மறந்து போயிருந்தால் அவனைப்பற்றிய சில சங்கதிகள் சொல்லட்டுமா?
1971ல் உகண்டா நாட்டு அதிகாரத்தை தனது கை பிடிக்குள் கொண்டுவந்து 8 வருஷங்கள் ஆண்டான். ஈவு இரக்கமில்லாமல் எண்ணற்றோரை வாட்டி வதைத்தான். கொன்றான். எதிர்த்து பேசினால் அவ்வளவு தான். எண்ணற்ற எளியோர்களை காரணமின்றி சிறையிலிட்டான். அடித்தான், துன்புறுத்தினான். கொன்றான். அரை மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் என்று தெரிகிறது. தெரியாதது எவ்வளவோ?மக்கள் கொந்தளித்து பொங்கி எழுந்து அவனை நாட்டை விட்டே ஓட வைத்தனர். சவுதி அரேபியாவுக்கு ஓடி அங்கே நோய்வாய்ப்பட்டு 2003ல் மடிந்தான்.
தனது எதிரிகளை கொன்று ஜில்லென்று பிரிட்ஜில் fridge அவர்கள் தலைகளை வைத்து வேண்டும்போது அவர்கள் உடல் பாகங்களை ருசித்து சாப்பிடுவானாம். ''ரொம்ப உப்பு கரிக்கிறது '' என்று வேறு ருசி பார்த்து சொல்லியிருக்கிறான்.
பாதாள சிறை கட்டி அதில் கணக்கில்லாமல் உயிர்கள் பலி ஆகியிருக்கிறது. பாதாள அறையை சுற்றி அகழியில் முதலைகள். மின்சாரம் பொருத்திய வேலி . தப்பிக்க முயற்சித்தால் மரணம். கண்ணைக்கட்டி சுற்றவிட்டு அவர்கள் திசை அறியாமல் தவிக்கும்போது அவனுக்கு சந்தோஷம். ரெண்டு லக்ஷம் பேருக்கு மேல் அட்ரஸ் இல்லாமல் அங்கே மறைந்து போயிருக்கிறார்கள். அறைகளில் அன்ன ஆகாரம் நீர் இன்றி வாடி வதங்கி மரணமான நாற்றமெடுத்த உடல்கள். புதிது புதிதாக மேலும் சிறைக்கைதிகள் அங்கே. அவர்களுக்கும் அதே கதி. அவனது துப்பாக்கி வீரர்கள் குழந்தைகள், மாணவர்கள், சர்ச் பிஷப்புகள், பெண்கள் ஏழைக் குடியானவர்கள், பொது மக்கள், அனைவரையும் சுட்டு பொசுக்கியுள்ளனர். ஒருவரையொருவர் தாக்கி கொல்லும்படியாக செய்து மகிழ்வான். சுத்தியலால் மண்டையை உடைத்து கொல்லப்பட்டவர்கள் பலர். 80,000 ஆசிய குடிமக்கள் உகாண்டாவில் இருந்து வெளியேற்றப்பற்றிருக்கிறார்கள்.''பகவான் எனக்கு அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டிருக்கிறான்'' என்று பேசி இருக்கிறான். நம்மவர்கள் எத்தனைபேர் உகண்டாவில் வேலைக்கு அவன் காலத்தில் சென்று தவித்தவர்களோ? நிறைய கடைகள் வியாபாரம் செய்து பிழைத்த 4000 ஆசிய மக்கள், நம்மவர்களையும் சேர்த்து தான், பலநாள் சேர்த்த சொத்து சுதந்திரம் எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு கட்டிய துணியோடு உயிர் தப்பி இருக்கிறார்கள். உகண்டாவின் பொருளாதாரம் எப்படி சீர் பட முடியும்? இதில் டாக்டர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள், தொழிலாளிகள், இஞ்ஜினியர்கள், இன்னும் பலர். தன்னுடைய சேவகர்களை கூட கொன்று விடுவான். சந்தேகப் பிராணி.
ஒரு ஊழியர் தனது பெண் திருமணத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது வானொலியில் அவர் மரணம் அடைந்தார் என்று அறிவித்தான். ஒரு வெள்ளைக்கார அதிகாரியின் மனைவி இடம் சேஷ்டை செய்து. புருஷன் தடுக்க, அவளுக்கு அவனே டெலிபோன் செயது என்ன சொன்னான் தெரியுமா? ''உன் கணவன் மரணத்துக்கு என் அனுதாபம். கவர்மெண்ட் ஆஸ்பத்திரியில் அவன் சடலத்தை போய் பெற்றுக்கொள்'' ஆனால் அவள் கணவன் சாகவில்லை. நல்லவேளை தப்பித்து மனைவியோடு ஆஸ்திரேலியா திரும்பி விட்டான். ''அமீன் கண்ணில் படாமல் இருப்பது உயிர் பிழைக்கும் வழி. உகாண்டாவில் ஒவ்வொருநாளும் செத்து பிழைத்தேன். எப்போது அமீன் நல்ல குணத்தோடு இருப்பான் என்றே தெரியாது '' என்று சொல்லி இருக்கிறான் அந்த மனிதன்.
''யார் மீது சந்தேகம் வருகிறதோ, வரும் என்று தோன்றுகிறதோ அவர்கள் உயிரோடு இருக்கக்கூடாது '' என்ற கொள்கை உடையவன். அப்படி தோன்றினால் சந்தேகப்பட்டவர்களை அவனது சுடும் படை firing squad சுட்டு பிணத்தை தூக்கி நைல் நதியில் போட்டுவிடும். நைல் ரத்தம் கலந்து சிவப்பாக ஓடும். விக்டோரியா ஏரி தேக்கத்தில் கட்டிய அணை அடிக்கடி அநேக பிணங்களால் அடைபட்டு தண்ணீர் ஓட வழியில்லாமல் தேங்கி இருக்குமாம்.
