Friday, January 22, 2021

GEETHANJALI


கீதாஞ்சலி   தாகூர்     J  K   SIVAN


 7.  எளிமை இதோ இதோ.
 
7.  My song has put off her adornments.
She has no pride of dress and decoration.
Ornaments would mar our union; they would come between thee and me;
 their jingling would drown thy whispers.
My poet's vanity dies in shame before thy sight.
O master poet, I have sat down at thy feet.
Only let me make my life simple and straight,
like a flute of reed for thee to fill with music.

இதெல்லாம்  எழுதும் அந்த தாடித் தாத்தா பெயர் ரவீந்திரநாத் தாகூர். அவருக்கு பளபள, ஜிலுஜிலு நகைகள், ஆபரணங்கள் எதுவுமே பிடிக்காது. அவரைப்போலவே அவர் எழுத்துகளும்.

சிலர் ரொம்ப கடினமான வார்த்தைகளை எங்கிருந்தோ தேடி பிடித்து உபயோகித்து கவிதை எழுதுவார்கள் அப்படி எழுதினால் தனக்கு  மதிப்பு, பெருமை, தனது ஞானம்  உயர்வாக கருதப்படும் என்ற நினைப்பு.   அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு அவர் வார்த்தைகளை தெரிந்து வைத்திருப்பவன் தான் அதை படிப்பான். மற்றவன்  அப்படியே கீழே வைத்துவிட்டு கை  அலம்பிக்கொண்டு  இட்லி சாப்பிட போய்விடுவான்.யாருக்கும்  எளிதில் புரியாமல்  இப்படி  கஷ்டப்பட்டு எழுதுவோர்  எழுத்துக்கள் பரண் மேல் செல்லரித்து போவது எனக்கு தெரியும்.  
ஒரு உண்மையைச்  சொல்லட்டுமா?   நான் இன்னும் என் வீட்டில் இருக்கும்  பரிமேலழகர் உரையைப்   படிக்கவில்லை. படிக்க முயற்சித்தபோது புரியாமல் ஓரம் கட்டிவிட்டேன். திருக்குறளுக்கு மு.வ. எழுதிய ஒரு ரூபாய் புத்தகம் தான் எனக்கு புரியும்படியாக விளக்கம் தந்தது.

'என் பாட்டுகளை துகிலுரித்து விட்டேன். பகட்டு ஆடம்பரம், ஜிலுஜிலுப்பு, பளபளப்பு கலகல சத்தம்  எல்லாம் நீக்கி விட்டேன். இந்த அழகு சாதனங்கள், ஆபரணங்கள் என் பாடல்களுக்கு வேண்டாம். எளிமை ஒன்றே போதும். என்னைப் போலவே என் பாடல்களுக்கு அவை பிடிக்காது.

ஆமாம், கிருஷ்ணா, எனக்கும் உனக்கும் இடையே அதெல்லாம் வேண்டாம். அந்த ஆபரணங்கள்  பகட்டு எல்லாம்   நம்மை பிரித்து விடும். நிறைய ஆபரணங்கள்  ஒலிக்கும் சத்தம் ''சலங் சலங்'' ஒலி  நாராசம் மெல்லிசாக  என்  காதோடு நீ பேசும் ரகசிய கீதத்தை கேட்க விடாமல் பண்ணி விடும்.  உன் குரலை அந்த சத்தம் அழுத்தி விடும்.  

நான் பெரிய கவிஞனாம். மற்றவர்கள் கை  தட்டுகிறார்கள்,  என் காது பட சொல்கிறார்கள். சில சமயம் எனக்கே பெருமையாக இருக்கும்.  ஆனால்  நான் நன்றாகவே ,அறிவேன் கிருஷ்ணா, உன் முன்னே நான் ஒரு சிறு பொடி கொசு. நீ பிரபஞ்ச கவிஞன். உன்னைப் பார்க்கும் கணத்திலேயே என் அகந்தை அழிந்தது. என் கர்வம் சிதைந்தது.     நான் வெட்கி தலை குனிகிறேன். சகல லோகங்களும் போற்றும் மஹா கவிஞனே, உன் திருவடிகளில் அருகே அவற்றை கெட்டியாக பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டேன்.

என் ஒரே ஆசையைச்  சொல்கிறேன். உன் கையிலே இருக்கிறதே நீளமான சாதாரண எளிய நாணல் குழல். கிருஷ்ணா, என் வாழ்வும் அதைப் போலவே, எளிமையாக, நெளிவு வளைவு இன்றி நேராக, இருந்து என்னுள்ளிருந்தும் உன் ஆத்ம கீதம் நிரம்ப, விடாமல்,  ஒலிக்கவேண்டும்''

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...