''ஆஹா, இன்று கணக்கு தீர்ந்தது.''.
குருக்ஷேத்ரம் அமைதியாக காட்சியளித்
தது. எண்ணற்ற உயிர்கள் பறிபோன இடமாக தெரியவில்லை. இன்னும் பிணங்களை மொத்தமாக எரித்துக்கொண்டிருந்தார்கள். ரத்த ஆறுகள் உறைந்து போய் காணப்பட்டன.
பாண்டவர்கள் ஒரு தனி இடத்தில் தங்களது கூடாரத்தை அமைத்துக்கொண்டு அதில் வசித்து வந்தார்கள். பீஷ்மர் அருகிலே ஒரு இடத்தில் அம்பு படுக்கையில் சயனித்துக் கொண்டிருந்தார். உத்தராயண புண்ய காலம் வருவதற்கு காத்திருந்தார். அவர் விண்ணுலகம் செல்லும் நேரம் நெருங்கிவிட்டது.
திரிஷ்ட த்யும்னன் மற்ற வீரர்களோடு ஒரு பெரிய கூடாரத்தில் ஒரு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்தான்., அஸ்வத்தாமன் அந்த கூடாரத்தை நள்ளிரவில் அடைந்தபோது திருஷ்டத்யும்னன் எந்த ஆபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்போது அஸ்வத்தாமன் மெதுவாக அவனை அணுகி அவன் நெஞ்சில் கால் வைத்து தலையை இழுத்தது மார்பை கை நகங்களாலேயே கிழித்து பிளந்தான். அரை குறை தூக்கத்தில் இருந்து எழுந்த திருஷ்டத்யும்னன் திடீரென்று எதிர்ப்பட்ட இந்த அசுர தாக்குதலை உணர்ந்து திடுக்கிட்டான். எழுந்து அருகில் வைத்திருந்த உடைவாளை எடுக்க முடியவில்லை. அவன் நெஞ்சில் கால் வைத்து அஸ்வத்தாமன் நிற்பதை உணர்ந்தான். கண்மூடி கண் திறக்கும் நேரத்தில் மிக்க பலத்தோடு அஸ்வத்தாமன் தனது ஆயுதத்தால் அவனை அடித்துக் கொன்றான். ஹா ஹா என்று மனதில் தந்தையின் மரணத்துக்கு பழி தீர்த்தான். திருஷ்டத்யும்னன் கடைசி சப்தம் கேட்டு எழுந்த அவன் மனைவியர் கூச்சலிட எதிர்த்தவர்கள் அனைவரையும் அஸ்வத்தாமன் கொன்றான். உத்தமௌஜா படுத்திருந்த கூடாரத்தில் சென்று அவனையும் யுதாமன்யுவையும் கொன்றான். கண்ணில் பட்டவர்கள் எதிர்த்தவர்கள் எல்லோரையும் கொன்றான். மரண தேவதையின் உருவாக காட்சி அளித்தான் அஸ்வத்தாமன்.
அடுத்து அவன் கண்ணில் தென்பட்டவர்கள் பாண்டவ குமாரர்கள். நிர்தாக்ஷண்யமாக வெறியோடு தாக்கி கொன்றான். திரௌபதி புத்திரர்கள் மாண்டனர். சப்தம் கேட்டு ஆயுதங்களோடு ஓடிவந்த சிகண்டியையும் எதிர்த்து தாக்கி அஸ்வத்தாமன் அவனை வாளால் இருகூறாக வெட்டினான். இவ்வாறு சுதஸோமன், சதானீகன் , ச்ருதகர்மன், ஸ்ருத கீர்த்தி, சிகண்டி ஆகியோரை கொன்றான்.
கூடாரங்களுக்கு வெளியே நின்ற க்ருதவர்மன் கிருபர் ஆகியோர் வெளியே ஆயுதம் தாங்கி ஓடிவந்தவர்களை கொன்றார்கள். பாண்டவர் கூடாரங்களுக்கு தீ இட்டு எரித்தனர். இரவு அஸ்வத்தாமன் நுழையும்போது எப்படி பாண்டவ சைன்யம் சப்தமின்றி உறங்கி கொண்டிருந்ததோ அவ்வாறே விடியற்காலை அஸ்வத்தாமன் அங்கிருந்து வெளியேறும்போது எண்ணற்ற உயிர்கள் அங்கே மீளா தூக்கத்தில் உயிரிழந்து அமைதியாக கிடந்தன.
''எண்ணியதை முடித்தேன்'' என்று மகிழ்ந்தான் அஸ்வத்தாமன். பழிவாங்கினேன் என்று போய் துரியோதனன் இன்னும் உயிரோடு இருந்தால் சொல்லுவோம் என்ற அஸ்வத்தாமனை கிருபரும் க்ருதவர்மனும் கட்டி அணைத்தார்கள்.
மூவரும் துரியோதனன் கிடந்த இடத்தை அடைந்தபோது ரத்த வெள்ளத்திலே அவன் உடலைச் சுற்றி ஏராளமாக ஓநாய்கள் கழுகுகள் காத்திருந்தன. ஒரு சிறந்த உணவு அன்று அவற்றிற்கு கிடைத்தது.
No comments:
Post a Comment