ஷீர்டி சாயிபாபா J K SIVAN
SAI SATHCHARITHRA
9 நல்வழிச் சாலை
மகான்களைப் பற்றி பேசவோ எழுதவரோ அவர்களது ஆசி இன்றி நிறைவேறாது. அப்படி ஆசியற்று பேசுபவர்களின் எழு.த் தும் பேச்சும் பக்தர்கள் மனதை நெருங்காது.
தபோல்கர் ஸாயிபாபாவை சந்தித்து அவரது அற்புத லீலைகளை நேரிலே பார்த்தும், மற்றவர்களிடமிருந்து கேட்டறிந்து குதூகலமாகி அதை ஏன் பொதுமக்களுக்கு ஒரு சிறு புத்தகமாக வடித்து ''ஸ்ரீ ஸாய் ஸத் சரித்திரம்'' என்று பெயர் சூட்டி வெளியிடக்கூடாது என்று தீராத தாகமாகி அதை பாபாவிடம் தீக்ஷித் மூலம் தெரிவித்தார் அல்லவா.அப்போது பாபா என்ன சொன்னார் தெரியுமா?
''ஓஹோ என் சரித்திரத்தை எழுதப்போகிறாயா? சரி, உன் கடமையை செய்யேன். யாமிருக்க பயமேன்? என் வார்த்தைகளில் நம்பிக்கையோடு உன் மனதை ஸ்திரப்படுத்திக்கொண்டு துவங்கு. எனது லீலைகளை அறிந்தவனுக்கு அவித்யா மறையும். ஞானம் கைகூடும். மனது அதில் பூரணமாக லயித்தால் உலக உணர்வு மறையும், பக்தி, அன்பு, பாசம் பொங்கும். என் லீலைகளை ஆழமாக மனதில் பதித்தவனுக்கு ஞானம் ஆழ்கடல் முத்தாக கிடைக்கும்''.பகவான் பாபாவே இப்படி நேரிடையாக சொன்னால் தபோல்கருக்கு எப்படி இருந்திருக்கும்?. மனதில் எதைப் பற்றியும் அச்சமின்றி மனோ தைரியத்தோடு எழுத தொடங்கினார். தபோல்கருக்கு ஆசி வழங்கி எழுது என்று சொல்லிவிட்டு பாபா ஷர்மாவிடம் சொல்கிறார். ஷர்மா தான் மாதவ்ராவ் தேஷ்பாண்டே.
''எந்த பக்தன் உள்ளன்போடு, என் நாமத்தை பஜிக்கிறானோ, அவன் விருப்பங்களை பூர்த்தி செய்வேன். அவனது பக்தி மேலும் பெருகும். என்னை பற்றி பாடுகிறவனோடு நான் இருக்கிறேன். என்னை மனதார இதய பூர்வமாக நேசிக்கிறவனுக்கு என் வாழ்க்கை சரித்ரம் கேட்க சந்தோஷ,மாகத்தானே இருக்கும். என்னைப் பாடுகிறவன் மனதில் தோன்றும் சந்தோஷமே திருப்தியே, நான் தான். என்னை அணுகுபவனை, நினைப்பவனை, பிரார்த்திப்பவனை, நம்புபவனை கஷ்டங்களிலிருந்து விடுவிப்பது என் கடமை. என்னை நெருங்கிவிட்டால் உலக விஷயங்கள் மீது எப்படி புத்தி போகும்? மரணத்திலிருந்தும் அவர்களை விடுவிப்பேனே .வியாதி எங்கிருந்து என் பக்தனை நெருங்கும்.? அகம்பாவம், தீய எண்ணங்கள், ஆடம்பரம், ஆங்காரம், எல்லாம் அவனை அணுகாது. சாய் ஸ்மரணை பே ச்சில் கேட்பதில் உள்ள பாபங்களை நீக்கும்.'' இப்படி ஒரு குரு சொல்லி நான் கேட்டதில்லை. பாபா அழகாக ஆணித்தரமாக சொன்னார் என்றால் அதில் ஆழம் சத்யம், உண்மை இருக்கிறது. கோடானுகோடி பக்தர்கள் இதை உணர்ந்திருக்கிறார்களே .
