ஸ்ரீ ரங்கம் புது உணர்வும் உருவும் பெற்றுவிட்டது. ஸ்ரீ ராமானுஜர் வந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவர் பெருமை மஹிமை பரவ ஆரம்பித்து விட்டது. அதிசயமான, இந்த அபூர்வ மனிதர் ஞானி, யோகி, யார் என்று வைணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரைப் பார்க்க ஸ்ரீரங்கம் வருவது வழக்கமாகி விட்டது. ஒருமுறை அவரைக் கண்டவர்கள் அவரை விட்டு பிரிய மனமில்லாமல் தேனில் மயங்கி பூவிலே வாசம் செய்த வண்டாகி ஸ்ரீரங்கத்திலேயே தங்கி விட்டார்கள். ஸ்ரீரங்கம் பருத்து விட்டது. எங்கும் வைணவம், வைணவர்கள் என்ற நிலை வந்து ஆச்சர்யத்தின் மேல் ஆச்சர்யமாக காட்சியளித்தது. அவரது பேச்சு, உபதேசம், குணம், பக்தி தோய்ந்த பிரசங்கங்களை மக்கள் விரும்பி மாம்பழத்து வண்டாக அவரை துளைத்தார்கள். சுற்றி வளைத்தார்கள்.
ஒருமுறை ஸ்ரீராமாநுஜர் ஸ்ரீராமாயண பிரவசனம் செய்கையில் '' விபீஷண சரணாகதி'' பற்றி கூறிக் கொண்டிருக்கிறார். இடையில் அவரது சிஷ்யன் பிள்ளை உறங்காவில்லி தாசருக்கு ஒரு சந்தேகம். தாங்க முடியவில்லை. கை கூப்பி எழுந்து நின்றார்.
“ஸ்வாமி! விட வேண்டியவைகளை விட்டு, பெருமாள் திருவடிகளையே எல்லாமாகப் பற்றுவதற்காக விரைந்து வந்து ஆகாயத்தில் நின்ற விபீஷணனை சந்தேகித்து, அடிப்போம் நொறுக்குவோம் என்று புறப்பட்டார்களே ஸ்ரீராமனின் குழுவினர், அப்படியிருக்க வீடு வாசல் மனையாள் இவற்றோடு கூடின அடியேன் நீசனேன் உமது கோஷ்டியில் நிலை பெற்று இருக்க முடியுமோ? அடியேனும் உய்வு பெற முடியுமோ என்று ஐயத்துடன் உருக்கமாக கேட்டார். .
அதைக் கேட்ட எம்பெருமானார், “பிள்ளாய் அஞ்ச வேண்டாம்! கண்டிப்பாக உய்வு பெறலாம் அந்த பேற்றை நான் பெற்றேனாகில் நீரும் பெறுகிறீர். என் ஆசார்யன் பெரிய நம்பி பரமபதம் பெற்றால் அடியேன் பெறுகிறேன் .ஆளவந்தார் பெற்றால் பெரியநம்பிக்கும் உண்டு . இவ்வாறே நம்மாழ்வார் பெற்றாராகில், நாதமுனிக்கும் உண்டு . நம்மாழ்வார் தாமும் "அவாவற்று வீடு பெற்ற " என்று தம் வாக்காலே அருளிச்செய்த படியால் அவர் பெற்றது உறுதி . பகவானும் பாகவதர்களும் உள்ள ஞான குரு பரம்பரையில் சங்கிலித் தொடரில் நாம் இணைந்துள்ளோம்.
ஆழ்வார் காட்டும் ஆதிபகவானும், சாதாரண வாழ்க்கை நடத்தும் பாகவதர்களும் ஒரு கோர்வையாக இத் தொடரில் பிணைந்து இருக்கிறார்கள் என்பதை ஏன் மறந்தீர்?
அது ராம கோஷ்டி! அங்கு பல விசாரணைகள் நடந்தன . இது ராமாநுஜ கோஷ்டி.இங்கு எந்த விசாரணையும் கிடையாது. பாக்கு மரத் தோப்பில் பாயும் நீரை வாழையும் உண்டு வாழும்.
விபீஷணனோடு வந்த நால்வரை, வானரர் தடுத்த போது தனித்துப் பிரித்து தடுக்கவில்லையே.
