கண்ணாடி கோயில் காளியம்மா J K SIVAN
சரித்திரம் மனித வாழ்வோடு கலந்தது என்பதால் அடிக்கடி சில சரித்திர சம்பவங்களை சொல்ல வேண்டி இருக்கிறது.
மலேயா என்று ஒரு தீபகற்பம். மூன்று பக்கம் நீர் ஒரு பக்கம் நிலம் சூழ்ந்த பிரதேசம். தென் கிழக்கு ஆசியாவில் உள்ள இந்த தீபகற்பத்தின் தென் மூலையில் ஒரு ராஜ்யம் அதன் பெயர் தஞ்சுங் புத்தேரி. 1855ல் சுல்தான் ஆட்சியில் இருந்தது. அப்புறம் பேர் மாறியது . ஜோஹோர் பாரு. கிட்டத்தட்ட ஐந்து ஆறு லக்ஷம் பேர் வசிக்கிறார்கள். இது சுல்தானின் தலைநகர்.
1942-45 கால கட்டத்தில் ஜப்பானியர் வசம் இருந்தது. 1946ல் UMNO இயக்கம் வலுப்பெற்று சுதந்திர மலேஷியா 1963ல் உருவானது. 1994ல் ஜோஹோர் மலேசியாவின் ஒரு முக்கிய மாநிலம்.
\
வெள்ளையர் நம்மை ஆண்ட காலத்தில் மலேயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்ய இந்திய தமிழர்கள் பலர் நமது தேசத்திலிருந்து குடியேறினார்கள். சிங்கபூரைப் போலவே அங்கும் ஒரு தமிழ் வம்சாவளி உருவானது.
அதற்கு முன்பே சோழர்கள் காலத்தில் தமிழக கிழக்கு கடற்கரை யிலிருந்து வணிகர்கள் மலேயா இந்தோனேசியா, கம்போடியா, தாய்லந்து எல்லாம் சென்று அங்கே சிலர் வசிக்க தொடங்கினார்கள். எல்லாமே வெள்ளைக்காரன் ஆட்சி பிரதேசங்கள்.
1922ல் சுல்தான் இப்ராஹிம் என்பவர் ஜோஹோர் பாரு தமிழ் குடி மக்களுக்கு
வழிபட காளி கோவில் கட்டுவதற்கு என்று நிலம் வழங்கினார். அங்கே தான் ஸ்ரீ ராஜ காளியம் மன் ஒரு சிறு குடிசையில் உருவா னாள்
எனக்கு தெரிந்து கோடம்பாக்கம் வடபழனி
யில் முருகன் இப்படித்தான் ஒரு குடிசையில் 1940 களில் உருவானான். நான் விளையாடி இருக்கிறேன். பால தண்டாயுத பாணி பெரிய படம் மனதில் இன்றும் நிற்கிறது. கோவிலில் இன்றும் இருக்கிறது.
ஜோஹோர் பாரு தமிழர்களில் சிலர் காளி கோயில் கட்ட ஒன்று சேர்ந்ததில் சிவசாமி என்பவர் மட்டும் இரவும் பகலும் பாடு பட்டார்.
1991ல் சின்னத்தம்பி அப்பா சிவசாமி யிடமிருந் து பொறுப்பேற்று கோவிலை பெரிதுபடுத்த முழு மூச்சாக ஈடுபட்டார். இன்று உலகிலேயே முதலாவதாக கண்ணாடியாலான ஆலயமாக ராஜகாளி அம்மன் கோவில் நிர்மாணிக்கப் பட்டு உலக பிரசித்தி பெற்றுவிட்டது.
இந்தியாவில் ஒரு சுல்தான் ஷாஜகான் தனது பல மனைவிகளில் ஒருத்திக்கு நினைவாலயம் பளிங்கினால் கட்டிய தாஜ்மஹால் உலகப் புகழ் பெற்று விட்டது. அங்கே இருந்த தேஜோமயேஸ்வரர் என்ற சிவன் ஆலயம் தான் இடித்து தாஜ்மஹால் ஆனது என்று படித்தேன். விஷயம் வெளியே அதிகார பூர்வமாக வரும் வரை நான் தாஜ்மஹாலுக்குள் நுழையப்போவதில்லை.
இந்த ஜோஹோர் பாரு கண்ணாடி காளி கோவில் சிகப்பு, நீலம், மஞ்சள், பச்சை, ஊதா வெள்ளை, தங்க ரேக்குகள், கண்ணாடிகளால் உருவானது. பர்மாக்கார்கள் நன்றாக உழைத்து கட்டி இருக்கிறார்கள். மூன்று மில்லியன் மலேசிய ரிங்கிட் பணம் பிடித்ததாம். பொது மக்கள் தான தர்மத்தில் ரெண்டு மில்லியன் கிடைத்தது என்கிறார்கள். ரெண்டு மூன்று வருஷம் ஆயிற்றாம் கட்டி முடிக்க. சின்னத்
தம்பி குருசாமி. இளம் வயதினர் காளி அருள் பூரணமாக இருக்க கொண்டு தான் இதெல்லாம் முடிந்திருக்கிறது. நினைத்தே பார்க்க முடிய வில்லை. அருள் வாக்கு சொல்கிறாராம். குரு பகவான் சித்தர் என்று பக்தர்கள் அழைக் கிறார்கள்.
