ரஸ நிஷ்யந்தினி J K SIVAN
'' கா கா'' (காக்க வா, காக்க வா )
துளசி தாசர் சொல்லி நமக்கு தெரிபவர் சிறந்த ராமபக்தர் காக புசுண்டி. லோமச ரிஷியால் காக்கையாக சபிக்கப்பட்டு , ''அடேடே, நீ ராம பக்தனா, அப்படியென்றால் நீ ஞானம் பெறுவாய்'' என்று சாபத்தை கொஞ்சம் ரிஷி தளர்த்தினார்.

காகம் நீண்டநாள் வாழ்ந்து பல ராமாயணங்கள், ப்ரவசங்களை கேட்டுக்கொண்டே இருக்கிறது.
84. अयमात्मज इति त्वम्, 'एष आत्मेति होवाच एतदमृतमभयमेतद्ब्रह्मेति, तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम सत्यमिति' इत्यहम् ।
'' ராமன் உன் மகனா? இல்லை தசரதா , அவனைப் புரிந்துகொள். அவன் சாஸ்வதமான ப்ரம்மம். சத்தியத்தின் ஸ்வரூபம். பரமாத்மா.''
85. . अयमस्माभिरनुष्ठितैरश्वमेधादि महापुण्यैर्लब्ध इति त्वम्; अन्यैरपि 'सत्येन लभ्यस्तपसा ह्येष आत्मा सम्यग्ज्ञानेन ब्रह्मचर्येण नित्यम्' इत्यहम् ।
துளசிதாஸ் ராமாயண உத்தரகாண்டத்தில் காகபுசுண்டி துறவி கருடனுக்கு பக்தி யோகத்தை பற்றி உபதேசிக்கிறார். கடவுளே மனிதனாக பிறந்ததால் தான் மனிதனுக்கு பக்தி நன்றாக விளங்கியது. ராமன் சரித்திரம் அதனால் தான் கடவுளின் சரித்ரமாக போற்றப்பட்டு வருகிறது.
காக புசுண்டி அயோத்தியில் பிறந்த சிவபக்தர். இளம் வயதில் கர்வம் ஜாஸ்தி. ராமரை அறவே பிடிக்காது. ராமபக்தர்களை கண்டால் ஏளனம், கோபம். கண்டபடி பேசுவார். ஏசுவார். அவருக்கு ஒரு வயதான பிராமண சிவ பக்தர் மஹாத்ம்யம் எடுத்து சொல்பவர் அறிஉரை கூறுகிறார்; ''இப்படி ராமரையோ, அவர் பக்தர்களை யோ தூஷிக்காதே . அப்பா, நீ சிவனை வழிபடுவது, ராமரை வழிபடுவதும் அவர் மீதுள்ள பக்தியையும் தான் காட்டும். . சிவனை அனவரதமும் துதித்து நீ பெறுகின்ற புண்ணியம் உன்னை ராமர் திருவடிகளில் தான் கொண்டு சேர்க்கும் என்று அறிந்து கொள்''
இது மேலும் ஆத்திரத்தை கிளப்பியது. குருவையே நிந்திக்க தொடங்கினார். குரு கவலைப்படவே இல்லை. ஒருநாள் சிவன் கோவிலில் தியானிக்கும்போது குரு வந்ததை லக்ஷியம் பண்ணவில்லை. குருவை விட தான் சிறந்த சிவபக்தன் என்று எண்ணம். சிவபெருமானுக்கே அவன் மேல் அருவருப்பு வந்து ஒரு அசரீரி கேட்டது: ஹே முட்டாளே, உன் அகம்பாவம் கர்வம் போதும். உன் குருவையே நீ அவமதித்ததால் நீ ஒரு மலைப்பாம்பாக உருமாறி ஒரு மரத்தடியில் கிடப்பாய்.'
குருவுக்கும் இது கேட்டது. பரமசிவனை வேண்டினார்.
