?
மனதில் நிரம்பி வழியும் என் பிரார்த்தனை களை புரிந்து ஏற்றுக் கொள் கிருஷ்ணா. என் வார்த்தைகள் என்னால் முடிந்தவரை தான் அதை சொல்ல முடிந்தது அவ்வளவுதான்'' என்கிறார் சூர்தாஸ் இந்த பாடலில். எனக்கு பிரிஜ்பாசி வடமொழிகள் எதுவும் தெரியாது. யாரோ ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததை வைத்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டு கிருஷணனை , என்னையே சூர்தாசாக நினைத்துக்கொண்டு மனதில் தோன்றியதை எழுதுகிறேன்.
The voice falters
when it sings of the deeds of the Lord
who's an ocean of mercy.
He gave guileful Putana, who posed as his mother, a
mother's reward!
He of whom the Vedas and the Upanishads sing as the Unmanifest,
let Yashoda bind him with a rope,
lamented Ugrasena's grief,
and after killing Kansa made him king
paying him obeisance, bowing low;
Freed the kings held captive by jarAsandha
at which the kingly hosts sang his praises;
removing Gautama's curse
he restored life to stone-turned Ahalya:'
all in a moment he rescued Braj's ruler from the sea-monster running to his
aid as a cow to her calf,"
he came hastening to rescue the king of the elephants;
he got Namadeva's hut thatched.
says Suradasa, O, make Hari hear my prayer
CHIRANJEEVI
திடீர்னு ஒரு ஸ்லோகம் நினைவுக்கு வந்தது. வாரா வாரம் சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டும்போது அம்மா தொடைகளில் ஏழு ஏழு எண்ணெய் சொட்டு புள்ளிகள் வைத்து சொல்லும் ஸ்லோகம் காதில் ஒலிக்கிறது.
சிரஞ்சீவி என்றால் என்ன. யாரோ தெலுங்கு நடிகர் போல இருக்கணுமா?
ஸமஸ்கிருதத்தில் चिर. chira , சிர என்றால் ரொம்ப நாள், பல்லாண்டு, எனப் பொருள்..ஆகவே சிரஞ்சீவி என்பது நிலையாக நீண்ட காலம் வாழ்வது. சாகாவரம் பெறுவது. அப்படி எல்லோரும் சாகாவரம்
விஷ்ணுவின் தசாவதாரத்தில் ஐந்தாவது அவதாரம் குள்ள வாமனன். மூன்றடி மண் கேட்டு மஹாபலி சக்ரவர்த்தியை (கொல்லாமல் ) பாதாளத்தில் அழுத்தியவன். மஹாபலி பிரகலாதனின் பேரன். ரொம்ப நல்லவன். நன்றாக நாட்டை ஆண்டவன். கேரளன் . ஓணம் பண்டிகை அன்று அவனுக்கு வருஷா வருஷம் வரவேற்பு. மஹாபலி ஒரு சிரஞ்சீவி.
VETRI VERKAI
ஆயிரமாயிரம் வருஷங்களாக தஞ்சாவூர் ஜில்லா எல்லையில் கடலோரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர் அதிராம்பட்டினம். அதில் ஒரு ராஜா இருந்தான். பெயர் அதிவீர ராம பாண்டியன். அவன் பெயரால் அது அதிவீரராம பட்டினம் என்று இருந்து சுருங்கி அதிராம்பட்டினமாகிவிட்டது. ராஜா பிரபலமான எழுத்தாளனாக இருக்கிறான். கொஞ்சம் பலான விஷயங்கள் பற்றியும் ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
Friday, January 29, 2021
NATARAJA PATHTHU
நடராஜ பத்து -- J K SIVAN
நண்பர்களே, இதுவரை பத்து பாடல்களில் எட்டு அனுபவித்தோம். முருகேச முதலியாரின் நடராஜ பத்து ஒரு புதையல் நமக்கு. குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். அவர்கள் வாழ்வு இன்பகரமாக அமையும். பக்தி ரொம்ப அவசியம்.
