Thursday, June 4, 2020

PESUM DEIVAM




பேசும் தெய்வம்    J K SIVAN

  மஹா பெரியவா நிச்சயித்த  உபநயனம் 

கொரோனா என்கிற  தொற்று நோய்  வந்தாலும் வந்தது.  நம்முடைய  பல  வழக்கங்களை புரட்டி போட்டு விட்டது. கெட்டதிலும் சிலது நல்லது நடக்கும் அல்லவா.  சுத்தம் சுகாதாரம், எளிமையான வாழ்க்கை  கொஞ்சம்  மாதிரி காட்டி விட்டிருக்கிறது. அது தொடரவேண்டும். 
 ஏற்கனவே  நிச்சயித்திருந்த கல்யாணங் கள், உபநயனங்கள் போன்ற  சுப வைதீக  காரியங்கள்  பணத்தை கொட்டி  lavish  ஆக,  ஊர் கூட்டி,  அவரவர் பண அந்தஸ்தை மதிப்பை காட்டி நடத்த முடியாமல், குறிப்பிட்ட முக்கியமான பேர்களுடன் மட்டுமே வைதிக முறைப்படி நடந்திருக்கிறது.  ஆதி காலத்தில் இப்படி தான்   எவ்வளவு பெரிய மனிதர்கள் வீட்டிலும்   நடந்த விசேஷங்கள் இவை. கோவில் கும்பாபிஷேகங்களும் இப்படியே தான் வேத ஆகம சாஸ்திரங்கள் சொல்லியபடியே தர்ப்பையோடு அபிஷேக ஜலத்தோடு நைவேத்தியத்தோடு  நடைபெற்றுஇருக்கிறது.  யாருக்கும்  ஷால்  போர்த்தவில்லை. போட்டோ படம் பிடிக்கவில்லை..   
எனக்கு ஒரு மஹா  பெரியவா அனுபவ சம்பவத்தை   நேற்று  ஒரு நண்பர் அனுப்பி எல்லோருக்கும் சொல்லுங்களேன் என்றான். அதை கொஞ்சம் செப்பனிட்டு  ஆனால்  விஷயத்திலிருந்து கொஞ்சமும்  பிறழாமல் தருகிறேன்.

சுந்தரராமன்  என்ற சிறுவன் மஹா பெரியவாளுக்கு  சேவை செய்ய  கொடுத்து வைத்த  பாக்கியசாலி.  இந்த சம்பவம் நடந்த இடம்  ஓரிக்கையில் என்று தெரிகிறது.  பத்து வயதிருக்கும் இந்த பையனுக்கு எங்கே  மார்பில் பூணலைக் காணோம்? பெரியவாவின் கவனம் அவன் மேல் சென்றது.

''நீ ஏன் இன்னும் உபநயனம் பண்ணிக்கலே?''.

"எனக்கு தெரி யாது  பெரியவா.  அப்பா கிட்டே  பூணல் கல்யாணம் பண்ண செலவுக்கு   பணம் இல்லை போல இருக்கு '' என்றான் பையன்.
பெரியவா பேசவில்லை.   அன்றைக்கு  வந்திருந்த பக்தர்கள் கூட்டத்தில் பெரியவா  நச்சென்று சில வார்த்தைகள் சொன்னார்:
"இன்றைய பிராமண சமூகம்  செய்யும்  காரியங்கள் என்னமோ   எனக்கு கொஞ்சமும் திருப்தியளிக்கவில்லை. உபநயனம் போன்ற எளிமையான, ஆனால் அதி  முக்கியமான சமஸ்காரங் களைக் கூட ஆடம்பர விழாவாக்கி விடுகிறார்கள்.  அதற்கு என்று ஒரு மண்டபம்  பெரிதாக வாடகைக்கு எடுத்து,   நிறைய  பட்டுப்புடவைகள், ஏராளாமானவர்களுக்கு  விருந்து, செலவு என்று பணத்தை   ஆடம்பரமாக  வாரி வீணாக இறைக்கிறார்கள்.

