இசையரசியின் முதல் பாட்டு J K SIVAN
அதிக பாடல்களை பாடி உலகளவு ப்ரஸித்தமான இரு இந்திய பெண்மணிகள் பெயரைக் கூறு என்று யாரேனும் கேட்டால், தலையை சொரிய அவசியமே இல்லை. எல்லோருக்கும் தெரிந்த பதில்
''பாரத ரத்நா'' விருது பெற்ற இசைக்குயில்கள் லதாமங்கேஷ்கரும் M.S . சுப்புலக்ஷ்மியும் தான் இந்தியாவின் நைட்டிங்கேல் கள். லதா ஹிந்தி சினிமா பாடல்களால் பிரபலமானவர். MSS திரையில் நடித்தாலும் கர்நாடக இசையில் முதன்மையானவர். விஷ்ணு சஹஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம் மற்றும் அநேக ஸ்தோத்திரங்கள் பாமாலைகள் MSS குரலில் ஒலிக்கும் ஹிந்து வீடுகளை உலகெங்கும் காணலாம். 88 வயது வரை வாழ்ந்த அற்புத தெய்வீக பெண்மணி MSS.
காந்திஜி, ராஜாஜி, நேருஜி என்று தேசிய தலைவர்கள் விரும்பி கேட்ட பாடகி. ராஜாஜி எழுதி கொடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் MSS பாடிய குறையொன்றுமில்லை ஒவ்வொரு வீட்டிலும் என்றும் ஒலிக்கும் பாடல். பக்தி பாவத்தோடு பாடும் இன்னொரு கலைஞர் அவர் போல் இனிமேல் தான் பிறக்கவேண்டும்.
பத்து வயதில் MSS பாடிய முருகன் பாட்டு கேட்டிருக் கிறீர்களா?
இணைத்திருக்கிறேன் கேளுங்கள். விளையும் பயிர் முளையிலே தெரிகிறதா குரலிலே?
அவர் பெறாத விருதுகளே இல்லை. இசையரசிகள் மூவர் MSS, MLV, DKP ஆகிய மூவரும் தனித்தனி பாணியில் பாடி புகழ் பெற்றவர்கள் , தவிர ஒரே கால கட்டத்தில் வாழ்ந்து தமிழகத்தில் எல்லோரையும் நாத வெள்ளத்தில் மூழ்கி இன்பம் பெற வைத்தவர்கள் என்பதில் ஐயமே இல்லை என்றாலும் தனித்தாரகையாக ஜொலித்தவர் MSS என்பது உலகறிந்த உண்மை. MSS பற்றி எழுத நிறைய விஷயங்கள் இருக்கிறது. எல்லாமே எல்லாருக்கும் தெரிந்தவை தான். மஹா பெரியவாவிடம் தனி பக்தி. அவர் ஆசி யை மனதார பெற்றவர்.
முதல் முதலாக 10 வயதில் MSS பாடிய பாட்டு நல்லவேளையாக யாரோ ஒளிப்பதிவு செயது வைத்திருக்கிறார்கள். அதைக் கேட்க இணைத்திருக்கும் யூட்யூப் லிங்க் கிளிக் செய்யவும். https://youtu.be/XjyXg6zZLqQ
No comments:
Post a Comment