Friday, June 5, 2020

RASA NISHYANDHINI




ரஸ நிஷ்யந்தினி J K SIVAN

குணாதிசயன் ராமன்
ஸ்ரீ ராமனையும் அவனது நாமத்தையும் தமது மூச்சாக கொண்டு வாழ்ந்த ஒரு மஹான் ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒரு நாள் கனவில் ஸ்ரீ ராமன் தோன்றி பேசினான்:

''கிருஷ்ணா, நான் ராமன். என் குடும்பத்தோடு நான் இந்த ஊர் குளத்தில் புதைந்து இருக்கிறேனே. நீ எங்களை வெளியே கொண்டு வந்து சந்நிதியை செப்பனிட்டு ஸ்தாபனம் செய்வாயா?'

''ஆஹா ! என் ராமன் எனக்கு இப்படி ஒரு கைங்கர்யம் செய்ய அருளினான்'' என்று மகிழ்ந்த சாஸ்திரிகள், அம்பரீஷ குளத்தில் தூர் வார செய்து சரபோஜி ராஜா காலத்திய ராம லக்ஷ்மண, சீதா ஹனுமான் விக்ரஹங்கள் புதையுண்டிருந்தவை மீட்கப்பட்டன. குளம் சீரமைக்கப்பட்டு ராமாயண குளம் என்று பேர் பெற்றது. வரதராஜர் கையில் ஏந்திய பிரயோக சக்ரத்தின் உக்கிரத்தால் அக்ரஹாரம் வீடுகளை இழந்திருந்ததால் சாஸ்திரிகள் தனது செலவில் ஒரு மஹாலக்ஷ்மி விக் ரஹத்தை ஸ்தாபித்து உக்ரம் குறைந்தது. தனக்கு ப்ரவசனம் , பிரசங்கம் மூலம் கிடைத்த சன்மானத்தையெல்லாம் பருத்தியூர் ராமர் கோவில் புனருத்தாரணம் அபிவிருத்திக்கு அளித்தவர் சாஸ்திரிகள்.

இப்படிப்பட்டவர் மஹா பெரியவாளுக்கு ஒரு குருவாக அமைந்து வேத சாஸ்திர இதிஹாச, புராண ங்கள் கற்பித்த மஹான்.
அவர் இயற்றிய ரஸ நிஷ்யந்தினியின் அடுத்த ஐந்து ஸ்லோகங்களை இன்று அறிவோம்: 91 -95.

''தசரதனுக்கும் அவையில் கூடியிருந்த மற்றவர்களுக்கும் வசிஷ்டருக்கும் பொதுவாக ராஜரிஷி விஸ்வாமித்ரர் ஸ்ரீ ராமனின் மஹாத்மியத்தை தொடர்ந்து சொல்கிறார்:

91. अयमग्निसूर्येन्द्रवायुमृत्युभ्यो बिभेतीति त्वम्;'भयादस्याग्निस्तपति भयात्तपति सूर्यः भयात् इन्द्रश्च मृत्युर्धावति पञ्चम' इत्यहम् ॥

அயமக்னி சூர்யேந்திர வாயுமிருத்யோ பிபேதீதி த்வம் ; பயாதஸ்யாக்னிஸ்தபதி பயாந்தபதி சூர்ய : பயாது இந்திரஸ்ச ம்ருத்யு தார்வதி பஞ்சம இத்யஹம் ;

''தசரதா உன் மன நிலை நான் அறிவேன். உன் மகன் ராமனை என்னுடன் காட்டுக்கு அனுப்ப நீ தயங்குகிறாய். காரணம் அவன் எல்லோரையும் போல் அக்னி, சூரிய வெப்பம், சந்திரனின் குளிர், இந்திரனின் கோபம், வாயுவின் சீற்றம், யமனின் சக்தி இதற்கெல்லாம் அஞ்சுபவன் என்று எண்ணுவதால். பாவம் நீ ராமன் யார் என்று அறியவில்லை? அவன் யார் தெரியுமா? எவனைக்கண்டு அஞ்சி நடுங்கி அக்னி எரிகிறானோ , எவனை நினைத்தாலே நடுங்கி, இந்திரன் யமன் எல்லோரும் அவரவர் வேலைகளை கிரமமாக செய்கிறார்களோ, . சூரிய சந்திரர்கள் சரியான வேளையில், காலத்தில் தமது கடமைகளை சரிவர செய்கிறார்களோ அந்த புண்ய பராக்ரம சர்வ சக்தி நாயகன், அவனே ராமன். அறிந்துகொள்.

