திருக்கோளூர் பெண் பிள்ளை வார்த்தைகள் J K SIVAN
74.என்னைப்போல் என்றேனோ உபரி சரனைப் போலே!
பள்ளிக்கூடம் போவதற்கும் கல்வி அறிவிற்கும் சம்பந்தமே இல்லை. பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுப்பது கொடுத்த்த சிலபஸ் SYLLABUS முடிக்கவேண்டும். நோட்ஸ் கொடுப் பார்கள். அதை மனப்பாடம் பண்ண வேண்டும். அதனால் எந்த அளவுக்கு மாணவமனைவிகள் பயன் அடைந்தார்கள் என்பதை விட எவ்வளவு மார்க் பெறுகிறார்கள் என்பது முக்யமாக போய்விட்டது. பள்ளிக்கூடமே பார்க்காத என் அம்மாவுக்கு தெரிந்த விஷயங்களில் நூற்றில் ஒரு பங்கு கூட இன்றும் எனக்கு தெரியாது என்பதை ஒப்புக் கொள்கி றேன்.
திருக்கோளூர் பெண்பிள்ளை ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு வெள்ளைக்காரன் பாஷை இங்கே வருவதற்கு முன்பே பள்ளிக் கூடம் போகாதவள். காதும் கண்ணும் கற்றுக்கொடுத்த பாடம் நிறைய படித்தவள். அவள் சொல்லும் உதாரண புருஷர்களின் பல பேரை நாம் அறியவில்லை. உபரிசரனை தெரியுமா உங்களுக்கு???
உபரிசரன் புரு வம்ச ராஜா. வஸு என்று கூப்பிடுவார்கள். வேட்டையாட பிடிக்கும் குறி தப்பாமல் அம்பெய்பவன். இந்திரனின் நண்பன். இந்திரன் சொல்லி சேதி தேசத்தை வென்று ராஜாவானவன்.
ஒருநாள் அரண்மனையை விட்டு கிளம்பி மரவுரி தரித்து காட்டுக்கு போய் பர்ணசாலை அமைத்துக்கொடு துறவறம் பூண்டான்
ராஜரிஷியாக தவம் செய்து தான் இந்திர பதவியை அடைய தகுதியானான். அடடா என் பதவிக்கு இப்படி ஒரு போட்டியா என்று இந்திரன் வசுவிடம் வந்தான்.
''நண்பா, நீ தவத்தை கைவிடு. நான் தேவர்
க ளை ரக்ஷிக்கிறேன். நீ மனிதர்களை ரக்ஷி. எல்லா வளங்களும் உள்ளது. இங்கேயே ஆண்டுகொண்டு சுகமாக இரு ''
உபரிசரன் யோசித்தான். “வஸு! ஒருவிஷயம். நான் ஓட்டும் ஆகாயத்தில் பறக்கும் ஸ்படிகம் போன்ற விமானம் உனக்குத் தருகிறேன். இங்கிருந்து எப்போது வேண்டுமானாலும் விண்ணுலகம் அதில் பறந்து வரலாமே. ”
உபரிசரன் சிரித்தான். ''ஓஹோ தேவேந்திரன் எப்படியாவதை என்னை திசை திருப்பி மயக்க பார்க்கிறான்'' என அறிந்தான்.
“வஸு , இதோ பார், இந்த வாடாத தாமரைப் புஷ்பங்கள் கோர்த்த வைஜயந்தி மாலையை உனக்குத் தருகிறேன். யுத்தங்களில் தோல்வியே நேராது. மேலும் யுத்தபூமியில் ஆயுதங்களால் காயம் ஏற்படாமல் காக்கும்” தவத்தை விட்டு சுகமாக இரு'' என்றான் இந்திரன்.
உபரிசரன் ஒப்புக்கொண்டபின் இந்திரன் அவனை தழுவினான். ஒரு உயரமான மூங்கில் கோலை அவன் கையில் கொடுத்தான்.
''இது உனக்கு மட்டும் நான் தரும் பரிசு '' உபரிசரன் ஸ்படிக விமானத்தில் ஏறி கழுத்தில் வைஜயந்தி மாலை அசைய கோலோடு தனது சேதி தேசம் வந்தான். சேதி நாட்டு ஜனங்களுக்கு ஆச்சர்யம்.
''அட நம்ம ராஜாவுக்கு என்ன அதிர்ஷ்டம்''
வஸு இந்திரன் தந்த கோலுக்கு புஷ்ப மாலைகள் சூட்டி பட்டு வஸ்திரங்கள் சுற்றி ஆட்டமும் பாட்டுமாக பெரிய உற்சவம் கொண்டாடி அதை ஆறு கஜம் உயரமிருக்கும் பள்ளத்தில் ஸ்தாபித்து இந்திரனை அதில் ஆவாஹனம் செய்து பூஜித்தான். ஆவாஹனம் செய்யும் போது மிருதங்கங்களும் பேரிகையும் முழங்கின. மக்கள் மகிழ்ந்திருந்தார்கள்.
இரவு பகலாக உபரிசரன் விமானத்தில் பறப்பதை தேவர்கள் பொறாமையுடன் பார்த்து பெருமூச்சு விட்டார்கள்.
