Sunday, June 28, 2020

ASHTAPADHI

நாத ஹரே ஜெகந்நாத ஹரே J K SIVAN

கொரோனா வீட்டுக்குள் உட்கார வைத்து விட்டாலும் டிவியில், யு ட்யூபில் வாட்சப்பில் ஜகந்நாதன் பூரியில் தேரில் செல்லும் வைபவத்தை படுத்துக்கொண்டே பார்த்தேன். பூரி என்றால் எப்போதும் எனக்கு உருளைக்கிழங்கு மசாலாவை விட ஒரு மஹான் தான் நினைவுக்கு வருவார்.
ஜெயதேவர் என்கிற பெயரை விட அஷ்டபதி எனும் ராதா கல்யாண பஜனை பாடல்கள் உலக ப்ரஸித்தம்.

இதில் என்ன ருசி என்றால் பலர் பலவித ராகங்களில் கற்பனையுடன் செவிக்கு விருந்தாக ராதா கல்யாண மஹோத்ச வங்களில் பாடுகிறார்கள். அதைத் தவிர பிரபல வித்துவான்களும் இதை விட்டு வைக்கவில்லை. சங்கீத நிகழ்ச்சி ஜனரஞ்சமாக இருக்கவேண்டும் ரசிகர்கள் கை தட்டல்கள் அதிகம் பெறவேண்டும் என்று ஜெயதேவர் அஷ்டபதிகள் சில உருப்படிகளை கச்சேரியில் சேர்த்துக்கொள்கிறார்கள். சினிமாக்களும் தமது பங்குக்கு சில அஷ்டபதிகளை நல்ல மெட்டுக்களில் அமைத்து நடுவே சேர்த்துக் கொள்கிறது. காசு பார்க்கிறது.

ஜெயதேவர் வாழ்வில் அவர் உள் மூச்சாக இருந்தது ராதா கிருஷ்ணன் நினைவுகள். வெளிமூச்சாக வந்தது ராதா கிருஷ்ணன் பிருந்தாவன லீலா அற்புத அஷ்டபதி பாடல்கள் . அஷ்டபதி காட்சிகளில் ஆள் அதிகம் கிடையாது. ராதை, கிருஷ்ணன், ராதையின் ஒரு தோழி, (சகி,) அப்புறம் மறைவாக இதையெல்லாம் கவனித்த ஜெயதேவர் மட்டுமே பிருந்தாவனத்தில்.
பிருந்தாவனத்தில் நடந்ததை அப்படியே ஒவ்வொரு ஓவராக கிரிக்கெட் விளையாட்டு ரன்னிங் கமென்டரி மாதிரி ஜெயதேவர் ராதா கிருஷ்ணன் சகி , தோழிகள் சந்திப்பு, பேச்சு, அவர்களது உணர்வுகள் ஆகியவற்றை கீத கோவிந்தம் (அஷ்டபதி) பாடல்களில் உயிரூட்டி கண்ணெதிரே கொண்டு வருகிறார்.

அதில் ஒன்று இது.

Naatha hare, Nata hare, Naata hare
Pasyati disi disi, Pashyathi dishi dishipaSyati diSi diSi rahasi bhavantam
tvadadhara madhura madhu ni pibantam
nAdha harE jagannAdha harE
seedati rAdhA vAsa gruhE ||nAdha|
tvadabhisaraNa rabhasEna valantee
patita padAni kiyanti chalantee||nAdha|

vihita viSada bisa kisalaya valaya
jeevati paramiha tava rati kalayA||nAdha||
muhuravalOkita manDana leelA
madhuripu rahamiti bhAvana SeelA||nAdha |.
tvarita mupaiti nakadhA mabhisAram
hari riti vadati sakhee manu vAram||nAdha||
Slishyati chumbati jaladhara kalpam
harirupagata iti timira manalpam||nAdha||
bhavati vilambini vigaLita lajjA
vilapati rOditi vAsaka sajjA||nAdha||
Sree jayadEva kavErida muditam
rasika janam tanutam atimuditam||nAdha|
Naatha hare, Nata hare, Naata hare
Pasyati disi disi, Pashyathi dishi dishi

ராதையின் தோழி மதுவனத்தில் கிருஷ்ணனை தேடி கண்டுபிடித்து

''கிருஷ்ணா, ராதை உன்னைக்காணாமல் துரும்பாக இளைத்து கவலைக்கிடமாக இருக்கிறாள் . நீயோ அவளை பற்றியே கவலைப்படாமல் மற்ற கோபியர் புடைசூழ இங்கே ஆடலும் பாடலுமாக இருக்கிறாய். உன்னை உடனே சந்திக்கவேண்டும். வா'' என்கிறாள் ராதையின் தோழி.

''அவளையே இங்கே வரச்சொல்லேன்?''

''அது தானே முடியவில்லை, அவள் கால்கள் செயலிழந்து தள்ளாடுகிறது. அவளை தாங்கும் சக்தி அவள் கால்களுக்கு இல்லை. உன்னை பிரிவதால் உண்டான துயரம் நெஞ்சுக்கு சக்தி இல்லாமல் செயகிறது.உடல் அனலாக கொதிப்பதால் குளிர்ந்த தாமரை இலைத் தண்டுகளை எடுத்து அவள் நெற்றி, கை, கால்களில் கட்டிவிட்டு வந்திருக்கிறேன். உன்னைக்காணாததால் தன்னையே கிருஷ்ணனாக பாவித்து, நினைப்போல் வேஷம் தரித்து பார்த்து கொஞ்சம் தெம்போடு உயிரோடு இருக்கிறாள். ராதை கிருஷ்ணன் என்பது மனித உடல்கள் அல்ல. பக்தனுக்கும் பரமனுக்கும் இடையிலான பக்தி பிணைப்பு. பாசம். ஜெயதேவர் கற்பனைக்குதிரையை தட்டி விட்டு பிருந்தாவனம் போய் நேரில் கண்டது போல் காட்சிகளை விளக்குவது ரொம்ப ஆச்சர்யம். என்னே அவரது கிருஷ்ண பக்தி.
இந்த பாடலை பாடியவர் ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா. அதை கேட்டு நானும் பாடினேன். பாலமுரளி கிருஷ்ணா பாடியதற்கு ்
விளம்பரம் வேண்டாம். நான் பாடியதை நானே கூட கேட்கவில்லை என்பதால் அவசியம் இந்த யூ ட்யூப் லிங்க் https://youtu.be/R-meCpm1YDE க்ளிக் செயது நான் எப்படி பா.மு.கி யை அவமானப்படுத்தி இருக்கிறேன் என்று கவனியுங்கள்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...