92 अयं मध्यमपरिमाणवान् इति त्वम् अयम 'अङ्गुष्टमात्रः पुरुषोऽन्तरात्मा सदा जनानां हृदये सन्निविष्टः' इत्यहम् ।

அயம் மதியமபரிமாணவான் இதித்வம் ; அயம் அங்குஷ்டமாத்ர: புருஷோந்தராத்மா சதா ஜனானாம் ஹ்ருதயே சன்னிவிஷ்ட: இத்யஹம்
ராமன் ஒன்றுமறியா ஒரு சிறிய பாலகன். பன்னிரெண்டு வயதானவன் என்று சொன்னாயே தசரதா, உன் மகனுக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை. நான் அறிவேன். அவன் என்றும் ஸாஸ்வதமான எல்லா உயிர்களுக்கும் உள்ளே உறையும் பரமாத்மா. அவனுக்கு வளர்ச்சியோ உருவ கட்டுப்பாடோ ஏது ? ஒரே நேரத்தில் அணுவுக்குள் அணு, பெரியதில் பெரிதானவன்.
93. अयं पद्भ्यां भूमि विक्रमत इति त्वम् 'यस्योरुषु त्रिषु विक्रमणेषु अधिक्षियन्ति भुवनानि विश्वा' इत्यहम् ।।
அயம் பத்ப்யாம் பூமி விக்ரமத இதித்வம்; யஸியோருஷு த்ரிஷு விக்ரமணேஷு அதீக்ஷியந்தி புவணாநி விஸ்வா இத்யஹம்
அவன் தனது சிறிய பாதங்களால் நடந்து என்னோடு காட்டுக்கு வரவேண்டுமே என்ற கவலை உனக்கு தசரதா, நானறிவேன், நீயும் அறிந்துகொள். இரண்டே அடியில் இந்த மண் விண் அனைத்துலகையும் கடப்பவன் ஸ்ரீ ராமன், மூன்றாம் அடிக்கு இடம் தேடி மஹாபலி தலையில் இடம் பிடித்தவன்.

94 अयं कालेनोत्पादित इति त्वम्; सर्वे निमेषा जज्ञिरे विद्युतः पुरुषादधीत्यादिश्रुत्या निमेषादिकालाश्चोत्पन्नाः विद्युद्वर्णात् पुरुषादस्मादेव इत्यहम् ।

அயம் காலேனோத்பாதித இதித்வம்; சர்வே நிமேஷா ஜார்ஜிரே வித்யுத: புருஷாததித்யாதிஸ்ருத்யா நிமேஷாதிகாலாஸ்சோ த் பத்ரா; வித்யுத்வர்ணாத் புருஷாதஸ்மாதேவ இத்யஹம் .

ஏதோ காலம் கருணை காட்டி அருளியதால் ஜனித்தவன் ராமன் என்றா தசரதா ராமனைப் பற்றி நினைக்கிறாய்? எனக்கு தெரியும். கண்ணைப்பறிக்கும் மின்னல் ஒளி கொண்ட ராமனால் தான் நிமிஷங்கள், வினாடிகள், மணிகள், காலத்தின் எல்லா அளவுகளும் தோன்றியவை. அவனே அவற்றை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவன்.

95. अयं मयि प्रियः इति त्वम् अस्य कामाय सर्वं प्रियं भवतीत्यहम् ।'

அயம் மயி ப்ரிய : இதித்வம்; அஸ்ய காமாய ஸர்வ ப்ரியம் பவதித்யஹம்

என் மீது ரொம்ப பிரியம் கொண்டவன் என் மகன் என்று சொன்னாயே. எனக்கு சிரிப்பு வருகிறது தசரதா , அவனிடமிருந்து பொங்கி ததும்பும் அன்பு ஒன்றினால் தான் உலகில் எதுவுமே எல்லாமே பிரியமாக காண்கிறது. அன்பில் திளைத்து மகிழ்கிறது. அன்பின் மறுபெயர் ராமன். இதை நான் அறிவேன்.
இன்னும் ஐந்து ஸ்லோகங்களோடு நூறு ஸ்லோகங்களும் முடிவடையும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...