இதனால் சம்ஸ்காரத்தின் முக்கிய அம்சம்  மறந்து போய்விடுகிறது. எனக்குச் சம்மதமே இல்லாவிட்டாலும் சரி, பணக்காரன் வேண்டுமானால் தன் அந்தஸ்தைக் காட்டிக் கொள்ள  அவன்   இஷ்டத்திற்கு செலவு செய்யட்டும் . ஏழை ஜனங்களும்   கடன் வாங்கியாவது இப்படி தான்  செய்யணும் என்று அதை பார்த்து 'காப்பி' அடிக்கும்போது தான்  கஷ்டம் வருகிறது.

'உபநயனம்' போன்ற சிறு விழாக் களுக்குக் கூட தங்களது சக்திக்கு மீறி கடன் வாங்குகிறார்கள். இந்தச் சிறுவிழா நடத்த  அதிகமாக ஒன்றும்  பணம் தேவைப்படுவதில்லை.  திருமணம் நிச்சயமாகும்வரை கூட   சில  மாப்பிள்ளை  பையன்களுக்கு  கல்யாணம் நடக்கும் வரை  பூணல் போடுவதில்லை. கல்யாண சுப முகூர்த்தங்களோ இன்னும் மோசம் . ஆயிரமாயிரமாக  ஏன் லக்ஷங்கள் கூட செலவு செய்து ஆடம்பர விழாக்களாகச் செய்து வருகிறார்கள்.

 இதன் விளைவாக  வரதட்சணை கொடுமை பல பெண்களின் வாழ்க் கையே பாதித்துள்ளது. என்னுடைய உபதேசங்கள் எதுவுமே இந்த சமூகக் கொடுமைகளை கொஞ்சமும் மாற்றியதாகவே தெரியவில்லை. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான்  பாட்டுக்கு  என் மனதிலே தோண்றதை  விடாம  சொல்லிண்டு தான்  இருக்கேன்.''  என்று சொல்லிவிட்டு மஹான் சில நிமிடங்கள் மௌனத்தில் ஆழ்ந்த பின்  சுந்தரராமனை கூப்பிட்டார். 
"மற்றவர்களைப் பற்றி நான் ஏன் பேசவேண்டும்? நீ ஏன் என் எதிரில் திறந்த மார்புடன் நிற்கிறாய்? இதை எப்படி நான் கவனிக்காமல் போனேன்?" சுந்தரராமனிடம் அடுத்த கட்டளையைப் பிறப்பித்தார், "உடனே போய் பஞ்சாங்கத்தை எடுத்துண்டு வா ?, அப்படியே  உன் தோப்பனாரையும் இங்கே அழைச்சுண்டு வா."

சுந்தரராமன்  பஞ்சாங்கத்தை  பெரியவா கிட்டே கொடுத்தான்.  எதிரே  சுந்தரராமனின்  அப்பா கைகட்டி நின்றார். 
பஞ்சாங்கத்தை  பார்த்து விட்டு   பெரியவா    பையனின் அப்பாவிடம்   " அடுத்த வியாழக்கிழமை நாள் மிகவும் நன்றாக இருக்கிறது அன்னிக்கே  உன் பையனின் உபநயனத்தை நடத்திவிடு''  என்று  சொல்லிவிட்டார். 
பையனின்  தந்தைக்கு   காஞ்சி மடத்தில்  மடப்பள்ளியில்  உத்யோகம்..... தயங்கி தயங்கி   எதோ சொல்ல வாயெடுக்க