பகவான் இன்னாருக்கு இன்ன வேலை என்று நிர்ணயித்திருக்கிறான். ஒருவன் கோயில் குளம் மடம் , மாடம் எல்லாம் காட்டுகிறான். ஒருவன் அற்புதமாக பகவானைப் பாடுகிறான். ஒன்றுவிடாமல் பல கோயில்களை சென்று ஒருவன் பார்க்கிறான். அப்படித்தான் தபோல்கரை ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் எழுத படைத்தானோ? அவர் ஆரம்பத்தில் மலைத்து நின்றார். நானா? இவ்வளவு பெரிய மஹானைப் பற்றி எழுத என்னால் முடியுமா? நூன் ஒன்றுக்கும் உதவாதவன் என்று மனதில் தோன்றியது. ஆனால் என்ன ஆச்சசர்யம். பேனாவை காகிதத்தின் மேல் வைத்ததும் அது நர்த்தனமாடியது. கை மட்டுமே என்னுடையது. பாபா தனது சரித்திரத்தை என்னை கருவியாக வைத்து தானே எழுதிக்கொண்டார் என்று தான் தான் தபோல்கர் சத்யம் செய்கிறார். உலகம் வியக்கிறது.
நான் ஒரு பிராமண குலத்தவன் என்றாலும் ஸ்ருதி ஸ்ம்ரிதி என்ற இரு கண்களை இழந்தவன் என்றாலும் ஊமையையும் பேசவைப்பவர், முடவனை மலையேற வைப்பவர் பாபா அல்லவா? புல்லாங்குழல் சங்கீதம் அறியுமா. வாசிப்பவன் அவன் அல்லவா? சந்திரன் ஒளியில் ள்தானே கடல் பொங்குகிறது . தபோல்கர் பாபாவின் அருளால் தான் அற்புதமாக நமக்கு ஸாய் சத் சரித்திரம் தந்தார். கரை காணா இருளில் கலங்கரை விளக்கு போல் பக்தர்களுக்கு இந்நூல் நல்வழி காட்டுகிறது.
நான் ஸாய்பக்தர்களின் பஜனைகள் பல இடங்களில் கேட்டிருக்கிறேன். ஆணும் பெண்ணுமாக வயது வித்தியாசமின்றி ஒன்று கலந்து பாடும் அவர்களிடம் தான் என்ன ஒழுக்கம். கால பிரமாணம். நிதானம். இனிமை. ஒற்றுமையான சேர்ந்திசை. அன்பும் பக்தியும் பரவசமும் தேனாக காதில் பாயும். ஆரத்தி முடிந்து பிரசாதம் பெரும் வரை ஒரு சில மணித்துகளில் உலகை உடலை மறந்த உன்னத நிலை. நெஞ்சை நிறைக்கும் ஆனந்த சுகம். முக்திக்கு இனிய வழி இந்த ஸாய் சங்கீத் என்று சொன்னால் பூரணமான உண்மை.
கலியுகத்தில் நாம ஸ்மரணை, நாம சங்கீர்த்தனம் ஒன்றே கண்கண்ட காது கேட்ட கைவல்ய சாதனை, மருந்து. க்ரித யுகத்தில் சமதமம் மனதையும் உடம்பையும் இணைத்தது, திரேதாயுகத்தில் யாகம் யஞம், த்வாபர யுகத்தில் வழிபாடு இப்படிவேறு வகையில் மோக்ஷமார்கம் காட்டியது.
ஸாய் சரித்திரம் போன்ற மஹான்களின் வாழ்க்கை அனுபவங்கள் தரும் ஆத்ம ஞானத்திற்கு ஈடு இணை இல்லை எனலாம். ஸத்ஸங்கம் , பிரவசனம் போன்றவற்றை முடியும்போதெல்லாம் அடிக்கடி நாடவேண்டும். நம்மை தேடி வருகிறார் இந்நூல்களில் பகவான் குரு, ஆசார்யன் மூலமாக. கன்றின் மேல் ஆசையுடன் பசு தேடி ஓடி வருவதைப் போல. கன்றுக்கு தெரியாது தனக்கு பசி இருப்பது. தாய்பசு மடி நிறைய பாலோடு வந்து தானே ஊட்டும். அம்மா குழந்தை கேட்டா பாலூட்டுகிறாள்? எல்லோரும் அறிந்த ஆச்சர்யம் இதில் என்ன வென்றால் பால் குடித்த குழந்தையின் சந்தோஷத்தை விட பால் கொடுத்த தாயின் மகிழ்ச்சி சொல்ல, எழுதவொண்ணா அதிசயம்.
No comments:
Post a Comment