Sunday, August 11, 2019

GITANJALI

கீதாஞ்சலி J K SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

17  உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

17.  I am only waiting for love to give myself up at last into his hands.
That is why it is so late and why I have been guilty of such omissions. They come with their laws and their codes to bind me fast;
but I evade them ever, for I am only waiting for love to give myself up at last into his hands. People blame me and call me heedless; I doubt not they are right in their blame. The market day is over and work is all done for the busy.
Those who came to call me in vain have gone back in anger.
I am only waiting for love to give myself up at last into his hands. கிருஷ்ணனுக்கு தெரியாதா  என்ன  நான் என்னையே  அவனுக்கு அர்ப்பணிக்க காத்திருக்கிறேன் என்று.
கண்ணா, கருமை நிற வண்ணா, நின்னையே சரணடைந்தேன் நந்தலாலா, என் காதல் பாசம் அனைத்தும் உன்னிடமே அல்லவா?உனக்காக கடைசி வரை காத்திருப்பவர்களில்  நான் முதல்வன். அதனால் தான் நான் ரொம்ப லேட் பேர்வழி. நிறைய தவறுகள் செய்தவன் அல்லவா.  என் தவறுகள் சும்மா விடுமா? ஒவ்வொருவரும்  அவருக்கு தெரிந்த நெறிமுறைகள், வழிகள், சட்டம் நியாயம், தர்மம் எனக்கூறி என்னென்னவோ  தண்டனை கொடுக்க என்னென்ன வழியோ  சேர்த்து என்னை அணுக முயலும் போது நான் அகப்படுவேனா?  அவர்களுக்கு  டிமிக்கி  கொடுத்துவிட்டு  உன்னிடம் அல்லவோ ஓடிவந்து  ''நீ காத்திடுவாய். என்னை திருத்திடுவாய்'' என்று கெஞ்சுவேன். .உன்னை அடைந்தவனின் தவறுகள் உனதாகி விடுகிறதே.  சேய் செய்த பிழை தாய் பொறுப்பவள் ஆயிற்றே.
இவன் மதி கெட்டவன், சொன்னதை கேட்கமாட்டான் என்று நிறைய பேர்  எண்ணெய் பற்றி சொல்லி   அதைக்  கேட்டு காது  புளித்து விட்டது கிருஷ்ணா. அவர்கள் சரியாகத்தான் சொல்கிறார்கள்.எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. நான் தான் அதை உணர்ந்து உன்னிடம் ஓடி வந்துவிட்டேனே.
அவரவர் வழியில் அவரவர்கள் செல்லட்டும்.
கடை வியாபாரங்கள் முடிந்து போய்விட்டது. கடையை மூடிவிட்டு  அவரவர் அன்று சம்பாதித்த  காசு எண்ணுகிறார்கள். என்னை தேடி வந்தவர்கள் என்னை அடையமுடியாத  கோபத்தோடு திரும்புவது தெரியும். நான் என்ன செய்வது? நான் தான் செய்த தவறை உணர்ந்து வருந்தி உன்னிடம் வந்து விட்டேனே. அவர்களிடம் எப்படி அகப்படுவேன்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...