Tuesday, June 2, 2020

RASA NISHYANDHINI


ரஸ நிஷ்யந்தினி          J K  SIVAN 

                                                     ராம நாம மஹிமை 

சேது பந்தனத்தின்  போது  வானர சைன்யம் ஒவ்வொரு கல்லின் மீதும் ராமநாமம் எழுதிய  பிறகு தான் கடலில் எறிந்து  பாலம் கட்டியது  என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த ராமநாம மகிமையால், சக்தியால் கல்லும் நீரின் மேல் மிதந்தது.  இன்றும் ராமேஸ்வரத்தில் மிதக்கும் கற்களை  பார்க்கிறோம். இது தெரிந்த கதை.


தெரியாத ஒரு கதை ஒன்று இருக்கிறதே அது தெரியுமா?

ராவணன் யுத்தத்தில் மாண்டான்.  விபீஷணன் லங்கேஸ்வரனாக முடி சூட்டப்பட்டான்.   விபீஷணனின் தொண்டர்களில் ஒருவனுக்கு சந்தேகம் முளைத்தது.  விபீஷணனை என்ன கேட்டான்?

'' லங்கேஸ்வரா, நீங்கள் ராம ராவண யுத்தத்தை  நேரில் கண்டவர்கள்.  ராமன் இலங்கைக்கு  கற்களால்   பாலம் கடல் மேல்  அமைத்து வானர சைன்யம் இலங்கையில் நுழைந்தது என அறிகிறேன்.  எப்படி அவர்களால் இது முடிந்தது?

''நண்பா,   ராமனைக்காட்டிலும்  ராமனுடைய நாமத்திற்கு சக்தி, பலம் அதிகம். அதனால் தான் அது முடிந்தது. ராமநாமத்தை உச்சரித்து எந்த தடையையும்  நீக்கலாம்''

தொண்டனுக்கு  இதில் ஒப்புதல் இல்லை. அதை அவன் முகமே  தெளிவாக காட்டியது. விபீஷணன் இதை கவனித்தான். இதை புரிய வைக்க விபீஷணன் என்ன செய்தான் தெரியுமா? 

அருகே இருந்த  செடியின் ஒரு இலையை எடுத்தான். அதில் ஸ்ரீ ராம்  என்று  எழுதினான்.  தொண்டனை கூப்பிட்டான்.

''இந்தா இதை நம்பிக்கையோடு  எடுத்துக் கொண்டு கடலில்  நடந்து செல்''.  ராமனைப் பற்றியோ அவன் நாம மஹிமை பற்றியோ தெரியாது என்றாலும் அந்த தொண்டனுக்கு விபீஷணன் மீது எல்லையற்ற பக்தி  . விபீஷணன் வார்த்தையில் அவ்வளவு  நம்பிக்கை. விஸ்வாசம். . ஆகவே இலையை எடுத்துக்கொண்டு கடலில் இறங்கினான்.  கடல் எப்படி  ஆழம் குறைந்து முழங்காலுக்கு மேலே  நீர் இல்லை? நடு சமுத்திரம் வரை  சுலபமாக நடந்து சென்றான்.   என்ன மந்திரம் மாயம் இது ?  இலையை பிரித்தான். ராமநாமத்தை பார்த்தான். இதற்கு இவ்வளவு சக்தி உண்டா? என்று பழைய சந்தேகம் முளைத்தது.  இந்த நாமம் எப்படி  அவ்வளவு ஆழமான சமுத்திரத்தை முழங்கால் நனையாமல் குறுக்கியது?  இந்த எண்ணம்  எழுந்தவுடனே சமுத்திரம் பழைய நிலைக்கு வந்து அவனை விழுங்கியது.

இந்த கதையை சொன்ன காரணம் ராமனைப் பற்றியோ அவன் நாம மஹிமைபற்றியோ புரியவேண்டும் என்பதற்காக. 

இதோ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகள் இன்றைய ஐந்து  ரஸ  நிஷ்யந்தினி ஸ்லோகங்களை சொல்ல வந்துவிட்டார்.  அயோத்தியில் தசரதன் அரண்மனைக்கு நம்மை கூட்டிச்செல்கிறார். விஸ்வாமித்ரர் தொடர்ந்து ராமன் யார் என உனக்கு தெரியுமா  என்று தசரதனைப் பார்த்து கேட்டவாறு  அவன் மகிமைகளை அள்ளி  வீசுகிறார். இன்று பார்க்கும் ஐந்து ஸ்லோகங்கள்  76-80 வரை.

76 . अस्य रूपं दर्शने तिष्ठति चक्षुषा सर्वोऽपि एनं पश्यतीति त्वम्; 'न संदृशे तिष्ठति रूपमस्य न चक्षुषा पश्यति कश्चनैनम्' इत्यहम् ।

அஸ்ய ரூபம் தர்சனே  திஷ்டதி சக்ஷுஷா  ஸர்வோபி  ஏனம்  பச்யதீதி தவம்;  ந சங்கஸே  திஷ்டதி  ரூபமஸ்ய  நம்  சக்ஷுஷா  பஸ்யதி  கஸ்சனைனம்  இத்யஹம் .

