Sunday, January 24, 2021

LAME PUP


    

          '' நாங்க நல்ல ஜோடி தானுங்க '' J.K. SIVAN

கிருஷ்ணாபுரம் எனும் சின்ன கிராமத்தில்  விவசாயி கோவர்தனன் பண்ணையில்  ஆடு மாடு  கோழி  
காவலுக்கு சில நல்ல ஜாதி நாய்களை வளர்த்ததால்  அவை குட்டி போட்டு நாய்கள்  எண்ணிக்கை வளர்ந்தது. அடடே  இத்தனை நாய்களை வைத்துக்கொண்டு  என்ன செய்வது?  கவலையில் கோவர்தனன்  தலையை சொரிந்து கொண்டிருந்தபோதே  இன்னொரு நாய் 6 குட்டிகளைப் போட்டுவிட்டது. இரவும் பகலும்  வாள் வாள்  சத்தம், குறுக்கும் நெடுக்குமாக  நாய்கள் நடமாட்டம்.   சுலோச்சனாவுக்கு கோபமும் ஆத்திரமும் பொங்க  கணவன் கோவர்தனனை சாடினாள். அவள் புடவை நுனியை  ஒரு நாய்குட்டி கடித்து துண்டாக்கிவிட்டதே.

" இனிம  ஒரு  நிமிஷம் கூட பொறுக்கமாட்டேன். உன் தொல்லையும்   உன் நாய்கள் தொல்லையும்  இந்த வீட்டிலே தாங்க முடியவில்லை. இன்னிக்கே   ஒண்ணு  நாய்கள்  எல்லாம் வெளியே போக வேண்டும். இல்லையென்றால் நீ  போகணும் "
''நீயா நாயா?'' ப்ராப்ளத்தில் மாட்டிக்கொண்ட கோவர்தனன்  சுலோச்சனாவிடமிருந்து  தான் தப்ப முடியாது என்பதால்  நாய்களை வெளியேற்ற முடிவெடுத்தான்..

மறுநாள் காலை அவன் பண்ணை வாசலில் ஒரு விளம்பரம் தொங்கியது. "நல்ல ஜாதி நாய்குட்டிகள் வேண்டுமா? விலை ஐம்பது ரூபாய் மட்டுமே" . அண்டை அயலில் இருந்து அநேகம் பேர் வந்து குட்டிகளை
பார்த்து செலக்ட் பண்ணி விற்றாகி விட்டது. ஒன்றிரண்டு நாய்கள் மட்டுமே மீதி இருந்தது.

அன்றுமாலை ஒரு சிறு பையன் வந்தான்
'ஏ பையா எதற்கு இங்கு நிற்கிறாய். என்ன வேண்டும்?''
''எனக்கு ஒரு நாய்குட்டி வேண்டும்?''
கோவர்தன் பையனை ஏற இறங்க பார்த்து ''ஐம்பது ரூபாய் வச்சிருக்கியா தம்பி?'' என்றான்.
''அம்பது ரூபாயா.... இருக்கா   பார்க்கிறேன்''
அந்த ஒன்பது வயது சிறுவன் தன்னிடமிருந்த சில்லறை காசுகளை எல்லாம் சேர்த்து எண்ணி ''முப்பத்தி ரெண்டு ரூபாய் தான் தேறும்'' என்றான்.  கண்களில் ஏமாற்றம். 

சிறுவனின் ஆசையை புறக்கணிக்க மனமில்லாமல் கோவர்தன் ''வந்த விலைக்கு ஒரு குட்டியை தள்ளி விடலாம்'' என நினைத்து

'' சரி பையா, இப்போ  நாய் குட்டிகளை கூப்பிடறேன். எந்த குட்டி வேணுமோ  ஒண்ணை  எடுத்துக்கோ''

கோவர்த விசில் அடிக்க  எங்கிருந்தோ  ஒரு தாய் நாய், சில குட்டிகள் புடை சூழ ஓடிவந்தது. இரண்டு குட்டிகள் வேகமாக ஓடி வர ஒரு குட்டி விழுந்து புரண்டு மெதுவாக பின்னால் வந்தது.

'' இதில் எது வேண்டும்? இரண்டு குட்டிகளை கோவர்தன் காட்டிய போது பையனின் கவனம் பூரா பின்னால் லேட்டாக ஓடிவந்த மூன்றாவது நாய் குட்டி மேலேயே இருந்தது.
 ''அது தான் வேண்டும்''.
"டே பையா, அந்த குட்டிக்கு ஒரு கால் ஊனம். வேகமாக ஓடி உன்னோடு விளையாட முடியாது. எனவே இந்த இரண்டிலே ஒன்றை எடுத்துக்கோ."
பையன், முப்பது ரூபாய் எடுத்து கொடுத்தான்.
''குறைச்ச பணம்  இருப்பதால் ஏன்  நொண்டி நாய்க்குட்டியை கேகேக்கறே.? நான் தான் எது வேணுமானாலும் தரேன் என்றேனே . வேறே நல்ல குட்டி எடுத்துக்கோ?''

" எனக்கு வேகமாக   ஓடற  நாய்குட்டி  வேணாம்.  என்னாலே ஓடமுடியாதே.  இது தான் எனக்கு சரி. ''
 பையன் தனது இடது காலை  பேண்ட்  தூக்கி  காட்டியபோது முட்டிக்கு கீழே ஒரு மரத்தில் செய்த கால் வெளியே தெரிந்தது.

நீதி: ஊனம் உடலில் இல்லை.மனத்திலே தான் உள்ளது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...