தனமலை குவித்தென்ன கனபெயர் எடுத்தென்ன
சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன
சித்து பல கற்றென்ன நித்தமும் விரதங்கள் செய்தென்ன,
ஓயாது மூழ்கினும் என்ன பலன்
இதுவெல்லாம் சந்தை உறவென்று தான் உன்னிரு பாதம் பிடித்தேன்.
யார் மீது உன் மனமிருந்தாலும் உன் கடைக்கண் பார்வை அது போதுமே
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.''
''பரமேஸ்வரா, பாதியுமை பாகா, நான் நன்றாக புரிந்து கொண்டு விட்டேன். ஞானம் வந்து விட்டது என்று கூட என்னால் மார் தட்டி சொல்லமுடியும். எப்படி என்கிறாயா?''
இந்த உலக வாழ்க்கையை ஒரு கணம் நன்றாக சிந்தித்தேன். என் மனதில் என்ன தோன்றியது தெரியுமா?
எனக்கு தாய் என்று ஒருவள், தந்தை என்று ஒருவன், கூடப்பிறந்ததுகள் சில, திருதராஷ்டிரன் மாதிரி நூறு பிள்ளைகள் , உற்றார் உறவினர், ஊருக்கே ராஜா, மலை மலையாக செல்வம் குவிந்து எங்கு பார்க்கினும் நிறைந்து -- இதெல்லாம் இருப்பதால் என்ன பயன் ?
எனக்கு முன்னே எத்தனை ராஜாதி ராஜன்கள், சக்ரவர்த்திகள் இந்த பூமியை ஆள்வதற்கு ரத்தம் சிந்தி சண்டை போட்டு ஜெயித்து ஆண்டார்களே, எங்கே அவர்கள்? எங்கே போனார்கள்?
எல்லாம் கற்றவன் என்று பெயர் பெற்றோ , என்னைச் சுற்றி அநேக எடுபிடிகள், சிஷ்ய கோடிகள் இருந்தோ என்ன பயன்?
உடலை வருத்தி, பல வருஷங்கள் முயன்று அலைந்து கற்ற பல சித்து வித்தைகள், பல நாட்கள் தூக்கமின்றி விழித்து கடைபிடித்த விரதங்கள்- இவற்றால் என்ன பயன்?
ஒன்றா இரண்டா, ஊரெல்லாம் சென்று எண்ணற்ற நதிகளில் மூழ்கி புண்ய ஸ்நானம் செய்தேனே -- அதாலாவது பயன் ஏதாவது உண்டா?
இதோ எமன் ஆளை அனுப்பி விட்டானே, ஓலை எனக்கு வந்து விட்டதே, நான் கிளம்ப வேண்டுமே, நான் போகாமல் தடுக்க மேலே சொன்ன ஏதாவது ஒன்று, அல்லது ஒரு ஜீவன், உதவுமா?
எங்கோ ஒரு ரேஷன் கடை கூட்டத்தில் உளுத்தம்பருப்பு, அதுவும் ஒரு கிலோவுக்காக, உபயோகமான நேரத்தை வீணடித்து கடைசியில் ''தீர்ந்து விட்டது. இன்று போய் நாளை வாராய்'' கேட்டு வந்தபோது அங்கே நான் கண்ட அனைத்து தலைகளில் ஏதாவது ஒன்று எனக்கு தெரிந்ததா, சொந்தமா, பந்தமா? அது போல் தான் எல்லாமே, ஒட்டாத உறவு, பந்தம், சொந்தம் , சொத்து, சுதந்திரம் எல்லாமே.
என் காதில் பட்டினத்தார் ஒலிக்கிறாரே நீங்களும் கேட்டு தெளிவு பெறுங்கள்:
''ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின் தாள் (ஒன்றே ) சதம் கச்சி ஏகம்பனே
உன்னருளால் உன் தாளை வேண்டி அடைய வேண்டியது மட்டும் தான் நான் செய்யவேண்டியது.