"பணம் இல்லை, பந்துக்களை அழைக்க அவகாசம் இல்லை என்றெல்லாம் என்கிட்டே  சொல்லாதே, மடத்து சாஸ்தி ரிகளுக்கு உன் சக்திக்கேற்றவாறு பணம் கொடுத்தால் போதும்.  நான் சொன் னேன் னு சொல்லு.  உபநயனத்தை நடத்தி வைப்பார். , மடத்து உக்ராணத் தில் தேவையான சாமான்கள் இருக்கிறதோல்லியோ. நீ  தானே  உக்ராணத்தில் இருக்கிறவன்.
இந்த  உபநயன  சுப காரியத்துக்கு   நீ ,  பையன்,  அவன் தாயார் தவிர வேறு யாரும்  அவசியம் இல்லை" என்று மகான் தீர்க்கமாக   பளிச் என்று  சொல்லி விட்டார்
 சுந்தரராமனின் அப்பா,  பதிலுக்கு    மெதுவாக  "அடுத்த வியாழனன்று பெரியவா உத்திரவுப்படி நான் நைவேத்யம் தயாரிக்கும் கைங்கர்யம்  எனக்கு  இருக்கே ... எப்படி நான்  ..? என்று  தடுமாற 
"அதனால் என்ன... அன்னிக்கி  நீ தவறாமல் நைவேத்திய கைங்கர்யமும்  தான்  பண்ணப்போறே. அதே  நாளில்  உன் குமாரனுக்கும் உபநயனம் பண்ணி வைக்க போறே.''. என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.
பையனின் அப்பாவின் சந்தேகம் தீர  பெரியவா மேலும் விளக்கினார்: 
"உபநயனம்   இங்கேயே  தான்.   இந்த   கோசாலையில் நடக்க வேண்டும் ஆனால் பசுக்களுக்கு எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது நீ பூர்வாங்க வேலைகளை விடியற்காலையிலேயே ஆரமிச்சுடு , பிறகு சந்திரமௌலீஸ் வரருக்கு நைவேத்யமும் தயார் செய்துவிடு. நான் பூஜையை ஆரம்பிக் கும் நேரத்தில் இங்கே நடக்கும் வைதீக கர்மாக்களிலும் வந்து கலந்து கொள். நான் சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தனாபிஷேகம் செய்யும் அதே நேரத்தில்   அங்கேயே   எல்லார் முன்னிலை யிலும்  உன்  பையன்   உபநயன முகூர்த்தம் நடைபெற வேண்டும். இப்போ  போய்   உன் வேலையைப்பார்", என்று சொல்லி அவரை அனுப்பிவிட்டார்

மஹான் ஒரு விஷயத்தில் முடிவு எடுத்த பின் அதை மாற்ற யாரால் இயலும்?  சுந்தரராமனின் தந்தை மடத்து ஊழியர்.  அவரால் எப்படி மறுப்பு சொல்லமுடியும்

சுந்தரராமன் தன்னுடை ய  அம்மாவிடம்  சென்று இந்த விஷயத்தைச் சொன்ன போது,   அந்த  தாய்க்கு  மட்டற்ற மகிழ்ச்சி.  உள்ளூர ஒரு வருத்தம் . உறவினர்களை அழைக்க அவகாசம் இல்லையே , கையில் பணமில்லையே என்கிற மனக்கவலை எழுந்தது. 
  
