Thursday, November 22, 2018

MORAL STORY



         
 பொன்மன ராஜா  J.K. SIVAN 


ஒரு குட்டிக்கதை  சொல்லட்டுமா?

ரொம்ப காலத்துக்கு முன்னால்  ஒரு  ராஜா.

  
 தர்மிஷ்டன்.  எல்லோரும்  ''இந்த மாதிரி ஒரு ராஜா நமக்கு கிடைச்சதுக்கு  நாம்  புண்ணியம் செய்த
வர்கள் என்று பேசிக்கொண்டார்கள் தவிர   ''சே  இப்படி நமக்கு ஒரு ராஜாவா.  சரியான அவமானச்சின்னம் ''  என்று இப்போது மாதிரி பேசவில்லை.   பசிக்கு உணவு, பண்டிதர்களுக்கு பரிசில் , பிரபுக்களுக்கு பட்டம்,  ஆஹா, யாருக்கு எது வேண்டுமோ அதை தரும் கர்ண  வள்ளல் இந்த ராஜா''  என புகழ்ந்தனர்.

ஒருநாள்  அந்த நல்ல ராஜா யோசித்தான். 

''நான் முட்டாளா?  வாரி வாரி கொடுத்துக்கொண்டே இருக்கிறேனே
 இதற்கு முடிவு? எல்லோருமே தேவையில் தான் இருக்கிறார்களா? திரும்ப திரும்ப
பார்த்த முகமாகவே
வந்து கொண்டே இருக்கிறார்களே! இனி யாருக்கு தேவையோ அவர்களுக்கு மட்டும் உதவலாமா? தான தர்மத்தை நிறுத்தலாமா?''

மந்திரியை கூப்பிட்டான்.   ' மந்திரி, நமது ராஜ்யத்தில் எவன் மிக ஏழையோ அவனை என்னிடம்  அழைத்துவா?'' என்றான்.  மந்திரி எங்கெல்லாமோ அலைந்து ஒரு வாரத்துக்கு பிறகு வந்தான்.

'ராஜா,  நமது ராஜ்ய எல்லைக்கு அருகே ஒரு காட்டில், ஒரு சிறு குன்று. அதில் ஒரு ஏழை . தலைக்கு மேலே கூரை இல்லை.  துணி கூட இல்லை. இலை , தழையை தான் சுற்றிக்கொண்டிருந்தார். ஆகாரம் கூட  கீழே விழுந்து கிடைக்கும் காய்ந்த பழங்கள், காய்கள், வருவோர் போவோர்  ஏதாவது கொடுத்தால் அது உணவு. . ''

"அடடா, நமது தேசத்தில் இப்படி ஒரு ஏழையா? உடனே நானே  போய்  அவரை பார்க்கிறேன்''.  ராஜா குதிரை மேல் போனான்.  அந்த சந்நியாசி கண்ணை மூடிக்கொண்டு ஒரு  குன்றின் மேல் த்யானம் செயது கொண்டிருந்தார்.  வெகு நேரம் காத்திருந்தான் ராஜா. சந்நியாசி கண் திறந்தார்.


''யாரப்பா  நீ ?''
''நான் இந்த ஊர் ராஜா.   சுவாமி,  உங்க

ளது
 இந்த
ஏழ்மை  நிலை வருத்தமாயிருக்கிறது.    நான்  ஒரு நல்ல ஆடை தருகிறேன் உடுத்திக் கொள்ளுங்கள்'' என்றான்.

சந்நியாசி சிரித்தார்.

''எந்தமாதிரி வீடு வேண்டும்.சொல்லுங்கள்
தருகிறேன்''  சந்நியாசி பேசவில்லை சிரித்தார்.

''வேளா  வேலைக்கு நல்ல ஆகாரம் ஏற்பாடு செயகிறேன். எந்த மாதிரி உணவு பிடிக்கும்?'' -  மீண்டும் சிரிப்பு

''என்னய்யா  பேசவே மாட்டேன் என்கிறீர். பேசுங்கள்''  என்றான் ராஜா

''ராஜா, நீங்கள்
தப்பாக புரிந்துகொண்டுவிட்டீர்கள்.      இந்த நாட்டில்  நீங்கள் நினைக்கும் என்னைக் காட்டிலும் ஏழை ஒருவன் இருக்கிறான்.   என்னைப் பொறுத்தவரையில்  நான் ஏழையல்ல. செல்வந்தன். மண்ணையே கூட  பொன்னாக மாற்ற முடியும்''

ராஜா வாயைப் பிளந்தான். '' என்ன ?  என்னுடைய நாட்டில் இதை விட இன்னும் ஏழ்மையில் ஒருவனா??  நீங்கள்'  மண்ணை பொன்னாக்குவீர்களா?.  அடாடா  ..எனக்கு  அது வேண்டுமே..''

''ஆமாம்.   ஆனால் அதற்கு  சில விதிகளை  நீ  பின் பற்றவேண்டும்''என்கிறார் சந்நியாசி.

''ஆஹா அப்படியே'' -  ராஜா.

''சூரிய உதயத்துக்கு முன்பு, சூரிய அஸ்தமன சமயம் இருவேளை தினமும் ஒரு வருஷ காலம் இங்கு வந்து என்னோடு இரு '' என்று சன்யாசி சொன்னபடியே ராஜா செய்தான்.    ஒரு வருஷகாலமும் சந்நியாசி பேசாமல் சிரித்து கொண்டு அன்பாக ராஜா அருகிலே உட்கார்ந்து த்யானம் செய்ய வைத்தார்.
அமைதியான மலைச்சாரல், கானகம், பறவைகள் நாதம், தென்றல், நிசப்தம், மரங்கள் இலைகளின்  அசைவின் ஓசை எல்லாமே ராஜாவை மாற்றிவிட்டது. ஒன்றல்ல மூன்று வருஷங்கள்  இவ்வாறு ஓடிவிட்டது.

ஒருநாள் சந்நியாசி ''ராஜா, நீ மறந்து விட்டாயா?  என்னைக் காட்டிலும் ஏழை எங்கே இருக்கிறான் என்று கேட்டாய்? மண்ணை பொன்னாக்குவது எப்படி என்றாயே?''

''குருவே  எனக்கு விடை கிடைத்து விட்டது. ''எனக்கு இன்னும் செல்வம் வேண்டும். தங்கம் வேண்டும் என்று உங்களையே  கெஞ்சினேன். நான் தான் அந்த ஏழை.  எல்லாமே எப்படி பொன்னாகிறது என்பதையும்  காலையில் மாலையில் இருவேளையும் கண்கூடாக பார்த்து அந்த ரகசியமும் தெரிந்து கொண்டு விட்டேன்'' என்றான் ராஜா .

''நீ போகலாம். உன் மனமே பொன்னாகி விட்டது'' என்கிறார் சந்நியாசி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...