Saturday, January 9, 2021

 

 சமத்து சுப்புணி  -  J  K  SIVAN 

''தாத்தா  எனக்கு   ஒரு கதை  சொல்லுங்க''

''என்ன  கதை வேணும்?''

''நீங்க  நீதி கதை,  புராண கதை,  சாமி கதை எல்லாம் சொல்லுவீங்களே,   அதுலே ஏதாவது ஒண்ணு'' 

தாத்தா  கொஞ்சம்  வெந்நீர்  பிளாஸ்கிலிருந்து எடுத்து  குடித்துவிட்டு   தொண்டையைக்  கனைத்துக்கொண்டார்.  கதை வந்தது.

இது  சுப்புணிக்கிறவனைப் பத்தி ஒரு கதை.  ரொம்ப கெட்டிக்கார சுட்டிப் பையன். இந்தகாலத்து குழந்தைகளை பற்றி சொல்லவே வேண்டாம்.  ரெண்டுவயசு நிரம்பலே. என் ஒன்பதாவது பேத்திக்கு கம்ப்யூட்டர்  பாஸ்  வேர்டு  PASSWORD,  MOUSE ஆபரேஷன் கூகிள்  ரைம்ஸ்  RHYMES   வீடியோ   ON   அண்ட்   OFF   எல்லாம்   பண்ண தெரியும்.  இன்னும்  சரியா பேச்சு வரதுக்குள்ளேயே   இவ்வளவு சாமர்த்தியமா??
                                                               
''ஏழு  வயசு சுப்புணி,  அம்மாவோடு ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று ஒரு இனிப்புகடையில் ஜாடிகளில்  நிரப்பி வைத்திருந்த  கலர்  கலரான  சாக்லேட், மிட்டாய்கள், எல்லாம்  ஆர்வமாக  பார்த்துக்கொண்டே இருந்தான். அம்மா ஏதோ சாமான் வாங்கி கொண்டிருந்தாள். கடைக்காரர்
சுப்புணியை  கவனித்துக்கொண்டிருந்தவருக்கு  அவனைப் பிடித்து விட்டது.
அம்மா  நிறைய  ரூபாய்களுக்கு சாமான் வாங்கியதில் அவருக்கு அதிக லாபம் என்கிற  சந்தோஷம் வேறே. 

சுப்புணி   ஆள் அழகாக இருப்பான்.  அவனை ரொம்ப பிடித்துப் போய்  கடைக்காரர்  " டே , குட்டி பயலே ! இந்தா  உனக்கு கை நிறைய  சாக்லேட் எடுத்துக்கோ'' என்று ஒரு கண்ணாடி ஜாடியை நீட்டினார். அந்த சாக்லேட் ஜாடியைத்தான்  ரொம்ப நேரமாக சுப்புணி பார்த்துக் கொண்டிருந்தான்.

சுப்புணி அதற்குள் இருக்கும் சாகலேட்களை எட்டி பார்த்துவிட்டு தலையை ''வேண்டாம் ''என்று ஆட்டினான்.  கடைக்காரர் எவ்வளவு சொல்லியும் அவன் கேளாததால் அவன் அம்மா குறுக்கிட்டாள் 

"டே செல்லம்அவர் அவ்வளவு சொல்லியும் மாட்டேன் என்று சொல்லிவிட்டாய். நான்  சொல்லாமல் நீ  யாரிடமும் எதுவும்  வாங்கி கொள்ளமாட்டாய் என்று எனக்கு தெரியும்.   இப்போ   அம்மா,  நான்சொல்கிறேன்   கடைக்காரர்  சொன்னபடி   உனக்கு  வேண்டிய  சாக்லேட்  நீயே  உன் கை நிறைய எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கோ" என்றாள்.

சுப்புணி  கடைக்காரரை பார்த்தான்.  ஆஜானுபாகுவாக  பெரிய ஆசாமி.  மெதுவாக அவர் அருகே சென்றான்.

''வெரி குட் பாய். நீயே  உனக்கு வேண்டுமளவு  இந்த ஜாடியில் இருக்கும்  சாக்லேட் எடுத்துக் கோப்பா''

" சரி,  அங்கிள் நீங்களே உங்கள் கை யாலே  நிறைய  எடுத்து கொடுத்தால் வாங்கிக்கறேன்" என்றான் சுப்புணி.

கடைக்காரருக்கு  ரொம்ப  சந்தோஷம்.

'' ஆஹா  எவ்வளவு  நல்ல பையன். குட் மேன்னர்ஸ்   GOOD MANNERS.  அம்மா உங்கள்  குழந்தையை வெகு  நன்றாக வளர்த்திருக்கிறீர்கள். மற்றவர்பொருளை அவர்கள் கொடுத்தால் மட்டுமே வாங்கிக்கொள்ளும் பழக்கம். பிரமாதம். இதோ நானே என்  கை நிறைய தருகிறேன்''  என்று அவர் தன்னுடைய கை நிறைய சாக்லேட் எடுத்து சுப்புணியிடம் நீட்டினார். "

இரு கை  கொள்ளாமல்  ஒரு பை  நிறைய இருந்தது.  

''தேங்க் யு  அங்கிள் ''

தாயும்  மகனும்  வீட்டுக்குப் போகும் வழியில்  அம்மா   சுப்புணியை கேட்டாள் 

''ஏண்டா  உன்னை  எடுத்துக்கோ  என்று சொன்னபோது  வேண்டாம் என்று தலையாட்டி விட்டு அவரை   நீங்களே  எடுத்துக்கொடுங்கோ'' என்று கேட்டாய். அதற்குள் ஏன் புத்தி மாறிவிட்டது?  முதலில் பயமா?
சுப்புணியின் பதில் என்ன........
உடனே  பதிலை பார்க்கவேண்டும். என்னவாக இருக்கும் என்று யோசித்து விட்டு  கீழே பார்க்கவும்.
+
+
+
+
+
+
+
+
+
+












"பின்னே  என்னம்மா?   
என் கை சின்னது. கொஞ்சமாக தான் சாக்லேட் வரும். அவர்  குண்டு.    பெரிய ஆளு.   கை பெரிசு. அவர்  கை  நிறைய  கொடுத்தா  அதிகம்  கிடைக்

குமே ! 

ஒரு நீதி கூட உதயமாகிறது இதிலிருந்து:

நாமாக எதையாவது தேடி அடைவதை காட்டிலும் பெரிய  ஆளான  ''பெருமாள்''  நமக்கு அருள்வது அதிகமாக தான்  இருக்கும் அல்லவா!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...