“ஏத்தியிருப்பாரை வெல்லுமே, மற்று அவரைச் சாத்தியிருப்பார் தவம்”. உமது தவம் என் தவத்துக்கு மேலானது ‘ என்ற ராமானுஜர் பதிலைக் கேட்டு உள்ளம் பூரித்தார் தனுர் தாசர்.
"நன்றுந் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றம்
எடுத்தானடி சேரிராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி."
"நன்றுந் திருவுடையோம் நானிலத்தில் எவ்வுயிர்க்கும்
ஒன்றும் குறையில்லை ஓதினோம் - குன்றம்
எடுத்தானடி சேரிராமானுசன் தாள்
பிடித்தார் பிடித்தாரைப் பற்றி."
தனுர்தாசர் இயற் சாத்து என்ற பாசுர தொகுப்பில் பாடியது . தனது குரு ராமானுஜர் தாள் பற்றினவர்களின் தாளை பற்றிக்கொண்டால் சிறப்புறுவது பற்றி. ராமானுஜர் அடியார்க்கடியார் திருப்பாதம்..... தொண்டரடிப் பொடி க்கே மஹிமை உண்டே..
எந்த நிலையிலிலிருந்தாலும் மனிதன் பொறாமை, அகம்பாவம் என்ற குறையிலிருந்து விலகுவது கடினம். ராமானுஜருடன் அறிவுரை பெற்றாலும் அவரது சிஷ்யர்களில் சிலருக்கு, இல்லை பலருக்கு குருநாதர் ப்ராமணரில்லாத தனுர் தாசரிடம் ஒரு அபிமானம் இருப்பது பிடிக்கவில்லை. ஏன் ஆசார்யன் அவரிடம் அப்படி ஒரு பற்றுதல் கொண்டிருக்கிறார்? அவர்களுக்கு தனுர் தாசர் மீது வெறுப்பும் பொறாமையும் வளர்ந்தது. இது ஆச்சர்யனுக்கு தெரியாமலா போகும். என்ன நடந்தது பாருங்கள்.
எந்த நிலையிலிலிருந்தாலும் மனிதன் பொறாமை, அகம்பாவம் என்ற குறையிலிருந்து விலகுவது கடினம். ராமானுஜருடன் அறிவுரை பெற்றாலும் அவரது சிஷ்யர்களில் சிலருக்கு, இல்லை பலருக்கு குருநாதர் ப்ராமணரில்லாத தனுர் தாசரிடம் ஒரு அபிமானம் இருப்பது பிடிக்கவில்லை. ஏன் ஆசார்யன் அவரிடம் அப்படி ஒரு பற்றுதல் கொண்டிருக்கிறார்? அவர்களுக்கு தனுர் தாசர் மீது வெறுப்பும் பொறாமையும் வளர்ந்தது. இது ஆச்சர்யனுக்கு தெரியாமலா போகும். என்ன நடந்தது பாருங்கள்.
எல்லோருமே காவி உடுப்பவர்கள் என்பதாலும் எல்லோருமே அறையில் ஒரு வஸ்திரம் தயாரிப்பவர்கள் என்பதாலும் சிஷ்யர்கள் ஆற்றில் குளித்து அவரவர் வஸ்திரத்தை துவைத்து உலர்த்துவார்கள். ஸ்னானம் முடிந்து வருவதற்குள் காற்றில் வெயிலில் வாஸ்தம் வளர்ந்திருக்கும். உடுத்து நித்ய கர்மாநுஷ்டானங்கள் முடித்து ஆஸ்ரம திரும்புவார்கள்.
ஒருநாள் ஆசார்யன் ஒரு சிஷ்யனை அனுப்பி கரையில் அவரவர் உலர்த்திய வஸ்திரங்களை மாற்றி மாற்றி வைக்கும்படியாக சொன்னார். அவனும் அவ்வாறே செய்தான். எல்லோருமே அவரிடம் கற்றுணர்ந்தவர்கள். சந்யாசிகள். இருந்த போதிலும் சிலர் தங்களது வஸ்திரங்களை வேறு யாரோ மாற்றி அணிந்திருப்பது தெரிந்து ரகளை. எல்லோர் வஸ்திரமும் மாறி இருந்ததால் ஒருவர் மற்றவரை கோபமாக திட்டிக்கொண்டிருந்தார்கள். சந்நியாசி சகலமும் துறந்தவன். உயர்ந்த ஞானம் தேடுபவனின் சாதாரண காவித் துணி பற்றுதல் சிரிப்புக்குரியதாயிற்று.
