சேத்து பட்டு செட்டியார்..J K SIVAN
''எழும்பூர் போவதற்கு முன்னாள் ஒரு மின்சார ரயில் ஸ்டேஷன் இருக்கிறதே அதன் பெயர் சேத்துப்பட்டு என்று தெரியுமா?''
''ஓஹோ தெரியுமே '''' அதன் பின் ஒரு பெரிய செட்டியார் இருக்கிறாரே அவரைத் தெரியுமா?'
'''தெரியாதே'''
'அப்போது அவரைத் தெரிந்து கொள்வோம்'
'''தட்டிக்கொண்ட நம்பெருமாள் செட்டி'' அவர் பெயர். 1880-1920 வரை பெரிய வெள்ளைக்காரன் கால பில்டிங் கன்ட்ராக்டர். சிவப்பு கல்லில் கட்டிய எழில் மிகுந்த சென்னை மியூசியம், ஆர்ட் காலரி எல்லாம் நாம் இப்போது வியந்து பார்க்கிறோமே அதெல்லாம் கட்டியவர் ''
சேத்துப்பட்டில் நிறைய பெரிய வீடுகள் அதில் 99 அவருடையது சேத்துப்பட்டு முழுக்க. ஆகவே அந்த இடத்துக்கு செட்டிப்பேட்டை என்று பெயர். அது தான் சேத்து பட்டாகி விட்டது.
சென்னையில் மோட்டார் கார் சொந்தமாக வாங்கிய முதல் இந்தியன் நம்பெருமாள் செட்டியார். கணித மேதை ராமானுஜத்தை சொந்த மகனாக வளர்த்தவர்.
நம்பெருமாள் செட்டி கட்டிய மற்ற பெரிய கட்டிடங்கள்; சென்னை மியூசியம் ஆர்ட் கேலரி தவிர சென்னை உயர்நீதிமன்றம், சட்டக் கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, அருங்காட்சியகம், கன்னிமாரா நூலகம் போன்றவை.
இன்றைய கவர்மெண்ட் மியூசியம் ஆர்ட் காலரி தான் ''கிரயண்ட்'' CRYANT என்ற நம்பெரு மாள் வீடு. மூன்றடுக்கு, முப்பது முப்பைத்தந்து பெரிய அறைகள் கொண்ட பங்களா.
கணித மேதை ராமானுஜத்தை பிள்ளை போல் வளர்த்து இந்த காசநோயோடு இங்கிலாந் திலிருந்து திரும்பிய ராமானுஜத்தை இந்த பங்களாவில் தங்க வைத்து சிறப்பு வைத்தியங் களுக்கு ஏற்பாடு செய்தார். பின்னர் ராமானுஜத் தின் வசதிக்காக க்ரையண்டிற்கு எதிரில் இருந்த கோமேத்ரா என்ற தன்னுடைய இன்னொரு வீட்டில் தங்க வைத்தார்.
சிறிது காலத்திலேயே ராமானுஜம் காலமானார்.. ராமானுஜத்தின் இறுதி சடங்குகளை முன்னின்று நடத்தியவர்.
பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் ஒரு தனி செங்கல் சூளையை இதற்கென்றே வைத்திருந்தவர். சேத்துப்பட்டு பகுதியில் செட்டியாருக்கு 2000 கிரவுண்டு நிலம்.
செட்டியார் கட்டிய பிற கட்டிடங்கள்: சென்னை யில் உள்ள உயர்நீதி மன்றக் கட்டடம், விக்டோரியா பொது மண்டபம், விக்டோரியா நினைவுக் கட்டடம், கன்னிமரா நூலகம், சென்னை அருங்காட்சியகம், மதராஸ் வங்கி, ஒய். எம். சி. ஏ. கட்டடம் போன்ற பல கட்டடங்களைக் கட்டினார். சென்னையில் பல சிவப்பு நிறக் கட்டங்கள் இவரால் உருவாக்கப்பட்டன. பர்மா இரங்கூனிலிருந்து தேக்கு மரங்களை இறக்குமதி செய்தும் அவற்றை இலங்கை, இங்கிலாந்து, ஜெர்மனி , தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் வந்தார். திருச்சூர் டிம்பர் அண்ட் சா மில்ஸ் என்ற குழுமத்தின் நிர் வாக இயக்குனராக இருந்தார்.
சிறிய டிராம் வண்டி செல்லக்கூடிய இருப்புப் பாதையைச் சொந்தமாக வைத்திருந்தார். மேலும் டிராம் வண்டியையும் வைத்திருந்தார். முதல் ரயில் சொந்தமாக வைத்திருந்த செட்டியார் இவர் ஒருவரே.
வெள்ளைக்காரன் அரசாங்கம் நம்பெருமாள் செட்டியாருக்கு ராவ் சாகிப் பட்டம், ராவ் பகதூர் பட்டம் மற்றும் திவான் பகதூர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.
No comments:
Post a Comment