வெற்றி வேற்கை/நறுந்தொகை - J K SIVAN
அதி வீர ராம பாண்டியன்.
அருமையான ஒரு பாண்டியன்.
ஆயிரமாயிரம் வருஷங்களாக தஞ்சாவூர் ஜில்லா எல்லையில் கடலோரத்தில் இப்போது இருக்கும் ஒரு ஊர் அதிராம்பட்டினம். அதில் ஒரு ராஜா இருந்தான். பெயர் அதிவீர ராம பாண்டியன். அவன் பெயரால் அது அதிவீரராம பட்டினம் என்று இருந்து சுருங்கி அதிராம்பட்டினமாகிவிட்டது. ராஜா பிரபலமான எழுத்தாளனாக இருக்கிறான். கொஞ்சம் பலான விஷயங்கள் பற்றியும் ஆராய்ந்து புத்தகம் எழுதி இருக்கிறான். நாம் அதைத் தொடப் போவதில்லை.இவன் பெயரில் ரெண்டு மூன்று பேர் இருக்கிறார்கள்.
இந்த ராஜாவை முதலாம் அதிவீர ராம பாண்டியன் பிற்கால பாண்டிய மன்னன். (1564-1606) என செப்பேடுகள் நிறைய சொல்கிறது. இலக்கியப்பணியோடு கோவில் திருப்பணிகளும் செய்தவன். ஸமஸ்க்ரிதம் அறிந்தவன். ஹர்ஷன் எழுதிய நைஷதம் தமிழில் இந்த ராஜாவின் நைடதம் ஆகும். எனக்கு ரொம்ப பிடித்தது அவனுடைய வெற்றி வேற்கை, அற்புதமான ஒரு நூல். இதற்கு இன்னொரு பெயர் நறுந்தொகை. தென்காசியில் உள்ள அருமையான சிவன் கோவில் இவன் கட்டியது . அதிவீர ராம பாண்டியனின் ஒரு அருமையான நறுந்தொகை செய்யுள் உதாரணத்துக்கு கொடுக்கிறேன். யாரையும் சும்மா ஆளைப்பார்த்து எடை போடாதே என்பதை விளக்குகிறது இந்த பாடல்.
''தேன்படு பனையின் திரள்பழத்து ஒரு விதை
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
வான் உற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவர்க்கு இருக்க நிழல் ஆகாதே.
தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெள்நீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர் புரவி ஆள் பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழல் ஆகும்மே.
பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்.
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்.
அர்த்தம்: பனம்பழம் சாப்பிட இனிப்பாக சுவையாக இருக்கும். அதன் விதை பெரியது. பெரிய உயரமான மரமாக வளரும். என்ன பிரயோஜனம். ஒரு ஆள் கூட வெயிலுக்கு அதன் கீழே நிழல் பெற முடியாதே. ஆல மர விதை அப்படி இல்லை. கடுகு மாதிரி தான் உருவம். அடேங்கப்பா, அது முளைத்து மரமானால் ஒரு பெரிய ராஜா தனது யானை குதிரைப் படையோடு அதன் நிழலில் இளைப்பாறலாம். ஆகவே ஒருவனின் உருவத்தை வைத்து இவன் பெரியவன் இவன் சிறியவன் என்று தப்பு கணக்கு போடுவது தான் தப்பு.
No comments:
Post a Comment