Thursday, June 4, 2020

THUKKAAARAM 'S DEVOTION


                           

                தூய  பக்தி   J K  SIVAN

ஸ்ரீ மஹாவிஷ்ணு தான் பல அவதாரங்கள் பல பெயர்களில் எடுப்பவர். அவர் தான்  ராமர், கிருஷ்ணன், பாண்டுரங்கன் என்கிற விட்டலன், விடோபா  எல்லாமே.

விட்டலனாக  அவர் உருவெடுத்தபோது அவருடைய  சிறந்த பக்தர்களில் ஒருவர்  தான் துக்காராம்.  கடவுளோடு நேரில் பேசுபவர்கள், பார்க்கிறவர்களில் ஒருவர்

ஒரு  தடவை துக்காராம்   விட்டலன் பண்டரிநாதனுக்கு ஒரு  லெட்டர் எழுதினார் . போஸ்ட் ஆபிஸ்  இல்லாத காலம் அல்லவா ? பண்டரிபுரம்  போகும் பக்தர்கள்  மூலமாக   அதை  கொடுத்து அனுப்பி ,   அந்த பக்தர்  நேரே  பண்டரிபுரம் சென்று   செங்கல் மேல்  நிற்கும்   விட்டலனை  சேவித்து வருத்ததுடன்  சொன்னார்:

''விட்டலா,  பாவம்,   நமது துக்காராம்   ரொம்ப உடம்பு  சரியில்லாமல்  இருப்பதால் நடந்து வந்து  உன்னைப்  பார்க்க முடியவில்லை என்று வருத்தத்துடன்   உனக்கு  ஒரு  கடிதம் எழுதியுள்ளார்  நான்  அதை படிக்கவா --- தேவையே இல்லை ,உனக்குதான் அதில் என்ன  எழுதியிருக்கிறார் என்றே தெரியுமே-  இந்தா  அந்த கடிதம்''   - என்று  அந்த  கடிதத்தை ரங்கனின் பாதத்தில் வைத்தார்.  

"ருக்மணி, நம்  துக்கா, ரொம்ப நோய்வாய்பட்டு  நம்மை பார்க்க  வரமுடியவில்லை என்று   விசனத்தோடு எழுதியதை பார்"

'நாதா,   நாமே சென்று அவரைப்   பார்த்து வருவோமே" என்கிறாள்  ருக்மணி.

"நீ சொல்வது சரி,  ஆனால்   இங்கு நம்மை காண  வரும் பக்தர்கள்  எமாற்றமடைவார்களே,  நாம்  நம்   கருடனை அனுப்பி அவரை இங்கு  கொண்டுவர செய்வோம்.  என்று   துகாராமுக்கு ஒரு  பதில்  கடிதம்  எழுதினான்  விட்டலன் -

" அன்பு துக்கா, உன்னை  பார்க்காமல் எங்களாலும்  இருக்க முடியவில்லை. கருடனிடம்   இந்த கடிதம் கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.   அவன் மீது  ஆரோகணித்து  உடனே புறப்பட்டு வா. மற்றவை நேரில்-  உன்  பாண்டுரங்கன்"

தான்  போகமுடியாததால் தெருவில் பண்டரிபுரம் போகும்  பக்தர்களையாவது பார்ப்போமே என்று  வாசல் திண்ணையில்  படுத்திருந்தார் துக்காராம். அவர் முன் நின்ற  கருடன்

"ஐயா  இந்தாருங்கள் . பாண்டுரங்கன்   உங்களை  கையோடு  அழைத்து வரச்சொன்னார். இதோ கடிதம்"  என்றான் கருடன்.

' ஐயோ, இது அபசாரம். நீங்கள்  நாராயணனை  தாங்கிச்  செல்பவர், நானோ அவர் காலணி யிலிருந்து  விழும் தூசிக்கும் கீழானவன். நான்   உங்கள்  மீது  ஏறி உட்காருவதா?  அபச்சாரம்.    தங்கத்தால்  செய்தாலும்  செருப்புக்கு  இடம் காலின் கீழ் தானே, தலையில் அல்லவே!  அவரையே  முடிந்தால் வரசொல்லுங்களேன்"  என்றார்  துக்காராம்

கருடன் போய்  சேதி சொன்னதும்   விட்டலன்    "வா  ருக்மணி  நாமே  செல்வோம்" என புறப்பட்டான் வ

திண்ணையில் இருந்து பண்டரிபுரம் செல்வோர் வருவோரையே  ஏக்கமுடன் பார்த்திருந்த  துக்காராம் தனக்கு  முன்   கருடன் வந்து நின்று, அதன்  மேலிருந்து   சர்வாலங்கார பூஷிதையாக   ருக்மணியோடு விட்டலன் வாசலில் இறங்கி   திண்ணையிலிருந்த துக்காராமை மார்போடு அணைத்து கொண்டான்.  

பக்தனும்  பகவானும் ஒருவரையொருவர்   மனமார தழுவினர்.   இதுவல்லவோ  இணையில்லாத பக்தி பரவசம். நாமும் துக்காராமின்  பக்தியை  கொஞ்சம்  கொஞ்சமாக  கண்ணன் மேல்  வளர்த்துக்கொள்வோமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...