ராமானுஜர் இன்னொரு காரியமும் செய்தனர். ஒருநாள் மாலை தனுர்தாசனை அழைத்து வரச்சொல்லி அவனை ஸ்ரீரங்கம் ஆலயத்தில் இரவு வெகுநேரம்
அவனை அங்கே வேலை வாங்கும் ஒரு காரியத்தை செய்ய அனுப்பினார். அவன் ஆலயம் சென்ற பிறகு அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஒரு சீடனை இரவில் தனுர் தாசன் வீட்டுக்கு அனுப்புகிறார். ராமானுஜர் கட்டளைப்படி அந்த சீடன் தனுர் தாசன் வீட்டில் இரவு சென்று அவனது மனைவி நகைகள் பணம் ஆபரணங்கள் எல்லாவற்றையும் ஒன்று விடாமல் அவன் மனைவியிட
மிருந்தும் அபகரித்துக் கொண்டு வரவேண்டும்.
சிஷ்யன் சத்தம் போடாமல் உள்ளே நுழைவதை முதலில் பொன்னாச்சி பார்த்து விட்டாள் . வந்தவன் திருடனாக தெரியவில்லையே. பார்த்தாலே காவி உடுத்த சந்நியாசியாக அல்லவோ இருக்கிறது. திருடன் மாதிரி இல்லை அவன் செய்கையும். அவன் பெட்டிகளை குடைந்து கண்ணுக்கு அகப்பட்டதை எல்லாம் மூட்டை கட்டுவதும் பார்த்தாள். திருட்டு தொழிலுக்கு அவன் கற்றுக்குட்டி என்பது புரிந்தது. எதற்கு ஒரு சந்ந்யாஸி நம் வீட்டில் வந்து திருடுகிறான்.? சீடன் பிறகு பொன்னாச்சி படுத்திருக்கும் அறைக்கு வந்தான். அவள் தூங்குவதைப் போல் பாசாங்கு செய்தாள். வலது பக்கம் சாய்ந்து படுத்திருந்த அவள் இடது காது மூக்கு நகைகளை மெதுவாக கழட்டினான். அவள் விழித்துக்கொள்ளாமல் தூங்குவது போலவே இருந்தது அவனுக்கு சௌகரியமாக போய்விட்டது. அவன் அவற்றை திருடியதும். தூக்கத்தில் திரும்பினாள். அவன் ஓரமாக போய் நின்று கொண்டான். அவள் இப்போது இடப்புறம் திரும்பி படுத்ததால் எங்கே முழித்துக் கொண்டு கத்தப்போகிறாளோ என்று ஜன்னல் வழியாக திருடிய ஆபரணங்கள் மூட்டையோடு
வெளியே குதித்து சிஷ்யன் வெளியேறி விட்டான். ஸ்ரீ ராமானுஜர் அவனுக்கு இட்ட கட்டளைப்படி அவன் அங்கே ஜன்னல் ஓரமாக ஒளிந்து கொண்டு தனுர் தாசர் வந்தபின் வீட்டில் என்ன நடந்தது என்று தெரிந்து கொண்டு வரவேண்டும்.
எதிர்பார்த்தபடி தனுர் தாசர் வெகு நேரம் கழித்து இரவு வீடு திரும்பினார். வழக்கமாக தூங்கும் பொன்னாச்சி ஏன் இன்று இன்னும் தூங்கவில்லை.? உள்ளே நுழைந்த தனுர் தாசன் தனது வீட்டில் பெட்டிகள் ஏன் திறந்து கிடக்கின்றன. வழக்கமாக வைக்கும் பாது காப்பு பானை உருண்டு கிடக்கிறதே.
பொன்னாச்சியை ஆச்சரியத்தோடு, கவலையோடு கேட்கிறார். என்ன உன் முகத்தில் நான் அளித்த மூக்குத்தி ஒரு காது தோடு காணோம்? என்ன ஆயிற்று. ஏன் வீடு ஏதோ போல் இருக்கிறது. சொல்? என்கிறார். கொஞ்சம் கோபம் வேறு வந்துவிட்டதால் மீசை துடிக்கிறது. கண்கள் சிவக்கிறது. மிகச்சிறந்த மல்லன். பலசாலி. என்ன நடந்தது வீட்டில் ? என வினவுகிறார் தனுர் தாசன்.
பொன்னாச்சி பதிலளிக்கிறது நம் காதிலும் விழட்டும்.
No comments:
Post a Comment