Thursday, November 8, 2018

PROVIDENCE




மாந்தருக்குள் ஒரு தெய்வம்
J.K. SIVAN

திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தது. சிலநாள் முன்னால் ரயிலில் போகும்போது ஒரு அருமையான ஆங்கில கதை படித்தேன். அது என்னவோ என் மனதில் ஓட்டிக்கொண்டுவிட்டது. அதை தமிழில் நம்மூர் ஆசாமி கதையாக்கித் தர ஒரு எண்ணம் எழுத்தாகியது.

வைத்யநாதன் பெயருக்கேற்றபடி ஒரு நல்ல டாக்டர். சர்ஜன். ஆப்பரேஷன் அவர் செய்தால் நல்ல ரிசல்ட் காரண்டீ. ஆக டாக்டர் கே.வி. என்றால் டிமாண்ட் எப்போதும்.

ஒரு நாள் ஒரு அவசர டெலிபோன் கால். வெளியே எங்கோ இருந்த டாக்டர் கிளம்பிவிட்டார் ஆஸ்பத்திரிக்கு. அர்ஜன்ட் ஆப்பரேஷன் ஒன்று அவரால் நடக்க வேண்டியதற்கு இன்னும் அரைமணி நேரம் தான் இருந்தது. எல்லா ஏற்பாடுகளும் நடந்து விட்டன. டாக்டர் எந்த நேரமும் வரலாம். ஏன் இன்னும் காணோம் ?.

இன்னும் முக்கால் மணிநேரத்தில் ஒரு பையனுக்கு அவசர ஆபரேஷன். பையனின் அப்பா குட்டி போட்ட பூனை. அங்கும் இங்கும் அலைந்து கொண்டு நிம்மதி இல்லை. கடியாரத்தையும் வாசலையும் பார்த்துக்கொண்டு பெருமூச்சு. சர்ஜன் டாக்டர் வரலையாமே? நர்ஸ்கள், யூனிஃபாம் ஆட்கள் அவசரமாக ஓடினார்கள். எல்லோரும் தியேட்டரில் குழுமிவிட்டார்கள். டாக்டர் வந்து அவசரமாக இறங்கினார் உள்ளே ஆபரேஷன் தியேட்டருக்கு ஓடும்போது அப்பா பிடித்து நிறுத்தினார்.

''என்ன டாக்டர் இவ்வளவு நாழி? எமெர்ஜென்சி கேஸ்ன்னாகூட இவ்வளவு லேட்டாவா வரது. என் பையன் உயிர் ஊசலாடிக்கொண்டு இருக்கிறதே இங்கே. கொஞ்சமாவது பொறுப்பு வேண்டாம்? பொரிந்து தள்ளிவிட்டார் அப்பா.

''மன்னிக்கணும் சார். நான் ஆஸ்பத்திரிலே இல்லே இன்னிக்கு. எனக்கு போன் பண்ணினாங்க அடுத்த கணமே ஓடிவந்துட்டேன். ரொம்ப தூரத்திலிருந்து வேகமாக வரேன். கொஞ்சம் அமைதியா இருங்க. நான் என் வேலையை உடனே ஆரம்பிக்கணும்''

''என்ன டாக்டர் பேசறீங்க. அமைதியாவா? உங்க பையனுக்கு இப்படி இருந்தா அமைதியாவா இருப்பீங்க.? உங்க பையன் சாவுக்கும் உயிருக்கும் இடையிலே மயிரிழையிலே தவிச்சா அமைதி பத்தி பேசுவீங்களா?''
பொரிந்து கொட்டினார் அப்பா.

அப்பாவுக்கு முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டு ஒரு பெரு மூச்சு விட்டு விட்டு, டாக்டர் கே. வி. ஆபரேஷனுக்கு தயாராகிவிட்டார். அப்பவும் கூட பொறுமையாக அப்பாவிடம், ''டாக்டர் என்பவன் உயிர் கொடுப்பவன் அல்ல. உயிரைக் காப்பாற்றுபவன். அந்த கடமை உணர்ச்சி எனக்குண்டு. வழி விடுங்கள். உங்கள் மகனை காக்க என்னாலான முயற்சி அனைத்தும் செய்வேன். கவலை வேண்டாம். பிரார்த்தனை செய்யுங்கள்.''

''ஹ்ம்ம். இதுலே உபதேசம் வேறே. வீடு பத்தி எரியும்போது பிடில் வாசிக்கிற கதை'' என்று முணுமுணுத்தார் அப்பா.

ரெண்டுமணி நேரம் ஆபரேஷன் முடிந்து டாக்டர் வெளியே வந்தார். ''உங்க பையன் பிழைத்து விட்டான்'' மேற்கொண்டு விஷயம் எல்லாம் நர்ஸ் அம்மா கிட்ட கேட்டுக்குங்க''. அப்பாவின் பதிலைக் கூட எதிர்பாராமல் டாக்டர் வேகமாக போய்விட்டார்.

அப்பாவுக்கு படு கோபம். நேராக நர்ஸ் அம்மா பாலாமணி கிட்ட போய் டேபிளை கையால் குத்தினார். ''என்ன டாக்டர் இவர். திமிர் பிடிச்சவர். ரெண்டு நிமிஷம் வெய்ட் கூட பண்ணாம பெத்த பிள்ளையை பத்தி என் கவலையை துளிக்கூட லக்ஷியம் பண்ணாமல் ஓடறார்.''

நர்ஸ் பாலாமணி அப்பாக்காரரை ஏற இறங்க பார்த்தார். அவள் கண்களில் கங்கை ஆறு.



''சார், எங்க டாக்டர் கே. வி. ய;யுடைய ஒரே பையன் பாபு ரோடு ஆக்சிடேன்ட்லே நேற்று ராத்திரி பூட்டான் சார். அவனை இன்னிக்கு தகனம் பண்ணறாங்க. அர்ஜன்ட்ன்னு நாங்க போன்ல கூப்பிட்டதும் இந்தப் பையனையாவது காப்பாத்தணும்னு உங்க பையனுக்கு ஆப்பரேஷன் பண்ண ஓடி வந்தார். மயானத்துக்கு ஓடறார். தன பிள்ளைக்கு மீதி காரியம் பண்ண ''

1 comment:

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...