சென்ற ஞாயிறுக்கிழமை. அடுத்த மாத குடும்ப விசேஷத்திற்காக ஜவுளி, நகை சமாச்சாரங்களை பெண்மணிகள் தேர்வு செய்ய பல துணிமணி , நகைக்கடைகள் அலைந்தபோது நானும் கறிவேப்பிலையாக கூட போக வேண்டியிருந்தது. பகல் எங்காவது சாப்பிடுவோம் என்று முடிவெடுத்து சென்றது ஒரு பெரிய ஹோட்டல் தான். வாசலில் பிச்சைக்காரன் போல் நிறைய பேர் குடும்பம் நண்பர்களோடும் பசியோடும் உள்ளே உட்கார இடம் கேட்டு காத்திருக்க, ஒரு வழியாக உள்ளே போனோம் . ஒரு அஸ்ஸாம் , திபெத், ஆசாமி சீன முகத்ததுடன் எனக்கு ஒரு தோசை கொண்டு வந்து கொடுத்தான். பெரிய கோவில் கோபுரம் போல் உயரமாக அது எதிரே இருப்பவர் முகம் மறைத்தது,. மூன்று நான்கு நிலைகள் கொண்டகோபுரம் போல இருந்தது. அதற்கு உபகரணங்களாக கலர் கலராக பல வித சட்னிகள் சாம்பார். நான் அதிகம் வெளியே சாப்பிடுபவன் அல்ல. அந்த கோபுர தோசையின் உச்சி ஒரு நிலையை தான் நான் சாப்பிட முடிந்தது. அதற்கே எவ்வளவோ கஷ்டப்பட வேண்டியிருந்தது.
வீட்டிற்கு மூன்று மணி நேரம் கழித்து வந்தபோது வயிற்றில் கடபுடா. சற்று நேரத்தில் அதை தொடர்ந்து லேசாக வயிற்று வலி. அப்புறம்?........ லோட்டாவும் கையுமாக பாத்ரூமில் குடியிருப்பு. பல முறை இப்படி பாத்ரூம் படையெடுப்புக்கு பிறகு படுக்கையில் கொண்டு தள்ளி விட்டது. டாக்டர் மருந்து கொடுத்தார். இரவு வயிற்று வலி குறைந்தது. ரெண்டு மூன்று நாட்களாக எழுந்திருக்க முடியவில்லை. குடிகாரன் தள்ளாட்டம். இன்னும் ரெண்டு மூன்று நாள் எல்லா வலிகளும் தொந்தரவும் மறைந்தது. தோசை வடை என்றால் ஓட்டம்.
துரியோதனனை பற்றி, சூர்தாஸ், தாகூர் கீதாஞ்சலி, மஹா பெரியவா,பழங் கால நினைவுகள் பற்றி எல்லாம் எதுவுமே உட்கார்ந்து என்னால் எழுதமுடியவில்லை நிறைய பேர் ஆர்வத்தோடு தினமும் படிக்கிறார்கள், அவர்களுக்கு என்னுடைய இயலாமையை தெரிவிக்க ஒரு வரி எழுதியதற்கு எத்தனை நல்லுள்ளங்களின் வாழ்த்துக்கள். இந்த உற்சாகத்தால் உடம்பு பாதிக்கு மேல் சரியாகவில்லை என்றால் தான் ஆச்சர்யம்.
வெகுகாலத்துக்கு முன்பு ஹிந்துவில் ஒரு வங்காளி மனிதர் வெள்ளையர் அரசாங்க ரயில்வே மீது கம்ளைண்ட் கொடுத்திருந்தது ஞாபகம் வந்தது. அவருக்கும் என் அவஸ்தை. ஆனால் அவர் உண்டது தோசை அல்ல பலாப்பழம்... இன்னொரு வித்யாசம் அவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த அவஸ்தை பட்டார். வண்டி நின்றபோது ஓடினார் எங்கோ மறைவாக அமர்வதற்கு. அப்பாடா என்று அவர் ரயில் பெட்டிக்கு திரும்புவதற்குள் ரயில் கிளம்பிவிட்டது. சோம்பும் கையுமாக அவர் அங்கேயே அன்றிரவு . அப்போதெல்லாம் ரயிலில் கழிவறை கிடையாது. இந்த மனிதர் தான் பட்ட அவஸ்தையை வெள்ளைக்கார அதிகாரிகளுக்கு ''தனது பிரத்யேக'' ஆங்கிலத்தில் ''தெளிவாக'' எழுதியதற்கு பிறகு தான் நமக்கு அவரால் கழிவறைகள் ரயிலில் கிடைத்தது. அவரது அவஸ்தையால் நன்மை உண்டானது. எனது அவஸ்தையால் எனக்கே தீமை. இது தான் அந்த லெட்டர். அவர் பெயர் ஒஹில் சந்திர சென்.
Dear Sir,
I am arrive by passenger train Ahmedpur station and my belly is too much swelling with jackfruit. I am therefor went to privy. Just I doing the nuisance that guard making whistle blow for train to go off and I am running with lotah in one hand and dhoti in the next when I am fall over and expose all shocking to man and female women on platform. I am got leaved Ahmedpur station.
This too much bad, if passenger go to make dung that dam guard not wait train minutes for him. I am therefor pray your honour to make big fine on that guard for public sake. Otherwise I am making big report to papers.
Your's faithfully servent,
Okhil Ch. Sen.
(If you ever used toilet in our Indian Railway you should be thankful to 'Okhil Chandra Sen' a passenger who wrote this hilarious letter to the Sahibganj divisional railway office in 1909 complaining about their absence which led to the introduction of toilets on trains.)

இந்த லெட்டர் ரயில்வே அருங்காட்சி அகத்தில் ஒரு காட்சிப்பொருளாக இருக்கிறதாக அறிகிறேன்.
வெளியில் எதுவும் சாப்பிடவேண்டாம். கூடுமானவரை வீட்டு உணவே போதும். எங்கோ சைதாப்பேட்டையில் போலி வெண்ணை தயாரிப்பாளர்களை அரசாங்க அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தது வாட்சாப்ப் காட்சியாக வந்தது. மைலாப்பூர் ஆஞ்சநேயருக்கு அந்த வெண்ணை காப்பு பல வருஷங்களாகவாம் . ஜாக்கிரதை. இன்னொரு வாட்சப்பில் ஏதோ கெமிக்கல் திரவத்தை நீரில் கலந்தால் பாலாகிறதாம். அந்த பாலில் தயாரான டீ காப்பி நம்மை அழித்துவிடப்போகிறது. பொது இடங்களில் நிறைய பேருக்கு இந்த பாலால் காப்பி டீ தருகிறார்கள். ஜாக்கிரதை.
பி.கு. என் அவஸ்தையோடு பாவம் ப.சி.அவஸ்தையை பார்த்துக்கொண்டு படுத்துக்கொண்டிருந்தேன்.
No comments:
Post a Comment