திருவையாறு ஸப்தஸ்தானம் J K SIVAN
4. ப்ரம்ம சிரக் கண்டியூர்
திருவையாறு ஸப்தஸ்தான க்ஷேத்ரங்களில் இதுவரை திருவையாறு, திருமழபாடி, திருச்சோற்றுத்துறை பற்றி அறிந்தோம். இன்று இன்னொரு ஸப்தஸ்தான க்ஷேத்ரமாகிய திருக்கண்டியூர் பற்றி அறிவோம்.வெகு பிரசித்தமான சிவன் இந்த ஊர் ஆலயத்தில் இருக்கிறார். அவர் பெயர் பிரமசிரக்கண்டீசுவரர். சம்பந்தர், அப்பர் தரிசனம் செயது பாடல்கள் பெற்ற ஸ்தலம். கண்டியூர் அஷ்ட வீரட்டான ஸ்தலங்களிலும் ஒன்று.
இந்த அற்புத க்ஷேத்ரத்திற்கு பலமுறை சென்ற பாக்யம் எனக்குண்டு. தஞ்சாவூர் திருவையாறு வட்டத்தில் காவேரி நதி தென்கரை சிவ ஸ்தலங் களில் 12வது ஆலயம். தஞ்சையிலிருந்து 9-கி. மீ. , திருவையாற்றிலிருந்து 3-கி. மீ. நிறைய பஸ் ஓடுகிறது.
ஆயிரம் வருஷங்களுக்கு முந்தைய ஆலயம். ஐந்து நிலை ராஜகோபுரம். கொடி மரம், நந்தி, பலி பீடம். தண்டபாணிக்கு தனி சந்நிதி. சிவன் இங்கே ஸ்வயம்பு. உயரமான பாணம் கொண்டவர். தெற்கு பார்த்த அம்பாள். பெயர் மங்களநாயகி. முருகன் கையில் ஜபமாலையோடு ஞானஸ் கந்தனாக அருள் பாலிக்கிறார். ரொம்ப அற்புதமான விக்ரஹம்.
சிவ பெருமான் பிரமனின் ஐந்து சிரங்கள் இருந்தது. ஒன்றைத் தனது சூலத்தால் இங்கே சிவன் கண்டனம் செய்ததால் சிரக் கண்டியூர் எனப் பெயர். வில்வமரம் கயிலையிலிருந்து இங்கே கொண்டு வரப்பட்டதால் 'ஆதி வில்வா ரண்யம் ' என்றும் பெயர்.பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலம். சூரியன் வழிபட்ட சிவன்
. மாசிமாதம் 13, 14, 15-ஆம் நாள்களில் மாலையில் 5 . 45 மணிமுதல் 6 . 10 மணிவரை சூரிய ஒளி சுவாமிமீது படுகிறது.
நவக்கிரக சந்நிதியில் சூரியன் இரு மனைவி யருடன் காட்சித் தருகிறார்.பிரமனுக்கு தனிக் கோயில் உள்ளது.
''வினவினேன்அறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே
அடியராயினீர் சொல்லுமின்னறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாயிவ்வைய முழுதுமாயழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.. - சம்பந்தர்
வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்
தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்
ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த
கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே
முடியின்முற் றாததொன் றில்லையெல் லாமுடன் தானுடையான்
கொடியுமுற் றவ்விடை யேறியோர் கூற்றொரு பாலுடையான்
கடியமுற் றவ்வினை நோய்களை வான்கண்டி யூரிருந்தான்
அடியுமுற் றார்தொண்டர் இல்லை கண் டீரண்ட வானவரே..- அப்பர்
திருக்கண்டியூரில் ஹர சாப விமோசன பெருமாள் கோயிலும் அருகிலேயே இருக்கிறது. 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. மூலவர் பெயர் ஹர சாப விமோசனர். தாயார் பெயர் கமலவல்லி. ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் கூடிய இக்கோயில், கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. விஜய நகர ராஜாக்கள், மதுரை நாயக்கர் வம்சம் திருப்பணி செய்தது. .
''பிண்டி ஆர் மண்டை ஏந்தி பிறர் மனை திரிதந்து உண்ணும்
முண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே - --ஆழ்வார் திரு குறுந்தாண்டகத்தில் பாடிய பாசுரம்.
பிரம்மனின் ஐந்து தலைகளுள் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் போக ஹரன் திருக்கண்டியூரில் உள்ள கமல தீர்த்தத்தில் நீராடி, திருக்கண்டியூர் பெருமாளை தரிசனம் செய்தார். இதனால் ஹரனுக்குப் பிரம்மஹத்தி சாப விமோசனம் பெற்றதால், பெருமாள் இங்கே ஹர சாப விமோசனப் பெருமாள்
No comments:
Post a Comment