Saturday, June 6, 2020

RASA NISHYANDHINI

ரஸ  நிஷ்யந்தினி  J K  SIVAN 

                                          தசரதா  ராமனைப் பற்றி தெரிந்து கொண்டாயா ?

விஸ்வாமித்ரர் கடல் மடை போல் சொல்கிறார். நமக்கு படிக்க பல நாள் ஆனாலும்  அவர்  சொன்னதென்னவோ  இதெல்லாமே  ஒரு சில நிமிஷங்களில்  தான்.  அயோத்தியில் தசரதன்  அவையில் எல்லோரும் அறிய அவனுக்கு ராமனின் கல்யாண குணங்களை, மஹாத்மியத்தை உபதேசிக்கிறார். தசரதன் தைரியமாக சந்தோஷமாக ராமனை அவரோடு அனுப்புகிறான்.

பருத்தியூர்  பெரியவா  கூறும் 100 ஸ்லோகங்களில் விஸ்வாமித்ரர் சொல்வதாக வருபவை எல்லாமே  வால்மீகி மகரிஷியின் இராமாயண ஸ்லோகங்களில் இருக்கும் உண்மைகள்.     அவற்றை அழகாக கையாள்கிறார்.

ராமன்  யார் என்று தெரிந்து கொள்  தசரதா என்று அவன் பெயரை சுட்டி காட்டி நம் அனைவருக்குமே  அவனை புரிய வைக்கிறார்  இந்த  ரஸ  நிஷ்யந்தினியில்  ஸ்ரீ பருத்தியூர் பெரியவா  கிருஷ்ண சாஸ்திரிகள் .  அவரது 100 ஸ்லோகம் கொண்ட  ரஸ நிஷ்யந்தினி   இந்த கட்டுரையுடன்  பூரணம் பெறுகிறது.

 பருத்தியூர் பெரியவா சிறந்த குரு மட்டுமல்ல. குருபக்தி  சிகாமணி.தனது குருநாதர்களான  சேங்காலிபுரம் முத்தண்ணா என்ற வைத்யநாத தீக்ஷிதர், மன்னார்குடி பெரியவா  என்கிற  ராஜு சாஸ்திரிகள் இருவரையும் தெய்வமாகவே  போற்றி அவர்கள் உபதேசங்களை பின்பற்றியவர். தனது குருவின் ஆராதனை தினம் அன்று  தைமாதம், க்ரிஷ்ணபக்ஷம் துவாதசி அன்று  11.2.1911  குடவாசலில்  தனது புத்ரன் க்ரஹத்தில் ப்ரம்ம கபாலம் வெடித்து சித்தி அடைந்தவர் என்று  அறிகிறோம்.  இப்படிப்பட்ட மஹான்கள் பலர் நமக்கு தெரியாமலே வாழ்ந்து இன்னும் நம்மை  நாம் அறியாமலேயே ஆசிர்வதிக்கிறார்கள்.

96  अयमाकाशादिभूतपरिणामशरीर इति त्वम् 'आकाशशरीरं ब्रह्म सत्यात्मप्राणारामं मन आनन्दम् शान्तिसमृद्धिममृतम्' इत्यहम् ।
அயமாகாஸாதி பூத பரிணாம சரீர இதித்வம்,   ஆகாச சரீரம்  ப்ரம்ம சத்யாத்ம ப்ராணாராமம்  மனா  ஆனந்தம்  சாந்திசம்ருத்மாமுதம் இத்யஹம் .


நம்மைப்போல் பஞ்சபூத சேர்க்கையால் உண்டான உருவமா  ராமன்? அப்படியா நினைக்கிறாய் நீ? இல்லை தசரதா, அவன் பரப்பிரம்மம். அவனில் ஆகாசம் முதலான ஐம்பூதங்களும் இயங்குபவை. கண்ணுக்கு தெரிந்த தெரியாத அனைத்து  உருவங்களில் உள்ள   ஜீவன்களில் ஆத்மா அவன்.  பிராண ஆதாரம். மனதில் விளையும் ஆனந்தத்தின் காரணம். அவனிடமிருந்து எங்கும் எதிலும் சாந்தி சாந்தி சாந்தி, அழிவற்ற நிரந்தரம் தோன்றுகிறது.