 ''தசரதா, உன் மகன் ராமனை  எல்லோரும் கண்களால் பார்த்து அறிகிறார்கள் என்றா நினைக்கிறாய்?,  நம் கண்ணுக்கு தெரியும் உருவமா ஸ்ரீ ராமன்?  . இல்லை அப்பனே,  எவராலும் காண முடியாதவன் அவன். பரிபூர்ண  ஞானிகள் மட்டுமே அவனை மனதில் கண்டு பரமானந்தம் அடைகிறார்கள். வெறும் உருவம் அல்ல ஸ்ரீ ராமன்''

77. य एनं विदुः मुदितास्ते भवन्तीति त्वम्। 'य एनं विदुरमृतास्ते भवन्ति' इत्यहम् ।

ய  ஏனம் வித்து:  முதிதாஸ்தே  பவந்தீதி  த்வம் ;  ய  ஏனம்  விதுராமருதாஸ்தே   பவந்தி  இத்யஹம்

''என் மகன் ராமனை தெரிந்தவர்கள் சந்தோஷம் அடைகிறார்கள் என்று நினைக்கிறாயே ,  எனக்கு தெரிந்ததைச்  சொல்கிறேன் கேள்.  யாரெல்லாம் ஸ்ரீ ராமனைத் தாமாகவோ,   தங்களது ஆத்மஸ்வரூபமாக அறிகிறார்களோ, அவர்கள் அழிவற்றவர்கள்''

78. वाचा मनसा च प्राप्तुं शक्योऽयमिति त्वमः 'नैव वाचा न मनसा प्राप्तुं शक्यो न चक्षुषा। अस्तीति ब्रुवतोऽन्यत्र कथं तदुपलभ्यते' इत्यहम् ।

வாசா  மனசா சா  ப்ராப்தும்  சக்யோயமீதி த்வம் ;  நைவ வச்சா ன  மனசா  பிராப்தும்  சக்யோ ந  சக்ஷுஷா ;  அஸ்தீதி   ப்ருவதோன்யத்ர கதம்  ததுபலப்யதே இத்யஹம்.

''ஸ்ரீ ராமனை மனதாலும் பேச்சினாலும் அறிய முடியும் என்றா நம்புகிறாய் தசரதா? , அப்படி இல்லை, கண்ணால் கண்டோ, மனதால் நினைத்தோ,  வாயினால் அவனைப் பற்றி பேசியோ ஸ்ரீ ராமனை நெருங்க முடியாது.  அவன் இருக்கிறான் என்ற  பரிபூர்ண பக்தியோடும் நம்பிக்கையோடும் எவன் அவனை வணங்குகிரானோ  அவனுக்கு மட்டுமே ஸ்ரீ ராமன் தெரிவான்.

79. अयमस्मिन् साकेतपुरे प्रतिष्ठित इति त्वम्; 'दिव्ये ब्रह्मपुरे ह्येष व्योम्न्यात्मा प्रतिष्ठितः' इत्यहम् ।

அயமஸ்மின்  சாகேதபுரே  ப்ரதிஷ்டத  இதித்வம்;   திவ்யே ப்ரஹ்ம புரி  ஹோஷ  வ்யோப்ந்யாத்மா  ப்ரதிஷ்டத ; இத்யஹம் .
 அயோத்தியில்  அரசாணி மண்டபத்தில்  ராஜாவாக  அமர்ந்து தான்  உன் மகன் ராமன் நல்ல புகழுடன் சிறந்த அரசன் என்று பெயர் பெறுவான் என்று நினைக்கிறாயா? தசரதா , பக்தனின்  ஆழமான  ஹ்ருதய குகையில் அல்லவோ அவன் வாழ்கிறான் என்பதை முற்றுமுணர்ந்த ஞானிகள் மட்டுமே அறிவார்கள்.

80. अयमनीतिमतां सेतुरिति त्वम्'अमृतस्यैष सेतुः' इत्यहम् ।
அயமநீதி மதாம்   சேதுரிதி த்வம்  அம்ருதஸ்யைஷ   சேது; இத்யஹம்
 80. ஸ்ரீ ராமன்  அநீதிமான்களை  தண்டிப்பவனாகவா காண்கிறாய். தசரதா , ஸ்ரீ ராமன் யார் தெரியுமா? மரணமற்ற நிலையான வாழ்வு அவர்களும் பெற  பொறுமையோடு உதவும்   பாலம் தான் ஸ்ரீ ராமன். இதை நான் அறிவேன்.
இன்னும்  அறிவோம்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...