Sunday, November 4, 2018

PESUM DEIVAM



பெரியவா கொண்டாடிய தீபாவளி
J.K. SIVAN

இந்த தீபாவளி நன்னாளில் எண்ணம் மகா பெரியவா பரமாச்சார்யாவின் மேல் போகவில்லையென்றால் தான் ஆச்சர்யம்.
நாம் கொண்டாடுகிறது போல் தீபாவளி மஹாபெரியவாளுக்கும் உண்டு. காஞ்சியில் கொண்டாடினார். ஆனால் நாம் கொண்டாடுவதைப் போலவா அவர் கொண்டாடுவார், நமக்கு புது வஸ்திரம், பக்ஷணம், வருவோர் போவோர் பட்டாசு, அவ்வளவோடு சரி. பெரியவா என்ன பண்ணினார்?

ஒரு தடவை காஞ்சி மடத்தில் ராஜப்பா குருக்களை கூப்பிட்டு ''நீ என்ன பண்றே, சைக்கிளை எடுத்துண்டு போ, காஞ்சிபுரத்தில் எங்கெங்கேயெல்லாம் சிவலிங்கம் வெட்டவெளியில், மரத்தடியில், மதகடியில், வாய்க்கால், ஆத்தங்கரை, வயலிலே, தெருவிலே இருக்கோ பார்த்து விவரம் கொண்டுவா'' என்கிறார். அது என்னென்ன சிவலிங்கம், எந்த பக்கம் பார்த்துண்டு இருக்குன்னு காஞ்சிபுராணத்தில் பார் இருக்கும். பூஜா விவரங்கள் நடந்தால் அதையும் கொண்டுவா'' என்கிறார். ராஜப்பா விவரம் சேகரித்துக்கொண்டு வந்தார்.

உடனே இந்த ''வானம் பார்த்த சிவலிங்கங்களுக்கு '' ஆலய புனருத்தாரணம் பண்ண, வரும் பக்தர்களிடம் கேட்டுக்கொண்டார். ஒருவேண்டாம் சிவலிங்கங்களை சுற்றி மூன்று பக்கம் சுவர், மேலே ஒரு கூரை, வாசல் கதவு. இப்படி 15-20 குட்டி பழைய சிவலிங்க கோவில்கள் உருவாயின. தினசரி பூஜை, நைவேத்தியம், விளக்கு ஏற்பாடுகள் நடந்துவிட்டது.

காஞ்சிபுரத்தில் 140 சிவன் கோவிலிலும் சிவனுக்கு தீபாவளி அன்று கங்காஜல அபிஷேகம், புது வஸ்திரம், ஒரு கிலோ இனிப்பு பூந்தி, ஒரு கிலோ காராபூந்தி நைவேத்தியம் பண்ண பெரியவா ஏற்பாடு. எப்படி? 100 பேரை நாலு க்ரூப் பாக பிரித்து 25 பேர் ஒரு க்ரூப்பிலே இந்த அபிஷேகம், பூஜை, வஸ்திரம், ஸ்லோகம், ஸ்தோத்ரம் நைவேத்தியம் எல்லா செய்ய வேண்டும். அப்படியே செய்தார்களே.

மேலே சொன்ன வானம் பார்த்த சிவலிங்கங்களில் மூன்றுக்கு மேலே கூரை. மற்றதெல்லாம் உண்மையிலேயே வானம் பார்த்தது. மழையில் வருண அபிஷேகம். எல்லா கோவில் அபிஷேகமும் முடிந்து நாலு க்ரூப்பும் பெரியவாளுக்கு விபூதி பிரசாதம் எடுத்து சென்றார்கள். அதுவரை பிக்ஷையை பெரியவா தொடவில்லை. அந்த 130 கோவில் விபூதியையும் மேலே பூசிக்கொண்டு பெரியவா அன்று பழனியாண்டி.

பல வருஷங்களாக இந்த தீபாவளி அபிஷேக வைபவம் தொடர்ந்து நடக்கிறது. இப்போது பெரியவா அஷிஷ்டானத்தில் விபூதி பிரசாதம் சமர்ப்பிக்க படுகிறது. கோவில்கள் புனருத்தாரணம் பெறுகிறது. தீபாவளி புது வேஷ்டி புடவைகள் சிவனுக்கும் அம்பாளுக்கும் சார்த்தப்படுகிறது. அந்தந்த கோவில்களில் காத்திருக்கும் சிறுவர்களுக்கு பக்ஷண பிரசாதம் விநியோகம் நடக்கிறது.
அந்த வருஷம் தீபாவளி. மேட்டூர் சுவைகள் கங்கையிலிருந்து நிறைய கங்கா ஜலம் காஞ்சி மடத்துக்கு
கொண்டுவந்தார்.

பெரியவா ராஜப்பா குருக்களிடம் '' நீ மேட்டூர் ஸ்வாமியோடு கங்கைகொண்ட சோழபுரம் போ. அங்கே குருக்கள் வயதானவர். நீ அவருக்கு உதவு. ராஜேந்திர சோழன் கட்டின பெரிய சிவலிங்கம் இருக்கு அதுக்கு அபிஷேகம் பண்ணு '' என்கிறார். குருக்கள் 11 பெரிய கலசம் கங்கா ஜலம் நிரப்பி , கும்பகோணத்திலிருந்து வந்த சந்தனம் கரைத்து கொஞ்சம் சந்தன அபிஷேகம், கங்காஜல அபிஷேகம் பண்ணுகிறார். உடையார் பாளையம் ராஜாவை பெரியவா சொல்லியபடி வரவழைத்து சாஸ்த்ரோக்தமான பூஜையில் அவர் கலந்து கொள்கிறார்.

எங்கிருந்தோ 11 கருடன் மேலே வட்டமிட்டது கண்கொள்ளா காட்சி. ஒன்றை பார்ப்பதே அபூர்வம்.

பிரகதீஸ்வரர் பிரசாதம் பெரியவாளுக்கு கொண்டு சென்றார். அப்போதிலிருந்து ஐப்பசி அன்னாபிஷேகம் கங்கை கொண்ட சோழபுரத்தில் விமரிசையாக நடக்க பெரியவா தீபாவளி அன்று துவங்கி வைத்தார். இன்றும் கோலாகலமாக நடக்கிறது.



ஒரு சிவராத்திரியில் நான் நண்பர்களோடு பலகோவில்கள் சென்று தரிசித்து நாடு ராத்திரி கங்கை கொண்ட சோழபுரம் ப்ரஹதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்ததை கண்டு களித்த பாக்கியசாலி..

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...