நரசிம்மா ... ஆ ஆ ஆ -- 7 J.K. SIVAN
அமெரிக்காவில் பிலடெல்பியாவில் ஒரு அருங்காட்சி நிலையத்தில் எப்படி 2ம் 3ம் நூற்றாண்டு நரசிம்மர் போய் சேர்ந்தார்.. மதுராவில் ஒரு சிற்பி செதுக்கிய அழகிய நரசிம்மர். அடங்கிய புசுபுசு புருவம். அகன்ற மார்பு. அதில் தாழ்த்து மாதிரி ஒரு கவசம். மேலே அங்கவஸ்திரத்துக்கு இடையிலே அது தெரிகிறது. கௌஸ்துபமாக இருக்குமோ? அங்க வஸ்திரத்தத்தின் இரு நுனிகளும் இரண்டு தோள்களில். மடியில் ஹிரண்ய கசிபு ஒரு தொடையில் தலை மார்பு பாகம். இன்னொன்றில் இடுப்பு கால் பாகம். இடையில் பஞ்சகச்சம் அணிந்த இரணியன். அவன் வயிற்றை இரு கை நகங்களால் கீறும் நரசிம்மர்.
அது சரி. நரசிம்மருக்கு எப்படி அமெரிக்க மோகம். எல்லாம் நமது பணத்தாசை பகவானை விலை பேச செய்கிறது. எங்கே போய் முடியுமோ?
இன்னொரு நரசிம்மர் 9ம் நூற்றாண்டு சிலை, லிஜோ என்கிற மலை சரிவில் பிராம்பணன் என்கிற இந்தோனேசியா ஊரில் இருக்கிறா
நேபாளத்தில் காட்மாண்டு பள்ளத்தாக்கில் ரஜோபாத்யாய பிராமணர்களிடையே ஒரு வழக்கம். ஸ்ராவண கிருஷ்ணா பக்ஷ பஞ்சமி அன்று நரசிம்ம ஊர்வலம் நடத்துவார்கள்.
இதெல்லாம் விட ஒரு அதிசயம் பற்றி பேசுவோமா? 40,000 வருஷத்துக்கு முன்பு ஒரு நரசிம்மர். இவர் கொஞ்சம் வேறே மாதிரி இருக்கிறார். ஜெர்மனியில் ஹோலேன்ஸ்ட்டின் ஸ்டாடெல் என்ற இடத்தில் ஒரு குகையில் 1939ம் வருஷம் ஒரு நரசிம்மர் கண்டுபிடிக்கப்பட்டார். கிட்டத்தட்ட ஒரு அடி உயரம். ரெண்டு அங்குல அகலம். கொஞ்சம் கனமான தந்தத்தில் செதுக்கப்பட்ட நரசிம்மா? எந்த பழங்கால ஆதி வாசி சிற்பியோ எப்படி ஏதோ ஒரு மொக்கை கத்தியை வைத்து தந்தத்தில் செதுக்கி இருக்கிறான். 30-40 ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு என்று நரசிம்மன் வயதை கணக்கிடுபவர்கள் அந்த சிற்பிக்கு அப்போது எந்த கத்தி, ஆயுதம் கிடைத்திருக்கும். காட்டு யானையின் கொம்பை முறித்து அல்லவோ செதுக்கி இருக்கிறான். பலே ஆதிவாசி அவன்.
நரசிம்மன் தலை கிடைக்கவில்லை. தேடி அதே போல் ஒன்று பொருத்தினார்களாம் .ஆணா , பெண்ணா, சிங்கமா மனிதனா என்று இன்னும் பல பேர் ஆக்கிரோஷமாக வாதத்தில் ஈடுபடுகிறார்கள் போல் இருக்கிறது. தந்தத்தில் சிலை வடிப்பது, உருவம் செதுக்குவது இந்தியாவில் ஒரு சிறந்த கலை. அது எங்கே ஜெர்மனி போயிற்று. நரசிம்மன் உருவத்தின் இடது கரத்தில் 7 வர்ண பட்டைகள்....அது ஏழு சக்ரமா, சப்தவரிசையா, ஸ்வரமா, 7 கண்டங்களா? எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்? நர-சிம்மனின் வயது 32000 த்துக்கு குறைவில்லை என்று மட்டும் ஏகமனதாக அபிப்ராயம்.
ஒரே ஒரு முக்கியமான விஷயம். நாம் நமது அரும் பெரும் சிலைகளை, கல்வெட்டுகளை, சிற்பங்களை, மதிப்பதில்லை, அதை உடைக்கிறோம், செதுக்குகிறோம் அதன் மேல் நமது பேரை கல்லால் செதுக்குகிறோம், கிறுக்குகிறோம், இனிஷியலை பொறிக்கிறோம்.. சுண்ணாம்பு, சிமிண்ட் பூசுவதில் கெட்டிக்காரர்கள். அங்கே பாவம் தலை இல்லாத இந்த சின்ன தந்த உடலை பாதுகாத்து, அண்டை அசல் பிரதேசங்களை எல்லாம் அகழ்ந்து, சிங்கத்தலையை கண்டுபிடித்து ஓட்ட வைத்து பொருத்தம் பார்த்து சரியான பாகம் என்று ஆராய்ந்து பார்த்து நரசிம்மனை உலகுக்கு தருகிறார்கள்.
No comments:
Post a Comment