திருநீலகண்டா, சிதம்பரேசா , நீ என்னவேண்டுமானால் செய்து கொண்டிரு, யார் மீதோ, எதன் மீதோ உன் மனம் இருந்த போதிலும், தயவு செய்து உன் கடைவிழிப் பார்வையை மட்டுமாவது என் மீது வையேன். நான் தான் கெட்டியாக 'சிக்' கென உன்னிரு பொற்பாதங்களை பிடித்துக் கொண்டிருக்கிறேனே. வேறொன்றும் உதவாது எனக்கு. உன் கடைக்கண் பார்வை ஒன்றே போதுமே...
geethanjali
கீதாஞ்சலி - தாகூர் - J K SIVAN
12 ''இங்கே இருக்கிறேன். எங்கோ தேடுகிறாயே ?''
12. The time that my journey takes is long and the way of it long.
I came out on the chariot of the first gleam of light, and pursued my voyage
through the wildernesses of worlds leaving my track on many a star and planet.
It is the most distant course that comes nearest to thyself,
and that training is the most intricate which leads to the utter simplicity of a tune.
and one has to wander through all the outer worlds to reach the innermost shrine at the end.
My eyes strayed far and wide before I shut them and said `Here art thou!'
The question and the cry `Oh, where?' melt into tears of a thousand streams and
ரவீந்திரநாத் தாகூரின் அற்புதமான கீதாஞ்சலி பாடல்களில் இது ஒன்று. அடிக்கடி படித்து ரசிப்பேன்.
''நான் ஒரு வழிப்போக்கன். தோளிலும் தலையிலும் மூட்டையை மாற்றி மாற்றி சுமந்துகொண்டு பயணிக்கிறேன். என் எதிரே வெகு நீண்ட பாதை, வளைந்து வளைந்து முடிவில்லா மல் எங்கோ செல்கிறது. அதை அடையும் நேரமோ கணக்கில் வராத அளவு நீண்டது. கடிகார முள் பன்னிரெண்டை பல முறை சுற்றவேண்டி இருக்கும். நான் போய் சேரும் இடமும் வெகு வெகு வெகு தூரம். நான் விண்வெளியில் என் தேரில் ஜம்மென்று உட்கார்ந்துகொண்டு செல்கிறேன்.
பொழுது விடிந்து சூரியனின் பொன் கிரணங்கள் இருளை நீக்கி, என்னை வழி செலுத்துகிறது. நான் சந்தித்த முதல் சூரிய கிரணமே நான் பயணிக்க துவங்கிய தேர். என்னை நீண்ட பயணத்தில் செலுத்தும் தேர்.என் பாதையில் என்னை சுற்றிலும் என்னென்னவோ உலகங்கள், விண்வெளி மண்டலங்கள், நக்ஷத்திரங்கள், கிரஹங்கள், எங்கும் நிசப்தம். குளிர்காற்று, இதமாக இளம் சூரியன் உதயமாவதை அறிவிக்கும் சிவந்த கீழ்வானம். உலகமெனும் காடும் மேடும் என் வழியில் இருந்தால் தான் என்ன?
நக்ஷத்திரங்கள் சந்திரன் காட்டும் ஒளியில் நிழல் ஏது? பயணம் தொடர்கிறேன்.
கிருஷ்ணா, இந்த நீண்ட பாதையில் என் தொலை தூர பயணம் வெகு தூரம் என்னை இட்டு சென்றாலும் உன்னருகே தான் கடைசியில் கொண்டு சேர்க்கும். இந்த என் பிரயாண பயிற்சி கடினமானது, உன்னை நெருங்க நெருங்க உன் குழலோசை கொஞ்சம் கொஞ்சமாக என் செவியில் இன்பமாக பெருகுகிறதே. கடைசியில் உன் எளிய இனிய புல்லாங்குழல் ஒலி உன்னை அடையாளம் காட்டுமே..மனதில் நம்பிக்கை ஊட்டும் .
இது உன்னை நோக்கி செல்லும் நீண்ட பாதை என்றாலும் கிட்டத்தில் உன்னருகில் கொண்டு செல்லும். அனால் அதற்கு முன்பு எத்தனையோ இடையூறுகள் இருக்கத்தானே செய்யும். அவற்றை கடந்து தான் செல்ல வேண்டும். பணிவும், பொறுமையும், விடா முயற்சியும் தேவைதான்.
