Wednesday, August 7, 2019

GITANJALI

கீதாஞ்சலி J K SIVAN
ரபீந்திரநாத் தாகூர்

16 மௌனமே வார்த்தையாகி ....

(நான் கீதாஞ்சலியை மொழி பெயர்ப்பதாக கருத வேண்டாம். அதில் அமரகவி ரவீந்திரநாத் தாகூரின் எண்ண அழகையும், எழுத்து வன்மையும், உள்ளே பொதிந்த சேவை மனப்பான்மையும் ரசித்து, கிருஷ்ணனை உள்ளே செலுத்தி பக்தனின் ஆர்வத்துக்கு உயிரூட்டி இருக்கிறேன். அவ்வளவு தான். இது வரை 15 கீதாஞ்சலி பாடல்களை தொட்டிருக்கிறேனே. எத்தனை பேருக்கு பிடித்திருக்கிறது? சொல்லவேண்டாமா? - சிவன்)

16. I have had my invitation to this world's festival,
and thus my life has been blessed.
My eyes have seen and my ears have heard.
It was my part at this feast to play upon my instrument,
and I have done all I could.
Now, I ask, has the time come at last when I may go in
and see thy face and offer thee my silent salutation?
இந்த உலகம் ஒரு விசித்திர விழா மண்டபம். நிறைய நிகழ்ச்சிகள் வினாடிதோறும் நடந்தேறி வருகிறது.. எனக்கும் ஒரு அழைப்பு வந்து தானே என் ஆட்டம் பாட்டம் எல்லாம் காட்ட நான் பிறந்திருக்கிறேன், வாழ்கிறேன், அனுபவிக்கிறேன். கிருஷ்ணா, உன் அருளால் இதைப் பெற நான் பாக்கியசாலி தானே.
என் கண்கள் நிறைய காட்சிகளை ரசிக்கிறது. கண்ணே கொள்ளாது போல் இருக்கிறது.
காது நிறையவே என்னென்னவோ செயதிகள், பாட்டுகள் பேச்சுகள் எல்லாம் கேட்கிறது. ஒரு குறையும் குறைவும் இல்லை.
எல்லோரையும் போல் எனக்கும் இந்த வாழ்க்கை விருந்து நாடகத்தில் ஒரு வேஷம் இருக்கிறதே.
நான் என் வாத்யத்தை எடுத்துக்கொண்டு வந்து பாடட்டுமா, வாசிக்கட்டுமா?
என்னால் முடிந்ததை எல்லாம் குறைவின்றி செய்கிறேனே, செய்தேனே-- ஒன்றா இராண்டா, எண்பது வருஷம்..!!... .
ஒன்று மட்டும் உறுதியாக கேட்கிறேன். நீயும் பதில் சொல்கிறாயா கிருஷ்ணா?
என் அரங்கேற்ற நேரம் வந்துவிட்டதா, நான் வரட்டுமா உன் தாமரை முகம் தரிசிக்கமுடியுமா,
என்ன சொல்வது உன்னை பார்த்தால், என்ன பேசுவது என்று தெரியவில்லையே. வார்த்தையே இல்லாமல் ஒரு மௌனமாக விழுந்து வணங்கட்டுமா, வாழ்த்தட்டுமா, சின்னதாக ஒரு மௌன அஞ்சலி கண்களில் நீர் பொங்க நன்றியோடு செலுத்தட்டுமா?

குறிப்பு: ஒரு நண்பர் நான் எழுதும் கீதாஞ்சலி கட்டுரைகளில் போடும் ரபீந்திரநாத் தாகூர் படத்தை பார்த்துவிட்டு நான் என் கட்டுரைகளில் பெரியார் ஈ.வே.ரா படம் போடுவது அவர் பற்றி எழுதுவது தனக்கு ரொம்ப பிடிக்கிறது என்று சொன்னபோது தான் நான் செய்த பாவங்கள் இன்னும் என்னை விட்டு விலகவில்லை என்று புரிந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...