சூர்யா உனக்கு நமஸ்காரம் -- நங்கநல்லூர் J K SIVAN
சூரியா, இதோ என் நமஸ்காரம் - 1 J.K. SIVAN
ராமன் மனிதனாக அவதரித்ததே தேவர்களின் குறையை நிவர்த்தி செய்ய, அதாவது கொடிய செயல்கள் புரிந்து துன்புறுத்திய ராக்ஷஸர்களை அழிக்க. எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாத வரங்களை பெற்று ராக்ஷர்களை பலம் மிக்கவர்களாக மூன்று லோகங்களையும் தமது அதிகாரத்தில் வைத்து வாட்டி விதைத்தார்கள்.
அதில் முக்கியமானவன் த்ரேதா யுகத்தில் இருந்த ராவணேஸ்வரன் என்ற சிவபக்த ராக்ஷஸன். பராக்கிரமம் மிகுந்த அரக்கன் ராவணனை வதம் செய்ய ராமன் மனிதனாக அவதரிக்க காரணம் ராவணன் கேட்ட வரம். ராவணனை அழிக்க ராமனும் லக்ஷ்மணனும் இலங்கை செல்கிறார்கள்.. தனி மனிதனாக சில வானரர்கள் உதவியோடு ராமன் ராவணனை எதிர்கொள்ளப்போகிறான்.
அந்த நேரத்தில் அகஸ்திய மகரிஷி ராமனை சந்திக்கிறார். ராமனுக்கு ராவணனை வெல்ல சூரியனின் அனுக்ரஹம் கிடைக்க மந்திரம் உபதேசிக்கிறார். விஞ்ஞான காலத்தில் நாம் வாழ்கிறோம். சூரிய ஒளியின் மஹத்வம் நமக்கு தெரியும். அதுவே உலகத்தில் நமது ஜீவாதார சக்தி என்று புரியும். அதை உணர்வதற்காகவாவது இதை படிப்போம். அகஸ்தியர் கூறும் மந்திரத்தின் பொருள் அறிவோம். ராமன் அதால் பயன் பெற்றதைப் போல் நாமும் தினமும் இதை உச்சரித்து பயனடைய ஒரு காசும் செலவில்லை.
இந்த மந்திரம் பற்றிய சில விவரங்கள்:
அகஸ்தியர் தான் இதற்கு ரிஷி.
ஸ்வரம்: அனுஷ்டுப் (சந்தஸ் )
தெய்வம்: சூரியநாராயணன் ஆதித்யனின் ஹ்ருதயத்தில் இருப்பவன். அவனே ராமன் அவனே நாராயணன் அவனே எல்லாம். பரம்பொருள்.
jayathu jayathu soorya saptha lokaika deepam
kirana samitha papam klesa dukhasya nasam
aruna nigama gamyam chadhi adithya moorthim
sakala bhuvana vandhyam, bhaskaram tham namami
ஜயது ஜயது ஸூர்யம் சப்த லோகைக தீபம் |
கிரண ஷமிதா பாபக்லேஷ துக்கசஸ்ய நாஸம் ||
அருண கிரண கம்யம் ஆதிம் ஆதித்ய மூர்த்திம் |
சகல புவன வந்த்யம் பாஸ்கரம் தம் நமாமி ||
இது ஒரு அற்புதமான சூர்ய த்யான ஸ்லோகம்.
ஸ்ரீ ஸூர்ய பகவானே, உனக்கு நமஸ்காரம். ஏழு உலகங்களுக்கும் (பூலோகம், புவர் லோகம், ஸ்வர் லோகம், மஹ லோகம், ஜன லோகம், தபோ லோகம், ஸத்ய லோகம்) நீ ஒளியேற்றும் விளக்காக இருக்கிறாய். உன்னிடமிருந்து பரவும் ஒளிக் கதிர்கள் சகல துக்கங்களையும் கவலைகளையும் போக்கும். உனது கிரணங்கள் எம்மை ஆட்கொண்டு உயிர் வாழ வைக்கின்றன. நீயே முதல்வன். முதன்மையானவன். ஸகல உலகங்களும் உனை வணங்கும். ஒளி வீசுபவனே உனக்கு நமஸ்காரம்.
''சூரிய பகவானே. உனக்கு ஜெயம், ஜெயம், ஜெயம். இந்த ஏழுலகின் ஒளி விளக்கு. தீபம் நீயே. உன்னுடைய கதிர்கள் படும் இடம் எல்லாம் சகல பாபங்களும் தொலையும். வலி தீரும். துயரம் துன்பம் எல்லாமே காணாமல் போகும், வேதங்கள் உன்னை அடைய வழிகாட்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நீ ஒருவனே தேவன் சூரியநாராயணன். சர்வலோகமும் உன்னை வழிபடுகிறதே ஆதித்ய. சூர்ய நாராயணா. என்னுடைய நமஸ்காரங்களையும் அவற்றோடு சேர்த்து உன்னை சாஷ்டாங்கமாக வணங்குகிறேன். சூரியா உனக்கு நமஸ்காரம். எனது நாள் உன்னருளால் இன்று நன்றாக துவங்கட்டும்.