'உபரி சரன் '' என்றால் மேலே உலாவுபவன் என்று அர்த்தம்.
சேதி தேசத்தில் சுக்திமதி என்றொரு நதி. கொண்டிருந்தது. அந்த நதியின் கழிமுகத்தில் கோலாஹலன் என்ற பர்வதம் மூன்று புறமும் சூழ்ந்து அணைத்து காத்தது.
அந்த மலை திடீரென்று ஒருநாள் அந்த நதியை தடுத்துவிட்டது. மேலே அப்போது விமானத் தில் பறந்து கொண்டிருந்த உபரிசரன் அதை பார்த்து கோபத்தோடு இறங்கினான். கோலாஹல மலையை உதைத்து தடுப்பை நீக்கியதும் சுக்திமதி நதி மீண்டும் சுதந்திர மாக ஓடியது.
சுக்திமதி நதிக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உண்டு.
(நதிக்கு குழந்தை உண்டா என்று என்னை கேட்கக்கூடாது. கதைக்கு கண்ணும் கிடையாது காதும் கிடையாது. பேசாமல் ''உம் '' கொட்டிக்கொண்டு மேலே கேட்கவேண்டும், இல்லை படிக்கவேண்டும்)
சுக்திமதி நதி உபரிசரனிடம் சென்று “ ஹே , நல்ல ராஜா, என் பெண் கிரிகை உனக்கு ராணியாகவும், என் பிள்ளை உனக்கு சேனாதி பதியாகவும் இருக்கட்டும் '' என்று அவர்களை ராஜாவிடம் விட்டுவிட்டு சென்றது. தர்ம நியாய முறையில் ஆண்ட உபரிசரன் விஷ்ணு பக்தன். அஹிம்சாவாதி.
ஒருநாள் தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் யாகத்தில் விலங்குகளை பலியிடும் வழக்கம் பற்றி விவாதம்.விலங்குகளை அனாவசியமாக கொல்லக்கூடாது . யாகத்தில் ஆட்டை பலியிடலாம் என்றனர் சிலர். அப்படி வேண்டாம். தானியங்கள், மாவுகளில் விலங்கு வடிவம் இட்டு அவற்றை உயிர்களுக்கு பதிலாக யாகத்தில் அளிக்கலாம் என்றனர் சிலர். உபரிசரனிடம் நியாயம் கேட்க வந்தார்கள்.
ரிஷிகள் சொன்னபடி உயிர்ப்பலியை தவிர்த்து தானியங்கள் மாவில் யாக திருப்தி செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொன்னாலும் தேவர்கள் கூற்றுப்படி உயிர்பலி செய்வது தான் பொருத்தமானது என்று நீதி சொன்னான்
எதிர்த்த பிராமணர்கள், ரிஷிகள் கோபம் கொண்டு ''உபரிசரா , நீ பாதாளம் செல்வாயாக '' என சபித் தார்கள். இனி உபரிசரன் பறக்க முடியாமல் பாதாளத்தில் விழுந்தாலும் நாராயணனை போற்றி பிரார்த்தித் துக் கொண்டிருந்தான்
நான் பாதாளம் சென்றாலும் நீதி யில் மாற மாட்டேன் என்றான் உபரிசரன் . தெய்வ அனுகூலத்தால், தேவர்கள் இட்ட சாபம் பலிக்கவில்லை. தன்னையே உதாரணமாக காட்டி அவன் வைணவ அஹிம்சாநெறிகளை உணர்த் தினான் அல்லவா?. ரிஷிகளும் அவன் மேல் கருணை கொண்டு எந்த யாகம் செய்தா லும் கடைசியில் அதன் முழுப் பலன் அடைய வசு தாரை என்று நெய்யை அக்னியில் பூர்ணமாக ஆஹுதி செய்வது இன்றும் வழக்கமாக உள்ளது. யாகத்தில் வசு என்றும் இருக்கிறான். நாராயணன் கருடனை அனுப்பி மீண்டும் உபரிசரன் விண்ணுலகம் அழைத்து செல்லப் படுகிறான். ஆனந்தமாக பழையபடி பறக்கிறான் .
திருக்கோளூர் பெண்பிள்ளை இதை நன்றாக நினைவில் வைத்திருக்கிறாள் ராமாநுஜரிடம் பதில் சொல்லும்போது மறக்காமல் இந்த உபரிச்சரனை 74வது உதாரண புருஷனாக காட்டுகிறாள்.
“உபரிசரன் போல் தன்னையே உதாரண மாக எடுத்துக்காட்டி வைணவ நெறிக ளை விளக்கினேனா?”, என்கிறார். (உபரிசரனைப் போல் தன்னையே உதாரணம் காட்டும் அளவிற்குத் தன்னால் உயர முடியவில்லையே என்று ஏங்குகிறார்.) நான் என்றாவது அப்படிப் பட்ட உபரிசரன் போல பிற உயிர்களும் என்னைப் போல என்றேனா என் கிறாள் திருக்கோளூர்ப் பெண். நான் எவ்வாறு இந்த புண்ய க்ஷேத்ரம் திருக்கோளூரில் வாழ அருகதை உள்ளவள் ? என்கிறாள்.
No comments:
Post a Comment