Tuesday, November 27, 2018

SRI RAMANUJA


ஸ்ரீ ராமானுஜர்         J.K. SIVAN              


                                     ஆதர்ச  பக்தி ஜோடி

இரவில் வீடு ஏன்  இவ்வளவு அலங்கோலமாக இருக்கிறது. எல்லாவற்றையும் எடுத்து கவிழ்த்தால் போல் யார்  இங்கே  நான் இல்லாத நேரம் வந்து   கலைத்து  போட்டிருக்கிறான். என்ன தைர்யம் அவனுக்கு?  இனி அவன் உயிர் அவனதல்ல.''  கோபத்தோடு பொன்னாச்சியை பார்த்த தனுர்தாசன் அவள் முகத்தில்  ஒரு காதில் ஒரு மூக்கில் அவன் அணிவித்த மிக விலையுயர்ந்த ஆபரணத்தை காணோம்.


ஆனால் அவன் விவரம் எதுவும் கேட்பதற்கு முன் பொன்னாச்சி முந்திக் கொண்டாள் .

'சுவாமி  நமது அரங்கன் ஆலயத்தில் ஏதாவது குறைபாடா, கஷ்டமான சமயமா, ஏதாவது தட்டுப்பாடா ?''

''என்ன உளறுகிறாய் நீ.  அப்படி ஒன்றும் எனக்கு தெரியாதே''

' எனக்கென்னவோ  அங்கே  நிர்வாகத்திற்கு பணத்தட்டுப்பாடோ  என்ற சம்சயம். அதை வெளியே சொல்லி யாசகம் கேட்க தயக்கமோ என்று தோன்றுகிறது சுவாமி''

''என்னம்மா நீ சொல்கிறாய்.  ஏன் உனக்கு இப்படி எல்லாம் தோன்றுகிறது இப்போது?'' என்கிறான் தனுர்தாசன் 

''நாம் அடிக்கடி ஸ்ரீ ராமானுஜர் ஆஸ்ரமம் செல்கிறோம். அங்கே அனைவரையும் நமக்கு தெரியும்.  அந்த ஆலய நிர்வாகம் அவரால் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.   இன்று ஒரு அதிசயம் நிகழ்ந்ததே இங்கு.''

''என்ன சொல் பொன்னாச்சி. என் ஆவலைக் கிளைப்புகிறாய்''

''ராமானுஜரின் ஆஸ்ரமத்தை சேர்ந்த ஒரு சந்நியாசி ஜன்னல் வழியாக உள்ளே குதித்து வந்தான். வீட்டில் உள்ள நகை ஆபரணங்கள் எல்லாம் எடுத்து மூட்டை கட்டினான். அவனைப் பார்த்தல் திருடனாக தெரியவில்லை. என் உடலைப் பார்த்தான். நான் தூங்குவது போல்  ஒரு பக்கமாக சாய்த்து படுத்திருந்தேன்.  என் முகத்தில் தெரிந்த ஒரு காது தோடு, ஒரு மூக்குத்தியை வேறு கழற்றினான்.  பாவம் கழற்ற கூட தெரியவில்லை. நான் பேசாமல் இருந்தேன்.   இதனால் தான்  ராமானுஜர்  ஆஸ்ரமத்தில் பணத்தட்டுப்பாடோ  என்று தோன்றியது.''''

''ஓ  இவ்வளவு நடந்திருக்கிறதா இங்கு. சரி  நீ அப்புறம் என்ன செயதாய்?''

''பாவம் அவன் இன்னொரு பக்க மூக்குத்தி, தொடையும் கழற்றி கொண்டு போகட்டும் என்று திரும்பி படுத்தேன்.'''

''அப்புறம் ''

பொன்னாச்சி சிரித்தாள்.  ''பாவம் அந்த சந்நியாசி நான் விழித்துக்கொண்டு கூச்சல் போடுவேனோ என்று பயந்து ஒரே ஓட்டமாக ஜன்னல் வழியாக மூட்டையை தூக்கிக் கொண்டு ஓடி விட்டான் ''

''நீ ஏன் அப்படி செயதாய்?  பாவம்  அவனை பயமுறுத்தி விட்டாயே? அடாடா  நம் ஆச்சார்யருக்கு உதவ முடியாமல் போய் விட்டதே. இப்போது என்ன செய்வது ?''

''ஐயா நான் அவனை பயமுறுத்த வில்லை.  அவன் மற்றொரு பக்க நகைகளையும் கழற்றிக்கொள்ளட்டுமே என்று தான்   திரும்பி படுத்தேன்.  அவன் பயந்து போய் ஓடிவிட்டான்.''

''உன் உலக பொருள்கள் மீதான பாசம்  உன்னை இப்படி செய்ய விட்டிருக்கிறது. உன் எல்லா நகைகைளயும் அவன் எடுத்து செல்ல அனுமதிக்காமல் விட்டு விட்டாய். நாம்  ஒரு மஹா புருஷருக்கு சமய  உதவ தவறிவிட்டோம்''

''ஆம் என் தவறு தான்.  இப்போது என்ன செய்வது ?''

இதெல்லாம் ஜன்னலுக்கு வெளியே  இருளில் பதுங்கி இருந்த சிஷ்யனுக்கு காதில் விழுந்தது. ஆச்சரியப்பட்டான். எவ்வளவு அபூர்வ  தம்பதிகள் என்று மானசீகமாக  வணங்கினான்.  நேராக  இரவு  ராமானுஜர்  ஆஸ்ரமத்தில் அவர் அறை  வாசலில் நின்றான். ராமானுஜர் உறங்கவில்லை. அவன் வருகைக்காக காத்திருந்தார்.  

''வா  அப்பனே . நான் சொல்லியவாறே செய்தாயா?  . சொல் என்ன நடந்தது?   சிஷ்யன் சகலமும் அப்படியே ஒப்பித்தான்.

மறுநாள் காலையில் ஆசார்யன்  சிஷ்யர்கள் அனைவரையும் அழைத்து நடந்ததை சொல்ல சொன்னார். சிஷ்யன் அப்படியே அனைவர் முன்னிலையிலும் தான் செய்ததை, அங்கு நடந்ததை சொன்னான்.

''பிள்ளைகளே,  நீங்கள் சாதாரணமான  ஒரு மதிப்பற்ற வஸ்திரத்தை மற்றவன் உடுத்திக்கொண்டதற்கு எவ்வளவு பற்றுதலோடு சண்டை பிடித்தீர்கள். தனுர் தாசனை நான் ஏன் அருகில் வைத்துக் கொள்கிறேன் என்று  வெறுப்புணர்ச்சி கொண்டீர்கள். இப்போது பார்த்தீர்களா, கேட்டீர்களா அந்த புண்ய தம்பதிகள் மனதி. விலையுயர்ந்த நகைகள் ஆபரணங்கள் அனைத்தையுமே  பற்றின்றி ஆஸ்ரமத்திற்கு ஆலயத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு இருவரும் காணிக்கையாக்க எண்ணம் கொண்டவர்கள் என்று.  இது என்ன நாடகமா ?  சொல்லுங்கள்''  என்கிறார்.

அன்று முதல்  ராமானுஜரின் சிஷ்யர்கள் திருந்திய உள்ளங்களோடு  அன்பு மயமாக ஒற்றுமையோடு வைணவ முன்னேற்றத்துக்கு அவருக்கு உதவினார்கள் என்று சொல்லவே வேண்டாம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...