Monday, November 26, 2018

ramayanam


இதிகாசம்: 
ராமாயணம் 
                                      
           மறவாத  சில பெயர்கள் J.K. SIVAN  


46.  ஸ்ருத கீர்த்தி.   கல்யாண  பத்திரிகையில்  கூட்டத்தில்  காணப்படும் ஒரு  உறவினர் பெயர் போல்  ராமாயணத்தில் அகப்படும் பெயர்  ஸ்ருத கீர்த்தி.  இதோடு நிறுத்திவிட்டால். நீங்கள் என்ன கேட்பீர்கள் என்று தெரியும்.  ''யார் இது?''   அந்த நிலைமை  ஜனக மஹாராஜனின் இன்னொரு பெண்ணுக்கு. அவளைத்தான்  சின்னத் தம்பி கடைசி தம்பி  சத்ருக்னனுக்கு மனைவியாக திருமணம் செய்து வைத்தார்கள். அதற்கு மேல் அவளைப்பற்றி எனக்கு தெரியவில்லை. தெரிந்தால் எழுதிக் கொள்ளுங்கள்.

47. கும்பகர்ணன்.  -  ராவணனின் '' பெரிய   ''தம்பி''.  வருஷத்தில் பாதி எந்த கவலையுமின்றி தூங்குபவன். நல்லவன். ராவணனுக்கு நல்ல புத்தி சொல்லி கேட்காவிட்டாலும் அவனுக்காக தன்  உயிரை விட்டவன். 
   
48  கரன் . கொடிய  ராக்ஷஸன்.  ராவணனின் தம்பி. சூர்ப்பனகையின் அண்ணன்.  தண்டகாரண்யத்தில்  முனிவர்களையும் ரிஷிகளையும் துன்புறுத்துவதில் நல்ல சர்விஸ் . ராவணனிடம் பென்ஷன் வாங்காமலேயே  ராமனால்  கொல்லப்பட்டவன்.

49 விபீஷணன்-  ராவணனின்  நல்ல தம்பி. நல்லது எது, தவறை திருத்திக்கொள்  என்றெல்லாம் ராவணனுக்கு  புத்தி சொல்லியும் அவனால் தூஷிக்கப்பட்டு மனம் வெறுத்து  ராமனை சரணடைந்தவன்.  சிரஞ்சீவிகளில் ஒருவன். 

50.  ஜாம்பவான் -  கரடி ராஜா.   சீதாவை தேட எங்கு செல்லவேண்டும்  என்று  முன்பாகவே  கோடி காட்டியவன்.  அனுமனின்  பலத்தை  அவனுக்கு  அறியப்படுத்தியவன்.  புத்திமான்.    அனுமனை  இலங்கைக்கு  தாவிச்செல்ல  ஊக்கமளித்தவன்.  ராமாயண காலத்திலிருந்து  கிருஷ்ணன் காலத்திலும் இருந்த ஒரு சிலரில் முக்யத்வன்.  கிருஷ்ணனின் மாமனார்.  தனது மகள்  ஜாம்பவியை கிருஷ்ணனுக்கு மணமுடித்தவன்.

51.  சூர்ப்பனகை.  (கூரிய நீண்ட முறம் போன்ற நகங்களை உடையவள்).  பெரிய ராக்ஷஸி.  ராவணனின் தங்கை.  தண்டகாரண்ய  ராணி. ராமன் மேல் மோகம் கொண்டவள்.  சீதையை  ராவணன் அபகரிக்க காரணமானவள் .  ராமாயண காவியத்தில் மிக முக்கியமான ஒரு பாத்திரம்.  லக்ஷ்மணனால்  பங்கப்பட்டவள்.

52.    சதானந்தர்  -   மிதிலை அரசர்  ஜனகரின்  ராஜ குல குரு. 

53.    குகன்  -  ஸ்ரிங்கி பேரம் என்ற கங்கை கரை பிரதேச  வேடுவர் குல அரசன். படகோட்டி.  ராம லக்ஷ்மணன் சீதை எல்லோரையும்  கங்கை நதி கடக்க உதவியவன்.  ராமனால் ஒரு சகோதரனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட  நல்ல பக்தன்.

54.  நளன்  -   இந்த நளன்  வேறு.  தமயந்தி கணவன் அல்ல இவன்.  வானர வீரன்.  சுக்ரீவன் படையில் ஒரு தளபதி.   ஒரு பெரிய இன்ஜினீயர்.  இன்றளவும் போற்றப்படுபவன்.  தனுஷ்கோடியிலிருந்து இலங்கைக்கு  பாலம் அமைத்து  வானரசேனையோடு  ராமா லக்ஷ்மணர்கள் இலங்கை செல்ல வைத்தவன் . இவன் கட்டிய பாலம் இன்றும் கடலடியில் அற்புதமாக காணப்படுகிறது. 

55.  நீலன்  -  இன்னொரு வானர வீரன்.  நளனோடு  இணைந்து ல் சேது பாலம் அமைத்தவன்.

56.  கங்கை  -  நீராக இன்றும் நமக்கருள் புரிந்து  பாபங்களை அகற்றுபவள். ஹிமவான்  புத்ரி.
சிவபெருமானால் பூமிக்கு கொண்டுவரப்பட்டவள்.

57.  கபந்தன்.  -  எண்சாண் உடம்புக்கு  வயிறே  பிரதானமாக வயிறும் இரு கைகளும் மட்டும் கொண்ட பெரிய  ராக்ஷஸன்.  வனத்தில்  ரிஷிகள் முனிவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் பிடித்து உண்பவன்.  ராமனால் கொல்லப்பட்டு, இந்திரனால்  பெற்ற  சாபம் நீங்கியவன்.  சாபம் நீங்கிய கபந்தன்  ராம லக்ஷ்மணர்களை  சுக்ரீவனிடம் அனுப்புகிறான்.

58   மேகநாதன்  -  இந்திரஜித் என்று பெயர் கொண்ட ராவணன் மகன். இந்திரனை  ஜெயித்தவன்.  மாயமாக  மறைவான். ராவணன் பெருமைப்பட்ட  வீர மகன். 



                                



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...