Friday, March 11, 2022

SOORDAS

 

ஸூர்தாஸ் - நங்கநல்லூர்   J K  SIVAN 


நீயின்றி யார்  அருள்வார்?

கிருஷ்ணா,  என் தவறுகளை கண்ணால் பார்க்காதே.  நீ அதைத் தவிர வேறு எதுவும் என்னிடம்  பார்க்க முடியாது என்பதால் சொல்கிறேன்.  நீ  எல்லோரையும்  எல்லாவற்றையும் சம தரிசனமாக, சமமாக  பாரபக்ஷமின்றி பார்ப்பவன் ஏற்பவன்.  நீ  ஒரு நொடியில் மனதுவைத்தால் என்னை இந்த பவ சாகர துயரத்திலிருந்து மீட்க கூடியவன்.  
சாதாரண இரும்பு துண்டு ஒன்று  கூரான  கத்தியாகி  கசாப்பு கடையில்  உயிர்களை பலி வாங்குகிறது.   யுத்தத்தில் பல தலைகளை சாய்க்கிறது. அதே  இரும்பு துண்டு  ஒரு விக்ரஹமாகி சந்நிதியில் நின்று  அருள் பாலிக்கிறது.  ரெண்டு  இரும்புமே  தகுதி பார்க்காமல், வித்தியாசமின்றி,    ரஸ வாத வித்தைக்காரன் கையில் தங்கமாக மாறுகிறது.    கிருஷ்ணா,  நீ  ரஸவாதி. என்னை ஸ்புடம் போட்டு நல்லவனாக்கி உன் பாதத்தில் வைத்துக்  கொள் .  நீர் என்பது  கங்கையிலும் ஒன்று தான் சாக்கடையிலும்  அதே தான்.   ரெண்டுமே  சமுத்திரத்தில் கலந்தால், கரைந்தால், அடையாளமே இல்லையே .  என் போல் அல்ப ஜீவாத்மாக்களும் பரமாத்மாவான உன்னோடு கலந்தால் மஹிமை பெறுமே .  அப்புறம் இந்த   ஸூர்தாஸ் கூட கிருஷ்ணன் தானே.  இதோ பார்  உடனே  என்னைக்  காப்பாற்றி  உன்னில் சேர்த்துக்கொள், இல்லையென்றால்   நீ  காக்கும் கடவுள் இல்லை என்பேன். 


प्रभू मोरे अवगुण चित न धरो। समदरसी है नाम तिहारो चाहो तो पार करो।|
एक लोहा पूजा में राखत एक रहत ब्याध घर परो|
पारस गुण अवगुण नहिं चितवत कंचन करत खरो
एक नदिया एक नाल कहावत मैलो ही नीर भरो|
जब दौ मिलकर एक बरन भई सुरसरी नाम परो
एक जीव एक ब्रह्म कहावे सूर श्याम झगरो|
अब की बेर मोंहे पार उतारो नहिं पन जात टरो

prabhu more avagun chit n dharo |
samadarasi hai naam tihaaro chaahe to paara karo
ek lohaa pujaa mem raakhat ek ghar badhik paro |
paaras gun avagun nahim chitavata kamcan karat kharo
ek nadiyaa ek naal kahaavat mailo hi neer bharo |
jab dou milakar ek baran bhai surasari naam paro
ek jiv ek brahma kahaave sur shyaam jhagaro |
ab k ber moMhe paar utaaro nahim pan jaat Taro


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...