உன்னைத் தேடிவர நான் பல பேரிடம் யோசனை அறிவுரை, உபதேசம் கேட்டவன். வழி கேட்டவன். எங்கெங்கோ சுற்றி அலைந்து எத்தனையோ கதவுகளை தட்டி வழி கேட்ட பின்னால் தானே நான் செல்லவேண்டிய இடம் தெரியவரும். என் கண்கள் உன்னை எங்கெங்கோ தேடின. காணவில்லை. தேடிக் கொண்டே தான் இருந்தேன். கடைசியில் கண்மூடி இங்கு தான் இருப்பாய் என்று அறிந்தேன், ஆமாம் கண்ணா, என்னுள் நீ என்றும் இருக்கிறாய் என மெதுவாக உணர்ந்தேன். வெளி உலகெங்கும் எதையெல் லாமோ தேடி அலைந்து தான் உள் உலகில் நீ இருப்பது புரிகிறது. அது தெரியும் வரை ''கிருஷ்ணா, நீ எங்கே எங்கே'' என்று உரக்க கத்தினேன், அழுதேன். என் கண்ணீர் பல நதிகளாகி, ப்ரவாஹமாக பெருகி, ஒரு ப்ரளயமாக மாறி ''இதோ இங்கேயே இருக்கி றேனே. பார்க்க மாட்டேன் என்கிறாயே ...'' என்ற உன் நம்பிக்கை தரும் குரல் எல்லோரும் கேட்க, காற்றாக, புயலாக, கடலலையாக, விண்ணின் மின்னலாக, இடியாக, ப்ரளயமாக, சுனாமியாக, எண்ணற்ற தாரகைகளாக, தேவதைகளாக, கிருஷ்ணா, நீ எனக்கு உறுதியளித்ததில் என்னை மறந்தேன்.
PESUM DEIVAM
பேசும் தெய்வம் - J K SIVAN
தென்னிந்தியாவுக்கு 1927 பிற்பகுதியில் காந்தி வந்தார். யாரோ சொல்லி கேள்விப்பட்டு வெகு ஆர்வமுடன் '' இந்த பிரதேசத்தில் காஞ்சிபுரம் மட சங்கராச்சர்யார் வந்திருக்கிறார் என்கிறார்களே, அவரை நான்
காந்திஜி பாலக் காட்டில் நெல்லிச்செரி சென்றநாள் 15.10.1927.
''இங்கே காஞ்சி பரமாச்சார்யர் எங்கே தங்கியிருக்கிறார்?''
''பாபுஜி அவர் அதோ அந்த மாட்டுத் தொழுவத்தில் தான் வாசம் பண்ணுகிறார்''
''மாட்டுத் தொழுவத்திலா? ஜகத் குருவா?''
''அவர் எங்கும் இது போன்ற இடத்தில் தான் தங்குகிற சந்நியாசி''
பரமாசார்யருக்கோ, இந்த நாடு செய்த புண்யத்தால் தோன்றி, வெகு எளிமையின் சின்னமாக, சத்ய ஸ்வரூ பமாக நாட்டின் சுதந்திர விழிப்பின் தலைவன், இந்த மாபெரும் தேசத்தில் ஒரு ஏழை விவசாயியின் கோலத்தைக் கொண்டவரைச் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
மகாத்மாவுக்கோ தெய்வீகத்தின், தெய்வத்தின், வேதகால உருவாக காட்சியளிக்கும் ஒரு பரமாச்சார்யரை சந்தித்ததில் ஆனந்தம்.
''தாங்கள் அமர வேண்டும்'' என்றார் மஹா பெரியவா ஆங்கிலத்தில்.
தனது மதிப்பையும் மரியாதையும் வணக்கத்தையும் காந்திஜி ஆச்சர்யருக்கு தலை குனிந்து மனப்பூர்வமாக அளித்தார். அவரும் பெற்றுக்கொண்டார். அவர் அருகிலேயே காந்திஜி தரையில் அமர்ந்தார். சுற்றியிருந்தோர் அமைதியாக தூரத்தில் வெளியில் நின்றுகொண்டு இந்த அற்புதத்தை கண்ணாரக் கண்டு ஆனந்தித்தனர்.
நிசப்தத்தில் பரிபூர்ண அமைதியில் இரு உயர்ந்த உள்ளங்கள் கலந்தன. ஒன்றின. சில நிமிஷ ஆன்ம விசாரத்திற்குப் பிறகு, சம்பாஷணை துவங்கியது.