ततो युद्धपरिश्रान्तं समरे चिन्तया स्थितम्।
रावणं चाग्रतो दृष्ट्वा युद्धाय समुपस्थितम्॥
Tato yuddhapariśrāntaṃ samare chintayā sthitam
rāvaṇaṃ jāgrato dṛṣṭvā yuddhāya samupasthitam
ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||
ராவணசுர யுத்தம் முடிவுறும் தருவாயில், ராமனுக்கு சோர்வு ஏற்பட்டது. அந்த சமயத்தில், ராவணாசுரன் வல்லமை படைத்தவனாக தென்பட்டான்.
. ஒவ்வொன்றாக எல்லாவற்றையும் இழந்து கொண்டே வந்த ராவணன் கவலையோடு களைப்போடு நிற்கிறான் . ராமனின் எதிரே ராவணன் இனி எனக்கு ''வாழ்வா சாவா '' போராட்டத்தில் ராமனை எதிர்த்துக் கொல்ல தயாராக உள்ளான்.
२. दैवतैश्च समागम्य द्रष्टुमभ्यागतो रणम्।
उपागम्याब्रवीद्राममगस्त्यो भगवान् ऋषिः॥
2. Daivataiśca samāgamya draṣṭumabhyāgato raṇam
upāgamyābravīdrāmamagastyo bhagavān ṛṣiḥ
தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||
இந்த மகத்தான யுத்தத்துக்கு. ராம ராவண யுத்தத்திற்கு எல்லா தேவதைகளும் சாக்ஷியாக வந்திருக்கிறார்கள். ராமனின் பராக்கிரமம் காண வந்துள்ளார்கள். இதோ அகஸ்தியரும் வந்திருக்கிறாரே. யுத்த பூமியில் அகஸ்த்ய முனிவர், ராமபிரானை சந்தித்தார். அவரது சோர்ந்த நிலையைக் கண்டு பின்வருமாறு கூறினார்
राम राम महाबाहो शृणु गुह्यं सनातनम् ।
येन सर्वानरीन् वत्स समरे विजयिष्यसि ॥ 3 ॥
Rama rama maha baho srunu guhyam sanathanam
yena sarvaanareen vatsa samare vijayishyasi
ராம ராம மஹாபாகோ ச்ருணுகுஹ்யம் ஸநாதனம்
யேன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி (3)
''அப்பா என் மகனே ராமா, கண்ணே, இதைக் கேளடா. எது பரம ரஹஸ்யமோ, சாஸ்வதமோ, அதைச் சொல்கிறேன், நன்றாக கேட்டு நீயும் அதை உச்சரிப்பாயாக. உனக்கு இதனால் வெற்றி நிச்சயம்'' என்கிறார் அகஸ்தியர் வாத்சல்யத்தோடு. ராமனிடம் யாருக்கு தான் வாத்சல்யம் இல்லை.
आदित्य हृदयं पुण्यं सर्वशत्रु विनाशनम् ।
जयावहं जपेन्नित्यम् अक्षय्यं परमं शिवम् ॥ 4 ॥
adithya hrudayam punyam sarva sathru vinasanam
jayavaham japen nithyam akshayyam paramam shubham
ஆதித்யஹ்ருதயம் புண்யம் ஸர்வசத்ரு விநாசனம்
ஜயாவஹம் ஜபேன்நித்யம் அக்ஷய்யம் பரமம் சிவம்
இந்த ஸ்லோகம் எல்லோரும் அறிந்தது. பரம சந்தோஷத்தை அளிக்கும் மந்திரம். இதற்கு தான் ஆதித்ய ஹ்ருதயத்தில் முக்ய ஸ்தானம். இந்த ஆதித்யனின் ஹ்ருதயத்தில் உள்ள சூர்ய நாராயணனை எவர் மனம் கனிந்து வேண்டினாலும் அவர்களைப் போல் வெற்றிசாலி வேறெவரும் இல்லை. சாஸ்வதமான காரண்டீயான உண்மை இது.
सर्वमङ्गल माङ्गल्यं सर्व पाप प्रणाशनम् ।
चिन्ताशोक प्रशमनम् आयुर्वर्धन मुत्तमम् ॥ 5 ॥
sarva mangala mangalyam sarva papa pranasanam
chinthasoka prasamanam ayur vardhanamuthamam
ஸர்வமங்கள மாங்கல்யம் ஸர்வபாப ப்ரணாசனம்
சிந்தாசோக ப்ரசமனம் ஆயுர்வர்த்தன முத்தமம்
இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்லோகமானது எல்லாவிதமான 'கொடிய பாபங்களையும் அழித்திடும். துக்கம், துயரம், துன்பம் எல்லாவற்றிற்கும் கைகண்ட நிவாரணி. நமது மருந்துகள் உப விளைவுகள்(SIDE EFFECTS ) ஏற்படுத்தும். தலைவலிக்கு மருந்து சாப்பிட்டால் வயிற்று வலியை கிளப்பும். முதுகு வலிக்கு மருந்து விழுங்கினால் உடலெல்லாம் சொறி போல் அரிக்கும். புண்ணாகும். சிலருக்கு மார்பில் வலி ஆரம்பிக்கும். விஷம் தான் வேறு வீறு ரூபம் பெயரில், அதெல்லாம். இந்த மருந்து அப்படியல்ல. நூறு ஆண்டுகளை வாழ அருள்வது. ஒரு காசில்லாத போனஸ்.
No comments:
Post a Comment