 97 अयं मय्यासक्त इति त्वम्; सर्वे प्राणिनः अस्मिन्नासक्ताः इत्यहम् ।

அயம் மய்யசக்த இதித்வம். சர்வே பிரானின்:  அஸ்மின்த்ரா சக்தா:  இத்யஹம் .

உன்மீது ரொம்ப பந்த பாசமுள்ளவன் ராமன் என்று நினைக்றாயே . தெரிந்துகொள். அகில புவன ஜீவன்களின் மனமும் அவன் மீது பந்தம் பாசம் ஈர்ப்பு கொண்டவை.

98. अयमयोध्यायां प्रतिष्ठित इति त्वम् अयं स्ट महग्नि, यदि वा न महिम्नि' इत्यहम् ।]

அயமயோத்யாயாம்  ப்ரதிஷ்டித இதித்வம்;  அயம் ஸ்ட மஹாக்னி யதி வா ந மஹித்மி இத்யஹம்

 தசரதா,  உனக்கு உன் மகன் ராமன்  உன்னோடு அயோத்தியில் இருப்பதாக ஒரு நினைப்பு.  பரப்ரம்மத்திற்கு தனியாக எங்காவது இடம் இதுதான்  என்று  ஒன்று உண்டா?  . சர்வமும் அதுவேயாக அல்லவோ வியாபித்திருக்கிறது.\

99. अयं सदा भगवदाराधनपर इति त्वम् ‘योगिनाम् अपि सर्वेषां मद्गतेनान्तरात्मना, श्रद्धावान् भजते यो मां स मे युक्ततमो मतः' इत्यादिना अयमेव सदा ध्येयः इत्यहम् ।
அயம் சதா  பகவதாராதனபர  இதித்வம்;  யோகிநாம் அபி ஸர்வேஷாம் மதந்தேனாந்தராத்மனா ஸ்ரத்தா வான்  பஜதே யோ மாம் ச  மே  யுக்ததமோ மத:  இத்யாதின அயமேவ  சதா த்யேய இத்யஹம்

 ராமன் மற்றவர்கள் போல் கடவுளை நினைத்து   வழிபாட்டில் இருபவனா.  எல்லா வழிபாட்டிற்கும் மூலமாக, எவராலும் வழிபடப்படுபவன் ஸ்ரீ ராமன் என்பது உனக்கு தெரியுமா?
 
100. तमेतं विद्वानाश्रित्यार्थवान् भवतीति त्वम् 'तमेवं विद्वानमत इह भवति, नान्यः पन्था विद्यतेऽयनाय' इत्यहं वेद्मि।]]
தமேதம் வித்வாநா ஸ்ரித்தித்தியார்யவான் பவதீதி த்வம்  தமேவம் வித்வானமத இஹ பவதி  நான்ய பந்தா வித்யதேயநாய இத்யஹம் வேத்மி;

ராமனைத் தெரிந்தவன்,  அவனை நம்பி இருப்பவன் செல்வந்தனாகலாம் என்று நினைக்கிறாய். ராமனை உணர்ந்தவன் அமரன். ஸாஸ்வதமானவன் . நிரந்தரன். இதெல்லாம் எனக்கு தெரியும் நான் அறிவேன். அதனால் உனக்கும் உணர்த்தினேன்


தசரதன் ராமனைப்பற்றிய முழு உண்மை மறந்தவனாக, அறியாதவனாக அவன் வயதை மட்டும் அனுமானித்து சிறுவன் எப்படி ராக்ஷஸர்களை எதிர்கொள்வான் என்று கலங்கியபோது விஸ்வாமித்ரர் இதெல்லாம் எடுத்துச்சொல்லி தசரதனை  அஞ்ஞானத்திலிருந்து தட்டி எழுப்புகிறார்.   
நண்பர்களே,  இன்னும்  நிறைய  சொல்லவேண்டி இருக்கிறது. முடிவே இல்லை.  அவ்வப்போது பருத்தியூர் பெரியவா போன்ற மஹான்கள் சொன்னதையெல்லாம் நினைவு கூர்வோம். 


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...