தாய் லாந்து அண்டை நாடு. அங்கே தலைநகர் பாங்காக்கில் எங்கோ ஒரு ஆட்டோ ரிக்ஷாவில் குருஜி சென்றுகொண்டிருந்தபோது எதிரே பளிச் பளீச் என ஏதோ மின்ன அது என்னப்பா என்று ரிக்ஷாகாரரை கேட்க ரிக்ஷாக்காரரை கேட்க
'' அது கோவிலுங்க''
. அப்படியா? அங்கே ஒட்டி கொண்டுபோ''
என்கிறார்.சின்னத் தம்பி . அது ரெண்டு கிமீ. தூரத்தில் உள்ள
ஏதோ ஒரு கோவிலின் வெளிச்சுவரில் மின்னிய கண்ணாடி.
எப்போதும் ராஜகாளியை மனதில்கொண்டிருக்கும் குருஜிக்கு
நமது கோவிலிலும் இப்படி கண்ணாடியால் பளிச்சிட வைத்தால் என்ன, வெளியே மட்டும் அல்ல, கோவில் உள்ளே கூட எல்லா இடத்திலும் என்று தீர்மானம் படிந்தது. செயலாக்கி விட்டார். 2008 -2009 ரெண்டு வருஷங்களில் எங்கும் பளபளக்கும் வண்ண கண்ணாடிகள். பார்ப்பவர் மயங்கும் வகையில் ஒரு பேரதிசயமாகி விட்டது. மூன்று லக்ஷத் துக்கும் மேலான கண்ணாடிகள் சேர்ந்தது .
கோவில் நடுவே தாமரை ஆத்மலிங்க பீடத்தில் தியான சிவன். பக்தர்கள் பன்னீர் அபிஷேகம் செய்ய வசதி.
மூன்று லக்ஷத் திற்கும் மேலாக நேபாளத் திலிருந்து கொண்டுவரப்பட்ட உருத்ராக்ஷங் கள் சுற்றி கண்ணாடி சுவரில் பதிக்கப் பட்டிருக் கிறது.
கோவில் கண்ணாடி தூண்களில் புத்தர், ஷீர்டி சாய்பாபா, வள்ளலார், விவேகானந்தர், ராகவேந்திரர், தெரசா, இயேசு, வள்ளலார் குரு நானக் போன்ற நல்லிணக்க மத குருமார்கள் சிலைகள். அருமையான பிள்ளளையார் முருகன் தத்தாத்ரேயர் கண்ணை பறிக்கி றார்கள். மேலே கண்ணாடி கூரையில் அற்புத வண்ண வேலைப்பாடுகள்.
முகலே ஆஸம் என்ற ஹிந்தி படத்தில் ஒரு காட்சியில் ஷீஷ் மஹால் என்று கண்ணாடி ஹால் காட்டுவார்கள் அதற்கே எப்படி பறந்து ஓடி டிக்கெட் வாங்கி பார்த்தோம். இங்கே முழுமையாக ஒரு வண்ணக்கண்ணாடி கோவில்.
இங்கும் உள்ளே செல்ல பிரவேசத் திற்கு பணம் 10 மலேசிய ரிங்கிட் கட்டணம். காசு உண்டா என்று வாயை பிளக்காதீர்கள். நமது கோவில்களில் பிடித்து தள்ளுவதற்கே நாம் அதிக அளவு சிறப்பு கட்டணம் கட்டி உள்ளே செல்கிறோம். பத்து உள்ளூர் ரூபாய் அதிக மல்ல . சிறப்பு கட்டணம் தனி வழி எல்லாம் இல்லை. ஒரே வழி தான் எல்லாருக்கும்.
2009 முதல் அருகே ஒரு மூன்று மாடி சொந்த கட்டிடத்தில் ஞானஆயுதம் நிர்வாக நிலையம் என்று ஒன்றின் மூலம் சமூக சேவை செய்கிறார். உணவு, கல்வி, ஆன்மிகம், இலவச கல்வி போக்குவரத்து, கம்ப்யூட்டர் கல்வி, தற்காப்பு கலைகள், பரதம் , சங்கீதம், தப்லா கற்பித்தல், உடல் பயிற்சி, மேடைப் பேச்சு , வேலை தேடி தருதல் எல்லாமே நடக்கிறது. பரிசுத்தமான கோவில் என்று பார்க்கும்போதே கண்ணாடி சுவர்கள் தரை எல்லாம் சொல்கிறதே.
ஒரு சின்ன வீடியோ இணைத்திருக்கிறேன் காசு கொடுக்காமல் உள்ளே சென்று பாருங்கள் YOUTUBE லிஙக் https://youtu.be/x7O_F93yz1I
No comments:
Post a Comment