Thursday, June 25, 2020

HUMOUR




கண்ணே  காமாட்சி  J K SIVAN

காலம்  மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றிவிடுகிறது.  இதை பற்றி நான் நினைக்கும் முன்பே  அதோ அங்கே  இரும்பு கேட் பின்னால்  வாசல் வராந்தாவில் ஒரு பிளாஸ்டிக்  நாற்காலியில் உட்கார்ந்து யோசிப்பவர் யார்?

 கொரோனாவில் பொழுது போகாத   ரிடையர்டு  போஸ்ட் மாஸ்டர்   ப்ரணதார்த்தி தான்.   தனது மனைவி   காமுவைப் பற்றி சிந்தித்தார்.   அவளுக்குமா  அறுபத்தைந்து வயது? 

''பதினெட்டு வயசுலே  கல்யாணம்.  பொட்டிப்பாம்பா  வாசுகி மாதிரி எள்ளுன்னா  எண்ணையா இருந்தவ..... நான் எங்கேயோ  அண்ணாந்து மரக்கிளையிலே  காக்காவை பார்த்து கொண்டிருந்தாலும்    ''கூப்பிட்டேளா, இதோ வந்துட்டேன் என்று ஓடி ஓடிவருவாள்.

  எப்போ ஞாயிறுக்கிழமை வரும் என்று காத்திருப்பாள். ''வாங்கோ  மைலாப்பூர் போய் உங்க  அம்மா வோட ஒருநாள்  அவாளுக்கு திருப்தியா இருந்துட்டு வருவோம்''

''சேப்பங்கிழங்கு நானாயிருக்கேன்னு  வாங்கினேன். உங்களுக்கு பிடிக்காதுன்னு இப்போ தான் தெரியறது. இனிமே என் வாழ்க்கையிலே எனக்கு பிடிச்ச சேப்பங்கிழங்கை கையாலே  தொட மாட்டேன்''

ஒருநாள் சம்பூர்ண சாஸ்திரி  புடவை  கடையிலே  என் பக்கத்திலே  பேசாம  நின்னாள்.
 ''உனக்கு பிடிச்ச கலர்லே புடவை எடுத்துக்கோ'' என்று சொன்னதற்கு என்ன சொன்னாள்?  
''என்னையே  செலக்ட் பண்ணவர் எனக்கு எது வேணும்னு நீங்களே செலக்ட் பண்ணுங்கோ''

மூன்று வருஷங்களுக்குப்  பிறகு 

எனக்கு முன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமா சீனாக்காரன் மாதிரி  வழுக்கை நெத்தி யிலிருந்து பின்னாலே  நகர்ந்து  கொண்டிருந் ததை மறைக்க  இடது பக்கத்தி லிருந்து நிறைய  படிய  படிய  வலது பக்கம் நோக்கி தள்ளி  தலை வாரிக்கொள்வேன்  சுப்பிரமணியம் சொல்லிக்  கொடுத்த ட்ரிக்.  அதைப்பார்த்து

''உங்க  ஹேர் ஸ்டைல் பிரமாதம்'' என்பாள்
.
எந்த அறுவை ஹாஸ்யம் நான்  சொன்னாலும்  ''ரொம்ப கலகலன்னு  உங்க வீட்டிலே எல்லோரும்  நகைச்சுவையோடு பேசறீங்க''

பத்து வருஷங்களில் அப்பறம் எப்படி மாறிட்டா?

காமுன்னு  மெதுவாக தான் ஹாலிருந்து  கூப்பிட்டேன். இருபது   அடியில் சமையல்கட்டிலே இருக்கிறவ 

 ''நான் வேலையா இருக்கேன். ஏன் அலறு கிறீங்க... ஊருக்கே  நான் காமுன்னு  தெரியணுமா.  சொல்ல வேண்டியதை இங்கே வந்து சொல்றது தானே''  குரல் என்னைவிட பெரிய வால்யூம்.

தினசரி கிழிக்கும் காலண்டரை கையில் எடுத்துக்கொண்டு வந்து ஒருநாள்  

'' இன்னும்  மூன்று நாள் இருக்கு. நானும் குழந்தைகளும் என் தங்கை ஆத்துக்கு  மன்னார்குடி போறோம். நிம்மதியாக ஒரு ரெண்டுவாரமாவது இருக்கணும்.''

''இன்னிக்கு முள்ளங்கி சாம்பார்  வெண்டைக் காய் கறி .  கொஞ்சமா எனக்கு மட்டும்  தான்  இருக்கு.   உங்களுக்கு  தான் மோர் சாதம் நார்த்தங்கா போறுமே .''

பதினைந்து இருபது  வருஷங்கள் ஆகிவிட்டது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை.  மே  மாத வெயில் சுள்ளென்று  அப்பளமாக  வாட்டு கிறது. 
பாதிக்கு மேல்  தலையில் சைனாக்காரன் சாப்பிட்டுவிட்டதால் , இடது பக்கம் இருக்கும் மிச்சத்தை  வலது பக்கம் தள்ளி வாரிக் கொண்டு மறைக்க பிரயாசைப்  பட்டபோது.