''ஸம்ஸ்க்ரிதத்திலேயே பேசுவோமா?'' என்றார் மஹா பெரியவா .
''நீங்கள் ஸம்ஸ்க்ரிதத்திலேயே பேசுங்கள். நான் புரிந்துகொள்ள முடியும். நான் ஹிந்தியில் பதில் சொல்கிறேனே.'' என்றார் தேச பிதா.
''ஆஹா, அப்படியே பேசுவோமே. எனக்கும் அந்த பாஷையில் நீங்கள் பேசுவது புரிந்து கொள்ள முடியும்.''
மூன்றாம் மனிதர் ஒருவர் இல்லாமல் இரு மனித ரூப தெய்வங்களும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சம்பாஷித்தனர். இன்று வரை என்ன பேசினார்கள் இருவரும் என்று ஒருவருக்கும் தெரியாது.
காந்திஜியோடு உடன் வந்திருந்த ராஜாஜி வெளியே மற்றவர்களோடு சேர்ந்து நின்று கொண்டிருந்தார். மாலை நேரம் 6 மணியாகப் போகிறது. காந்திஜி இரவு உணவு அருந்தும் நேரம் அது. 6 மணிக்குப் பின் அவர் எந்த உணவும் அருந்த மாட்டாரே. ராஜாஜிக்கு கவலை. 6 மணிக்கு சில நிமிஷங்கள் முன்பு மாட்டுத் தொழுவத்திற்குள் நுழைந்தார். இருவரையும் வணங்கிவிட்டு
''பாபுஜி நீங்கள் உணவு அருந்தும் நேரம்'' என்று நினைவூட்டினார்.
கைகளை உயர்த்தி, ''நிறுத்து'' என்ற சைகையில் காந்திஜி ராஜாஜியிடம் ''இந்த மகானோடு நான் அனுபவித்த சம்பாஷணையே எனது இன்றைய உணவு. உள்ளம் வயிறு இரண்டும் நிரம்பியிருக்கிறதே'' என்றார்,.
''சுவாமிஜி நான் விடைபெறுகிறேன் நன்றி''
''எனக்கும் ரொம்ப சந்தோஷம். இந்தாருங்கள்'' . ஒரு பொன்னிற ஆரஞ்சு பழத்தை நீட்டினார் மஹா பெரியவா..
''எனக்கு ஆரஞ்சு ரொம்ப பிடிக்கும். மீண்டும் நன்றி'' என்று புன்னகையோடு பெற்றுக்கொண்டு சென்றார் காந்திஜி.
அன்று கோயம்பத்தூரில் ஒரு கூட்டம். காந்திஜி-மஹா பெரியவா என்ன பேசினார்கள் என்று நிறைய பேர் ஆவலாக கேட்டதற்கு தேச பிதா கூட்டத்தில் சொன்னது: '' இது உண்மையிலேயே எனக்கு ஆன்ம திருப்தி அளித்த ஒரு சந்திப்பு. எனது எத்தனையோ கேள்விகளுக்கு ஜகத் குருவிடமிருந்து விடை கிடைத்தது''
பல வருஷங்களுக்கு அப்புறம், 1968ல் நவம்பர் மாதம் ஒரு விழாவில் மஹா பெரியவாளிடம் சிலர் நீங்கள் மகாத்மாவோடு கேரளாவில் நெல்லிச்சேரியில் சந்தித்து பேசியது பற்றி சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
+++
About Me - YOUR FRIEND
GHANTASALA SONG
கண்டசாலா விருந்து ஒன்று. #நங்கநல்லூர்_J_K_SIVAN ''தண்ணொளி வெண்ணிலவோ'' என்ற அருமையான கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...
-
அங்க சாஸ்திரம் - சாமுத்திரிகா லக்ஷணம் J.K. SIVAN நமது உடல் ஒரு அற்புத அதிசய சுரங்...
-
நீங்கள் என்ன கோத்ரம்? நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு வார்த்தையை சரியாக புரிந்து கொள்வதில்லை. சடங்குகளில், ஆல...