''பகவானே கோபம் தணியுங்கள் . அவனும் தங்கள் பக்தன். சாபத்தை கொஞ்சம் தளர்த்துங்கள்'' என்று ஸ்லோகம் பாடினார் (உத்தரகாண்ட 107வது ஸ்லோகம். (நமாமி ....)
''பக்தா உனக்கு 2 வரம் தருகிறேன் என்ன வேண்டுமோ கேள் '' என்று குருவுக்கு சிவன் வரமளித்தார்.
''சுவாமி நான் கேட்கும் முதல் வரம், உங்கள் திருவடியில் நான் என்றும் அடிமையாக இருக்க வேண்டும் ரெண்டாவது வரம் காக்க புசுண்டியை மன்னித்து அருளவேண்டும். அவன் முட்டாள் ஆனால் நல்ல பக்தன்''
''சாபத்தை மாற்றமுடியாது. அவன் ஆயிரம் விலங்கு, பறவை பிறவிகள் எடுப்பான். அதில் எல்லாம் துன்பப்படாமல் இருப்பான். முதலிய பிறவிகள் நினைவு இருக்கும். அயோத்தியில் பிறந்ததால் ராம பக்தனாவான்''.
''காகபுசுண்டி ஆயிரம் பிறவிகள் எடுத்தார். கடைசியில் ராம பக்தனானான ஒரு ப்ராமண பிறவி கிட்டியது. அவன் பெற்றோர்கள் அவனது அதீத ராமபக்தியை கண்டு வியந்தனர். வேறெதிலும் மனம் ஈடுபடவில்லை. காட்டில் துறவியாகி அலைந்தான். காட்டில் லோமச ரிஷியை சந்திக்கிறான். ராமரை எப்படி மனித உடலோடு வழிபடுவது குருவே ?'' என்கிறான்
லோமசர் ப்ரம்மம் சகுண உபாசனை, வேதாந்தம் என உயர் தத்துவங்களை உபதேசித்தும் அவன் திரும்ப திரும்ப ராமரை மனிதனாக கண்டு வழிபடுவதையே கேட்கிறான். மீன் தண்ணீரிலேயே இருக்க விரும்புவது போல் எனக்கு ராமர் அவதாரம் ஒன்றிலேயே விருப்பம். குருவே'' என்கிறான். கடவுளின் அருவ சக்தியை ஏற்றுக்கொள்ளாமல் வாக்குவாதம் செய்கிறான்.
''நீ பிடிவாதமாக, சொன்னதை சொல்கிறாய். உபதேசங்களை ஏற்காமல் ஒரு காக்கை போல் சந்தேகப் பிராணியாக இருக்கிறாய். இக்கணமே நீ ஒரு காக்கையாக உருமாறுவாய்'' என்று லோமசர் சபிக்கிறார். காகபுசுண்டி எந்த வித மாறுபாடும் இல்லாமல் ராமர் ஒன்றே நினைவாக சந்தோஷமாக பறக்கிறான்.
ராமரே லோமச ரிஷியிடம் அவனுக்காக ''உங்கள் கடுமையான சாபத்தை குறையுங்கள்'' என்று கூற, லோமசர் தனது கோபத்துக்கு வருந்தி காகபுசுண்டியை அழைக்கிறார். அவனது தளராத உறுதியான ராம பக்தியை மெச்சுகிறார். பால ராம மந்திரத்தை உபதேசிக்கிறார். ராமர் வழிபாடுகளை எடுத்துரைக்கிறார். துளசிதாஸரின் ராம சரிதமானஸ் முழுதும் காகபுசுண்டிக்கு மனப்பாடம் ஆகிறது. 'காக புசுண்டி, உன் மனதில் ராமன் எப்போதும் சாஸ்வதமாக குடியிருப்பார்'' என ஆசீர்வதிக்கிறார்.
ராமரின் குரல் லோமசருக்கு அப்போது கேட்கிறது: ''லோமசரே, காக புசுண்டி என் உண்மையான பக்தன். உங்கள் ஆசிர்வாதம் அவன் சொல்லிலும் செயலிலும் நிறைவேறும்''
காகபுசுண்டி காக்கை உருவில் பலகாலம் ஆஸ்ரமத்தில் ராமனை பாடியும், நினைத்து போற்றியும் வாழ்கிறார். அயோத்தியில் எந்த குழந்தை பிறந்தாலும் அவனை ராமனாக கண்டு, அவனது பாலலீலைகளில் மகிழ்ந்து வாழ்கிறார்.