 '' எத்தனை நேரம் தான் இந்த அழகு தலையை வாருவீர்களோ. சட்டு புட்டுன்னு வாங்கோ. மொட்டைமாடிலே  வடாம் பிழியணும் .நேரமாகிறது''

தீபாவளிக்கு  புடவை எடுத்தேனே அப்போது:
 ''உங்களுக்குன்னு எப்படி தான் உலகத்திலேயே எல்லோரும் ஒதுக்கின கலர் புடவை எனக்கு எடுக்க தோண்றதோ ?''

பதில் அதிகம் சொல்லாமல்  வார்த்தை வளர்க்காமல்  நமுட்டு சிரிப்பு சிரித்தால் அதற்கும்  ஒரு கம்மெண்ட்.

 ''உங்க குடும்பத்துக்குன்னு  எது சொன்னா லும்  ஒரு  சிரிச்சு மழுப்பற குணம்  என் குழந்தைகள் கிட்டேயும் வந்துடுத்து''

ஏதாவது பதில் சொன்னால் அதற்கும் ஒரு அஸ்திரம் தயாராக வைத்திருக்கிறாள்: 
 ''உங்க மனிஷால் கிட்டே பேசி ஜெயிக்க முடியுமா. ஆங்காரம் பிடிச்ச  விஸ்வாமித்ர கும்பல்''

முப்பது வருஷம் காலம் தள்ளி விட்டேனே. அப்போது கூட:   ஒருநாள்  நண்பன் ஒருவன் கொடுத்த  கிரேசி மோகன் டிராமா பாஸ்:

''நல்ல நாள்  பார்த்து இன்னிக்கு தான்  டிராமா வுக்கு டிக்கெட் வாங்கினேளா?  .  ஒன்றரை படி அரிசி உளுந்து  நனைச்சு ஊறிடுத்தே. யார்  அறைக்கிறது?      நீங்களே போய் உங்க டிராமாவை ரசியுங்கோ.  கொஞ்சம் அமைதியா நான் வீட்டிலே வேலை பாக்கிறேன்.''

ஒருநாள்  என் காதிலே அவ என்ன சொன் னான்னு விழவே இல்லை.  நான்   ஒண்ணுமே   பதில் சொல்லலே  இருந்தாலும்.

 '' நான் எது சொல்லி என்னிக்கி காதிலே வாங்கிண்டு இருக்கியேள் ?

ஒருநாள்  சாயந்திரம்  பல் டாக்டர் வீட்டுக்கு போகும்போது  ''காமு நீ போய்  அங்கே இரு. ஒருமணிநேரம், நிச்சயம் ஆகும். நான் வந்து அழைச்சுண்டு வரேன்''   என்று தான் சொன்னேன்.

 ''ஆமாம் ரொம்ப அக்கறை. எம்மேலே. .  போறவளுக்கு வரதுக்கு வழி தெரியாதா.?
பிசாசா பிடிச்சுண்டு போகும். அப்படிதான் போகட்டுமே. நிம்மதியா  அதோடு போறேன்''

உடம்பு சரியில்லாத  என்  பெரிய அக்கா கும்பகோணத்திலிருந்து ஒரு போஸ்ட் கார்ட் போட்டதை  '' சார் போஸ்ட் '' என்று  வாசல் மர   கேட்டில் சொருகிவிட்டு போஸ்ட்மேன்  போனதை பார்த்து எடுத்து வந்தாள் .
''யாரு   லெட்டர் போட்டிருக்கா?  ன்னு தான் கேட்டேன்.
''எல்லாம் உங்களோட  அக்கா '' ரா ரா ரா ரா ஜ  லட்சுமி   விக் டோரியா மஹாராணி தான் .  இந்த  இளவரசரை  பாக்காமல் கண்ணு  பூத்து போய்டுத்தாம்''

''போறுமே   நீங்க  தலை வாறுகிற  அழகு. . இந்த  சொட்டை  உங்க குடும்ப  சொத்து.  இதை எதுக்கு மறைக்க தலை கீழ  நிக்கறேள். அழகு சுந்தர மன்மத  குஞ்சுன்னு  மனசுலே எண்ணம்.''  

''ஆ''  வென்று வாயை பிளந்து உட்கார்ந்தால்   ''கோட்டை வாசலை  மூடிக்கோங்கோ.   ஒண்ணு  கொசு உள்ளே போகும் இல்லேன்னா சாக்கடை வெளியே வரும். அப்படி ஒரு வாய். உங்கண்ணா  தம்பி ரெண்டு  பேருக்குமே  ஓட்டைவாய் மாரிமுத்துகள் ..

''என்ன  சினிமா வா ??  இங்கேருந்து அங்கே போயும்   உங்க  கொசுக்கடி தொந்தரவா? 
''எனக்கு  சினிமா  டான்ஸ்  ட்ராமா எதுவுமே  வேண்டாம்பா.  என்  அன்னாடம் பொழைப்பே இந்த வீட்டிலே   ஒரு  மெகா சீரியல் எடுக்கற மாதிரிதானே இருக்கு ''

இன்னும் எவ்வளவோ சொல்லலாம்
''சற்று இருங்கள்  இதோ எதற்கோ உள்ளே  கூப்பிடுகிறாள்.  போய்ட்டு வருகிறேன்.... ராக்ஷஸி. ராக்ஷஸி...''


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...