Monday, January 11, 2021



 

திருவையாறு ஸப்தஸ்தானம்  J K SIVAN

      நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம்.              

சிவனின் வாகனமாகிய   நந்திகேஸ்வரனுக் கும்  (திரு நந்தி தேவர்) சுயம்ப்ரபாவுக்கும்   பிரம் மாண்டமான கோலாகலமான   கல்யாண  உத்ஸவம் நடந்தது என்று  சொன்னேனே  அது எங்கு என்று நினைவிருக்கிறதா?  திருமழபாடியில்.  ஜப்பேசர்  என்று ஒரு பெயரும்  நந்திக்கு உண்டு.

அது பங்குனி மாத பூச நட்சத்திர நாளில்  வருஷா வருஷம்  கொண்டாடப்படுகிறது.  முன்பளவு கும்பல் கிடையாது என்பது வாஸ்தவம்.  உள்ளூர்க்காரர்களுக்கே  பங்கேற்க  நேரமில்லை போலிருக்கிறது.      என்றாலும்  பல ஊர்களி லிருந்து  சிவபக்தர்கள் இன்னும் வருகிறார்கள். என்றும் வருவார்கள்.

திருமழபாடியில்  சிவன் பெயர்  வைத்தியநாதன்.  வைத்தியன்  என்றால்  மருத்துவன். நோய் தீர்ப்பவன்.  பசி தான்  கொடிய நோய். அதை தீர்ப்பவனை  ''பசிப்பிணி மருத்துவன்''   என்பார்  வள்ளலார்.   அவரே அவ்வாறு தான் இன்றுவரை எத்தனையோ பேர் பசியை வடலூரில் போக்கி வருகிறார். உலகமெல்லாம் எல்லோருக்கும் சோறு இட்டவர் இந்த மழபாடி வைத்யநாதன்.    இன்னொரு பெயர்  வஜ்ர ஸ்தம்பேஸ் வரன்.

நந்திகேஸ்வரன் கல்யாணத்தில் அருகே  இருக்கும்  திருச்சோற்றுத்த்துறை என்கிற ஊரிலிருந்து வண்டி வண்டியாக  சோறு எல்லோருக்கும் வந்தது.  சோழநாடு  காவேரி நதி வடகரை ஸ்தல  54வது சிவாலயம். இங்கு  ஒரே கல்லில் சோமாஸ் கந்தேஸ்வரர் விசேஷமான சிற்பம். ரெண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. பாலாம்பிகை சந்நிதி தெற்கு பார்த்தது. கர்பகிரஹத்தின் மேற்குச் சுற்றில் வள்ளி தெய்வானையுடன் முருகர் காட்சி தருகிறார் .  இந்த ஆலய ஸ்தல விருட்சம் பனை மரம்,
''சுந்தரா  என்னை மறந்தாயோ''  என்று  குரல் கொடுத்து   சுந்தரரை  ''மழபாடியுள் மாணிக்கமே, உன்னையல்லால்  இனி யாரை நினைக்கேனே''  என்று பாடவைத்தவர் மழபாடி மஹேஸ்வரன்.  இது எல்லோரும்  அறிந்த  தேவார பாடல். 

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கு அசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனியாரை நினைக்கேனே"

என்ற தேவார திருப்பதிகத்தை பாடிப்போற்றினர்.
திருமழபாடி 7ம் நூற்றாண்டு  சிவாலயம்.  கொள்ளி டம் ஆற்றின் வடக்கு மற்றும் மேற்கு கரைகளில்  கிழக்கு நோக்கி ஏழு நிலை ராஜகோபுரம் கொண்டது.  ரெண்டு பிரஹாரம் . சோழ பாண்டிய  ராஜாக்கள் நிறுவிய கல்வெட் டுகள் உள்ளது. ராஜராஜன்  காலத்திற்கு முன்பே இருந்த கோவில். உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளன. 2-வது கோபுரத்தைக் கடந்ததும் மிகப்பெரிய அலங்கார மண்டபம் உள்ளது. இங்கு இரு நந்தி சந்நிதிகள் உள்ளன. பிராகாரத்தில் அகோரவீரபத்திரர், விநாயகர், முருகர் ஆகியோர் காட்சி தருகின் றனர். மூன்றாவது வாசல் தாண்டியதும் மகா மண்டபம். கர்ப்ப கிரஹம் 

இன்றும்  நந்தி கல்யாணத்துக்கு  திருவையாறி லிருந்து  பஞ்சநதீஸ்வரர்  தர்மசம்வர்த்தனியோடு பல்லக்கில் வருகிறார். 

தொடர்ந்து சப்தஸ்தான விழாவிற்கு இங்கிருந்து நந்திதேவர் புறப்பட்டுச் செல்வார்.  இந்த திருமணத்தை காண்போருக்கு கல்யாணம் ஆகும் என்பார்கள்.  "நந்தி கல்யாணம் முந்தி கல்யாணம் '' என்று சொல்வதுண்டு. 
இதற்காக திருவையாறில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருமழப்பாடிக்கு நந்தீஸ்வரர் குதிரை வாகனத்திலும், ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி வெட்டிவேர் பல்லக்கிலும் செல்கின்றனர். திருமழப்பாடியில் இறைவன் வைத்திய நாதரும், இறைவி சுந்தராம்பிகையும், கண்ணாடி பல்லக்கில் வந்து மாப்பிள்ளை வீட்டாரை எதிர் கொண்டு அழைக்கின்றனர்.

திரு மழபாடி பெயர்க்காரணங்கள் ரெண்டு.  ஒன்று  மழவர்கள்  வாழ்ந்த ஊர். ரெண்டாவது மழு ஏந்தி சிவன் ஆடியதால்  மழு ஆடி, மழபாடியாகிவிட்டது.

நந்தி கல்யாணம்,  மற்றும்  சப்தஸ்தானத்தில் திருச்சோற்று துறையிலிருந்து அனைவருக்கும் வண்டி வண்டியாக அன்னம் கொண்டு வந்தார்கள். திருப்பழனத்திலிருந்து பழங்கள், காய் கறிகள், வந்து இறங்கின. திருவேதிக்குடி யிலிருந்து வேத விற்பன்னர்கள் வரிசை வரிசை யாக வந்து வேதம் ஓதினார்கள். அபிஷேக தீர்த்தம் பஞ்ச நதியிலிருந்து ( திரு ஐயாற்றி லிருந்து) வந்தது திருநெய்த்தானத்திலிருந்து பக்ஷணங்கள் சமையலுக்கு நெய் பீப்பாய் பீப்பாயாக வந்ததாம். திருமணத்திற்கு நிறைய பூ வேண்டாமா. திருப்பூந்துருத்தியிலிருந்து அது சப்ளை ஆயிற்று என்பார்கள்.

இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...