பணத்தின் அருமை தெரியாமல் வாரி இறைப்பதின் விளைவாகத்தான்  பல குடும்பங்களில்  ஏழ்மை, கடன்,  வறுமை நிலை வாட்டுகிறது.  முன்பெல்லாம் அழைப்பிதழ்கள், உறவினர் கூட்டம், புத்தாடைகள் இவை கள் ஏதுமின்றி உபநயனம்  கல்யாணம் சீமந்தம்  ஆண்டுநிறைவு   எல்லாமே  நன்றாகவே நடந்து கொண்டிருந்தது.
அடுத்த  வியாழக்கிழமை அன்று    மஹா பெரியவா சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷேகம்  பண்ணிக்கொண் டிருக்க   யாரோ  தம்பதியாக  ஒரு  கணவன் மனைவி கையில் பெரிய மூங்கில் தட்டுகளுடன்   பெரியவா தரிசனத்துக்கு  வ
ந்தார்கள். இருவர் கையிலும் பெரிய  தட்டுகள்.
மடத்து நாதஸ்வர வித்வான்கள் இனிமையான கல்யாணி ராக கீர்த்தனையை வாசித்துக் கொண்டு இருந்தனர் .
வந்த  தம்பதியர்  நங்கவரம் சுந்தராம அய்யரும் அவரது பத்னியும்.அவர்கள் இருவரையும் அங்கு பார்த்ததில் எல்லோருக்கும் வியப்பு , சாஸ்த்ரிகளும் மேற்கொண்டு மந்திரம் சொல்வதை அப்படியே  ஒரு கணம்  நிறுத்திவிட்டார் .
அதையெல்லாம் கவனித்த சுந்தரம் அய்யர் மெதுவான குரலில் பேசலானார்
''மஹா பெரியவா எங்களண்டை நேத்திக்கு வந்தபோது   " நாளை காலை, எனக்கு மிகவும் பிரியமான ஒரு பையனுக்கு நான் இங்கே நடத்தும் பூணூல் கல்யாணத்திற்கு எனக்கு யார் உதவி செய்ய வருவார்கள் என்று எதிர்பார்த்தேன் . நீங்கள் சரியான நேரத்திற்கு வந்து இருக்கிறீர்கள் எனக்கு உதவ முடியுமா?" என்று கேட்டுவிட்டார்
" இது எங்களுக்கு கிடைத்த பாக்யம் என்ன செய்ய வேண்டும்  மஹா பெரியவா கட்டளை யிட்டா ''செய்யக் காத்திருக்கிறோம்" என்று கூறினோம். "
மஹா பெரியவா புன்னகையோடு ஆசிவழங்கவே, கடைகள் மூடுவதற்கு  முன்பே,   நேற்று  ராத்திரியே  கடைவீதிக்கு சென்று கூடுமானவரை சாமான்களை சேகரித்துக்கொண்டு   வந்திருக்கிறோம்.  இப்படி ஒரு பாக்யம் கிடைச்சதில்  எங்களுக்கு  ரொம்ப  மகிழ்ச்சி.  
பையனின் பெற்றோர்கள்  யார்?''
''நீங்கள் இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று அந்த தம்பதியர் மூங்கில் தட்டுகளை  சுந்தரராமன் பெற்றோர் முன் வைத்தனர். சுந்தராமனின் குடும்பத்தினர் முகம் மலர வெளியில் சொல்ல வார்த்தை  இல்லாமல் பேசமுடியாமல் திணறி னார்கள் .உப நயனத்திற்கு வேண்டிய புதிய துணிகள் மாலைகள் பழம் வெற்றிலைபாக்கு எல்லாமே அங்கு  சேர்ந்து விட்டது.  , அதனால் மஹான் சந்திர மௌலீஸ்வரருக்கு சந்தனா பிஷேகம் நடக்கும் அதே நேரத்தில் சுந்தரராமனின் உபநயனமும்  ப்ரம்மோ பதேசமும்  சாஸ்த்ரோக்தமாக  நடைபெற்றது. .
மஹா பெரியவா முன்பு மடத்திலேயே, அவர்  தீர்மானித்த நாளில், அவர் ஆசியுடன், அவர் ஏற்பாடு செயது நடத்தி ய  உபநயனத்தில் பூணல் போட்டுக் கொண்ட சுந்தரராமன்  மிகவும் பெரிய அதிர்ஷ்டசாலி. எவ்வளவோ லக்ஷங்கள் செலவு செயது, எங்கோ ஒரு மண்டபத் தில், ஆயிரக்கணக்கான ஜனங்கள் கூட்டம் சேர்ந்து  அக்கப்போர் வெட்டிப் பேச்சு பேச்சுக்கு  நடுவே  செய்தாலும்  பெரியவா முன்னாலே  அவர் சந்திர மௌலீஸ்வரருக்கு  அபிஷேகம்  பண்ணும் நேரம் அவர் ஆசிர்வாதத் தோடு நடைபெற்ற  உபநயனத்திற்கு ஈடாகுமா?

பூஜை  முடிந்த பின்   மகா பெரியவா முன்பு   அவர்  காலடியில்  விழுந்து பையனும்  சுந்தரராமன் பெற்றோ ரும் மற்றோரும் நமஸ்கரிக்க, மஹான் ஒரே ஒரு பழத்தை மட்டும் எடுத்து சுந்தராமனின் கையில் கொடுத்தார்.

சுந்தரராமனின் தாயாரைப் பார்த்து "உன் மகனின் பூணல் கல்யாணம் விமரிசையாக நடந்துதா.  திருப்தியா? என்று கேட்டார்.  அவள் கண்களில் நீர் பெருக்கெடுக்க கைகள் உயர்ந்து மஹானை வணங்கின. அன்று மடத்தில் எல்லோருக்கும் கல்யாண  சமையல்  சாதம். காய்கறிகளும் பிரமாதம்...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...