கருடனுக்கு காக புசுண்டி இதை உப தேசிக்கிறார். கருடன் அவரை கேட்கிறான்:
'ஏன் சுவாமி நீங்கள் இன்னும் காக உருவத்திலேயே இருக்கிறீர்கள்?''
''இந்த காக்கை உருவில் தான் நான் என் ராமனைப்பற்றி அதிகம் உபதேசம் பெற்றேன், அவனை அதிகம் நினைத்தேன். என் மனதிலிருந்த சந்தேகங்கள் விலகின. அதனால் எனக்கு இந்த உருவம் ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது. கா கா என்று ராமனை என்னை காக்க வா தெய்வமே என்று கூப்பிடும்போதே தினமும் உலகம் விழிக்கிறது.''
ராம பக்திக்கு ஒரு தனி எடுத்துக்காட்டு காக்க புசுண்டி முனிவர் சரித்திரம். உங்களில் எத்தனைபேருக்கு காக புசுண்டியை தெரியும்?
இனி ராமர் மஹாத்மியத்தை ரஸ நிஷ்யந்தினி யில் அடுத்த ஐந்து ஸ்லோகங்களில் பருத்தியூர் பெரியவா விளக்குவதை ரசிப்போம்: ( 81-85).
81 अयमस्मिन् रमणीयतमे नगरे हिरण्यप्रासादे प्रतिष्ठित इति त्वम्, 'अथ यदिदमस्मिन् ब्रह्मपुरे दहरं पुण्डरीकं वेश्म दहरोऽस्मिन् अन्तराकाशस्तस्मिन्नयं प्रतिष्ठित' इत्यहम् ।
அயமஸ்மின் ரமணீயதமே நகரே ஹிரண்ய ப்ராஸாதே ப்ரதிஷ்டாதி இதித்வம்; அத யதிதமஸ்மின் பிரம்மபுரே தரம் புண்டரீகம் வேஷம் தஹரோஸ்மின் அந்தராகாஸாதஸ்மின்னய பிரதிஷ்டத இத்யஹம் .
'தசரதா, நீ நினைப்பது போல் ராமன் இந்த அழகிய உன் அயோத்தி மாளிகையில் மட்டுமா இருக்கிறான்?. அவன் காற்றில், விண்ணில் ,மண்ணில், எங்கும் நிறைந்து காண்பவன். இதயத் தாமரையில் எவருள்ளத்திலும் வீற்றிருப்பவன்''
82. . अस्मत्परम्परागतं महाराज्यमस्मिन् समाहितम् इति त्वम्, 'अस्मिन् द्यावापृथिवी अन्तरेव समाहिते, उभावग्निश्च वायुश्च सूर्याचन्द्रमसावुभौ, विद्युन्नक्षत्राणि यच्चास्येहास्ति यच्च नास्ति सर्वे तदस्मिन् समाहितम्' इत्यहम् ।
அஸ்மத்யராகதம் மஹாராஜ்ய மஸ்மின் ஸமாஹிதம் இதித்வம்; அஸ்மின் தாவப்ருதிவி அந்தரேவ ஸமாஹிதே உபாவக்ரிஸ்ச்ச வாயுஸ்ச சூர்யோச சந்திரமசாவுபெள வித்யுன்னக்ஷத்ராணி யச்சாஸ்யேஹாஸ்தி யச்ச நாஸ்தி சர்வேம் ததாஸ்மின் ஸமாஹிதம் இத்யஹம் .
''இந்த ரகு வம்ச ராஜ்ய பரிபாலனம் வம்சாவளியாக தொடர்ந்து உனக்கு பிறகு உன் மகன் ராமன் வசம் வந்துள்ளது என்கிறாயே தசரதா, எனக்கு தெரிந்ததைச் சொல்கிறேன் கேள்.

