திருக் கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
பகவானை திருடன், கள்ளன், கள்வன் என்று போற்றுவது நிந்தாஸ்துதி. அதுவும் பகவானுக்கு உகந்தது தான். சம்பந்தர் தேவாரத்தில் பிரமபுரம் என்ற சிவ க்ஷேத்ரத்தில் ஒரு பத்து பாடல்கள், பதிகம், பாடியிருக்கிறார். அதில் ''என் உள்ளம் கவர் கள்வன் '' என்று தான் சிவனை துதிப்பார்.
பெருமாளும் அப்படி கள்வன் என்றும் கள்ளபிரான் என்றும் பெயர் பெற்றவர். கிருஷ்ணன் திருடன் என்ற பெயரில் மிகவும் புகழ் பெற்றவன்.
ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் உலகில் நமக்கு குருவாக அவதரித்தவர்கள் . நன்மார்க்கத்துக்கு வழி காட்டியவர்கள். காட்டுபவர்கள். அவர்களை தான் ஜகத் குரு, லோக குரு என்று மரியாதையோடு அழைக்கிறோம்.
மஹாபலி சக்கரவர்த்தி, யாக முடிவில்
மூன்றடி மண் கேட்ட வாமன ப்ராமண
சிறுவனுக்கு ''தருகிறேன்'' என்று வாக்களித்து விட்டான். அப்போது ''அப்படி வாக்களிக்காதே, வந்தவன், ப்ராமண சிறுவன் உருவில் மஹா விஷ்ணு'' என்று எச்சரிக்கிறார் சுக்ராச்சாரியார் எனும் அசுர குரு .
''ஆத்ம அபகாரம் என்பது பெரிய கள்ள தனம். தானம் தர கமண்டல ஜலம் விடும் போது ''இவன் கள்வன்'' என்றார். வண்டாக மாறி தான பாத்திரத்தின் ஜலதாரை, துளையை தடுத்து அடைத்துக்கொண்டார். வாமனன் ஒரு தர்ப்பைப் புல்லின் நுனியால் துளையின் அடைப்பை நீக்கினான்.. பாத்திரத்தின் துளையை அடைத்துக் கொண்டிருந்த சுக்ராச்சார்ய வண்டின் ஒரு கண்ணை தர்ப்பை குருடாக்கி, ஜலம் சொட்டியது. வாமனன் தானம் பெற்றான் என்பது கதை சுருக்கம்.
நம்மாழ்வார் அருமையாக பாசுரம் பாடி இருக்கிறார். சுக்கரன் கண்ணை துரும்பால் குத்திய சக்கர கையன் அச்சோ அச்சோ. . ஆச்சார்யர் வாக்கியம் மீறினது அவனுக்கு குற்றம். . லோக குரு-நம் ஆழ்வாரு கூட பெருமாளை கள்வா என அழைக்
கிறார்.
திருவாய்மொழி 2-2-10 : '' 'கள்வா! எம்மையும் ஏழுல கும்நின் உள்ளே தோற்றிய இறைவ!' என்று சிவனும் பிரமனும் இந்திரனும் இதர தேவர்களும் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தின் போது அழைத்தனர்''என்கிறார் நம்மாழ்வார்.
திருமங்கையாழ்வாரும், திருநெடுந்தாண்டகம் பாசுரங்களில் "கார்வனத்து உள்ளே கள்வா" என்கிறார். இதெல்லாம் பக்தனின் உரிமை. குழந்தையை அம்மா '' திருட்டு குட்டி '' என்று கொஞ்சுவது போல்.
கள்வன் என்பது ஸ்ரீமன் நாராயணனுக்கு ஆழ்வார் களும் அவரின் பக்தர்களும் செல்லமாக பிரியத்துடன் வழங்கிய பெயராகும். கள்வன் என்றால் திருடன் அல்லது ஏமாற்றுபவன் என்று பொருள். எம்பெருமான் தனது பக்தர்களுடன் நடத்தும் லீலைகளினால் இப்படி ஒரு பெயர் . ஸ்ரீ வைகுண்டம் (மேலே அல்ல, தூத்துக்குடி ஜில்லாவில்) ஆலயத்தில் (ஒரு பிரதான திவ்ய தேசம்) பெருமாளுக்கு கள்ளர் பிரான் என்று பெயர் அதன் பின்னால் ஒரு சுவாரஸ்யமான கதையும் இருக்கிறது.
ஸ்ரீ ருத்ரம் நமகம் அப்படித்தான் பரமசிவனையும் கள்வன் என்கிறது.
எல்லாம் அறிந்த பெண்மணி, இந்த திருக்
கோளூர் அம்மாள். தனது , ஆழ்வார்களை தான் அவள் ''லோக குரு'' உலகத்தில் ஞான மார்க்கம் போதிக்க வந்தவர்கள் நல்வழி காட்டுபவர்கள் லோக குரு தான். தனது 68வது உதாரணமாக ஸ்ரீ ராமானுஜரே நான் ஆழ்வார் களை போல லோக குருமார்களைப் போல என்றாவது உரிமையுடன் பக்தியுடன் பெருமாளை ஒரு வேளையாவது “கள்வன்” என்று சொன்னது கூட கிடையாதே. எந்த விதத்தில் இந்த புண்ய க்ஷேத்ரம் திருக் கோளூரில் நான் வசிக்க தகுதி பெற்றவள் ?'' என்கிறாள்.
No comments:
Post a Comment