இப்படிப்பட்ட இடி அமீன் நல்ல கல்வி அறிவு கொண்டவனாகவா இருந்திருப்பான்? படிக்காதவன். ஆகவே ஆப்பிரிக்க படித்தவர்களை வெறுத்தான். அருகில் சேர்க்க மாட்டான். நாடு கடத்தினான். முட்டல்களைத்தவிர வேறு யாருக்கும் அங்கே இடம் கிடையாது. இட்லர் மாதிரி நடந்து கொண்டானே தவிர அமீன் இட்லர் ஆகமுடியாது. ''ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களை கொல்ல அவனுக்கு உரிமை உண்டு அது சரி தான் '' என்றவன் அமீன்.
ஞாபகம் இருக்கிறதா ஒரு ஏர் பிரான்ஸ் AIR FRANCE விமானம் கிரீஸ் ஏதென்ஸ் ATHENS லிருந்து பிரான்சில் பாரிஸ் PARIS போகவேண்டியதை தீவிர வாதிகள் மடக்க, இஸ்ரேலி திடீர் வீரர்கள் COMMANDOS உகாண்டா வின் விமான நிலையம் ENTEBBE யில் இறக்கி அதில் இருந்த தீவிரவாதிகளை சுட்டு கொன்றபோது அதில் பாதி பேர் இடி அமீன் ஆட்கள் திவீரவாதிகள். பாவம் ஒரு பிரயாணி 74 வயது பிரிட்டிஷ் கார கிழவி அந்த விமானத்தில் இருந்தவள் மாட்டிக்கொண்டவள். அவளை விமானத்திலிருந்து பிடித்து கம்பாலா KAMPALA ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டதாக அமீன் ஆட்கள் தெரிவித்தார்கள். இஸ்ரேல் கம்மாண்டோ மீதிருந்த கோபத்தை அந்த இஸ்ரேல் நாட்டு பெண் மீது காட்டினான். காரணமாவது வெங்காயமாவது? அவளை இஸ்ரேலுக்கு அனுப்புகிறேன் என்று சொல்லி ஆஸ்பத்தியிலிருந்து தரதரவென்று அவள் கத்த கத்த இழுத்து வந்தார்கள். அவள் சுடப்பட்டு ஒரு காரில் அவள் பிணம் ஏற்றி செல்லப்பட்டது என்று யாரோ பார்த்து சொன்னதாக தகவல். எங்கோ ஒரு கரும்பு தோட்டத்தில் 19 மைல் தூரத்தில் அவள் உடல் கிடந்ததாம் .அடையாளம் தெரியக்கூடாது என்று அவள் முகம் தீயில் கருகியிருந்தது. யூதர்களை கொல்ல சந்தர்ப்பம் கிடைத்தபோது அமீன் விடுவதில்லை. ஆங்கில அரசாங்கம் உகண்டாவோடு எல்லா தொடர்பையும் நீக்கியது.
அமீனுக்கு ஐந்து மனைவிகள். 43 குழந்தைகள். நாலாவது மனைவி நடத்தையில் சந்தேகம் வந்து கொன்றுவிட்டான். ரெண்டு விவாக ரத்து பெற்ற மனைவிகள். 4ம் மனைவி உடல் துண்டு துண்டாக மைசூர் பாக் பண்ணி, அவற்றை ஒரு பையில் போட்டு அவள் யாரிடம் கள்ள தொடர்பு கொண்டதாக சந்தேகப்பட்டானோ அவனது காரில் வைக்கப்பட்டிருந்தது. அவள் தற்கொலை செயது கொண்டதாக செயதி வெளியிட்டான்.
ஆங்கில செய்தி பத்திரிகைகள் இடி அமீனை ''கோமாளி'' BAFFOON, பைத்தியக்காரன் , MADMAN என்று சித்தரித்ததை படித்திருக்கிறேன். தனக்கு தானே விரும்பிய பட்டங்கள் கொடுத்துக் கொள்வான். இங்கேயே எத்தனையோ பேர் டாக்டர் பட்டம் பெறுகிறார்களே அவன் ஹிஸ் எக்செலன்ஸி HIS EXCELLENCY, உகாண்டா ஜனாதிபதி, PRESIDENT OF UGANDA , நிரந்தர தலைவன், PRESIDENT FOR LIFE, பீல்ட் மார்ஷல், FIELD MARSHAL, டாக்டர் இடி அமீன், பல்கலைக்கழக துணை வேந்தர், VICE CHANCELLOR , மிலிட்டரி கிராஸ், உலகத்தின் எல்லா விலங்குகள், கடல் வாழ் மீன் இனம் எல்லாவற்றிற்கும் இறைவன். LORD OF ALL THE BEASTS OF EARTH & FISHES OF THE SEA, ஆப்பிரிக்காவில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மாவீரன், Conqueror of the British Empire in Africa in General and Uganda in Particular. என்றெல்லாம் பட்டங்கள் தானே போட்டுக்கொண்டு அலங்கரித்துக் கொண்டான். சாகும் வரை தனது குற்றங்களுக்கு வருந்தாத கழிசடை.
இப்போது யோசியுங்கள் நமது அரக்கர்கள், ராக்ஷஸர்கள் எவ்வளவு கொடுமைகள் புரிந்திருப்பார்கள். அதை வெளியே சொல்ல யாருமில்லை என்பதால் தெரியவில்லை. கம்சன் துரியோதனன், ராவணன் எல்லாம் சாதாரணம் இல்லை என்று மட்டும் தோன்றுகிறது
No comments:
Post a Comment