இந்த பூமி, ஆகாசம், அக்னி, வாயு, சூரியன், சந்திரன் நக்ஷத்திரங்கள், மின்னல், இன்னும் என்னென்ன வெல்லாம் உண்டோ அதெல்லாம் அவனுடையவை. அவனுக்கு சொந்தமானவை. தெரிந்துகொள்''
83. अयमस्मदादिवत् जीवः पुण्यपापप्रारब्धशरीरः जरामृत्युक्षुत्पिपासादिसाधा रणधर्मोपेत इति त्वम्। एष आत्मा अपहतपाप्मा विजरो विमान विशोको विजिधित्सोऽपिपासः सत्यकामः सत्यसङ्कल्पः' इत्यहम्।
83. अयमस्मदादिवत् जीवः पुण्यपापप्रारब्धशरीरः जरामृत्युक्षुत्पिपासादिसाधा
அயமஸ்மதாதிவைத்த ஜீவ: புண்யபாபப்ராப்தசரீர; ஜராம்ருத்யுக்ஷு த்பி பாஸாதி சாதாரண தர்மோபேத இதித்வம்; ஏஷ ஆத்மா அபஹதபாப்மா விஜரோ விமான விசோகோ விஜிதித்ஸோ பிபாஸ ; சத்யகாம; ஸத்யஸங்கல்ப; இத்யஹம்
தசரதா, நீ அறியாத ஒன்றை சொல்கிறேன் கேள்:
''உன்னையும் என்னையும் போல், அவன் ஒரு தனி மனிதனோ, (ஜீவனோ), பிறந்து மடிபவனோ, கர்மபலனி னால் பிறவி பெறுபவனோ, முதுமை, பிணி, பசி தாகம் கொண்டவனோ இல்லை. அவன் பரமாத்மன். பாபங்கள் நெருங்காதவன். பிறப்பு இறப்பு நெருங்காதவன். ஒரு மானுடனுக்கு நேரும் எதுவும் அவனை அணுகாது. ''
84. अयमात्मज इति त्वम्, 'एष आत्मेति होवाच एतदमृतमभयमेतद्ब्रह्मेति, तस्य ह वा एतस्य ब्रह्मणो नाम सत्यमिति' इत्यहम् ।
அயமாத்மஜ இதித்வம் ஏஷ ஆத்மேதி ஹோவாச ஏதத் ம்ருதமபயமேத த்ரும்ஹேதிதஸ்ய ஹ வா ஏதஸ்ய ப்ரஹ்மணோ நாம சத்யமிதி இதித்யஹம்.
'' ராமன் உன் மகனா? இல்லை தசரதா , அவனைப் புரிந்துகொள். அவன் சாஸ்வதமான ப்ரம்மம். சத்தியத்தின் ஸ்வரூபம். பரமாத்மா.''
85. . अयमस्माभिरनुष्ठितैरश्वमेधादि
அயமஸ்மாபி ரநுஷ்டிததைரஸ்வ மேதாதி மஹாபுண்யைர் லய இதித்வம் அந்யைரபி சத்யேன லப்யஸ் தபஸா ஹோர்ஷ ஆத்மா சம்யஞா னேன ப்ரம்மசர்யேண நித்யம் இத்யஹம் .
.உன் மனதில் ஓடும் எண்ணம் எனக்கு தெரிகிறது. நாம் பெரிய அஸ்வமேத யாகம், தான தர்மங்கள் பல செய்து பெற்ற பிள்ளை ராமன் என்று கருதுகிறாய். இல்லை தசரதா. அப்படி இல்லவே இல்லை. உள்ளத்தில் சத்யம் பூரணமாக இருந்து, சாத்வீகமாக பக்திகொண்ட, ஞானிகள், பிரம்ம ச்சர்யம் பூண்டவர்கள் எவராலும் தான் அவனைப் பெறமுடியும்.''

இன்னும் ரஸ நிஷ்யந்தினி அறிவோம்.
No comments:
Post a Comment