எண்ணத்திலும் வண்ணத்திலும் கண்ணன்
இந்த எண்பது வருஷங்களில் நான் அறிந்த உண்மை, அனுபவித்த இன்பம், எது வென்றால் நேரத்தை வீணடிக்காதது. 24 மணி நேரம் பெறவில்லையே கிருஷ்ணா என்று ஏங்குபவன் நான். அதனால் என்ன பயன்? முதலாவது ''போர்'' அடிக்கிறது என்கிற வார்த்தை என் அகராதியில் இதுவரை இல்லை. அர்த்தமும் தெரியாது. ஒருமாற்றி ஒன்று ஏதாவது ஒருவேலை சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது. நிறைய சிந்திக்க செய்கிறது. உடலை அதன் உபாதையை மறக்க வைக்கிறது. தாங்க முடியாத நேரத்தில் மற்ற ஈடுபாடுகளில் செயல்பட முடியாமல் உடல் குறுக்கிடும்போது மட்டும் டாக்டரை நாட வைக்கிறது. கிருஷ்ணன் கிருபையால் அப்படிப்பட்ட நேரங்கள் ரொம்ப கம்மி.
28 ஜூலை 2019 அன்று மாலை மூன்று மணியிலிருந்து எங்களுக்கு ரஞ்சனி ஹால் கிடைத்தபோது சாயந்திரம் 6 மணிவரை, அதாவது ஸ்ரீ ரகுவீர பட்டாச்சார்யாரின் நிறைவு நாள் சப்தாஹத்தை ஆரம்பிக்கும் வரை மூன்று மணிநேரத்தை எதற்கு வீணடிக்கவேண்டும் என்று தோன்றி அதற்கு ஒரு திட்டம் தயார் செய்தோம். ஸ்ரீ சுந்தரம் ராமசந்திரன் ஒரு கிருஷ்ணன் படம் OUTLINE தயார் செய்ய வேண்டி அவர் கொண்டுவந்து கொடுத்தார். அதை எல்லோருமாக வண்ணம் தீட்டுங்கள் என்று ஒரு அறிவிப்பு செய்திருந்தோம். என்ன ஆச்சர்யம்! 4 வயது முதல் 80 வரை அனைவருமே நான் ரெடி என்று வந்துவிட்டார்கள். அவர்களை ஒரு மணி நேரம் கோ- பாலன் (பசுவுடன் கண்ணன்) வேலை வாங்கி அவனை சிந்திக்க செய்தது எங்களது பெரும் பாக்யம். அவர்கள் வண்ணம் தீட்டிய படங்கள் சிலவற்றை இத்துடன் இணைத்திருக்கிறேன். குழந்தைகளுக்கு அங்கேயே பரிசு கொடுத்தோம். சான்றிதழ் CERTIFICATE வழங்கினோம் . பெரியவர்களுக்கு புத்தங்கள் கொடுக்க தயாராக இருந்தோம். ஸ்ரீ பட்டாச்சாரியார் மூலம் அளிக்க எண்ணம். ஆனால் நேரமின்மையால் அவர்களை மேடைக்கழைக்க வழியில்லை. தனித்தனியே கூப்பிட்டு கொடுக்க உள்ளேன்.
No comments:
Post a Comment