Tuesday, March 1, 2022

LINGASHTAKAM 4

 ஆதி சங்கரர் -  நங்கநல்லூர்  J K   SIVAN 

லிங்காஷ்டகம் 4 


 कनकमहामणिभूषितलिङ्गं फणिपतिवेष्टितशोभितलिङ्गम् ।
दक्षसुयज्ञविनाशनलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥४॥


கனக மஹாமணி பூஷித லிங்கம்   பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்  தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்  (4)

பொன்னார்  மேனி கொண்ட புண்ணியா, வைரம், கோமேதகம், மரகதம், முத்து, பவழம், மாணிக்கம்  உனக்கு இவற்றால்  ஆன ஆபரணங்களைச் சூட்டி  மகிழ்கிறோம்.  இது  பக்தர்கள் பூட்டி  மகிழ்வது. உனக்கோ  அரவமே  ஆபரணம்,  அதன் கொடிய நஞ்சே  உன் நீல கண்டம், உனக்கு  கந்த  நகை  நீயே  விரும்பி அணியும்   அரவாபரணம் . அவமதித்த  தக்ஷனை  நாசம் செய்த பரம லிங்கா,  சதா சிவா,  சர்வேஸ்வரா,  மகாதேவா, உன்னைபாட,  போற்ற,  பல பிறவி  வேண்டுமே  எனக்கு.

இன்று  சிதம்பரம்  நடராஜனைப்  பற்றி  ஒரு  அருமையான  ருசிகர  தகவல்  தர  விருப்பம். சொல்லாவிட்டால்  மண்டை வெடித்து விடும்  போல  இருக்கிறது.  ஏற்கனவே  தெரிந்தால் இன்னு மொரு முறை  தெரிந்துகொள்வதில்  தப்பில்லை.  தெரியாதவர்களுக்கு  இது ஒரு  போனஸ்.

நாம்  வாழும்  ''பூமி'' யின் மையம்  எது என்று உங்களுக்குத்  தெரியுமா?  தெரிந்தால்  அற்புதம்
ஆச்சர்யம்  என்று  குதிப்பீர்கள்.

இதைக்காட்டிலும் ஒரு  அதிசயம் சொல்லட்டுமா?   நமது  பூமியின்  மையத்தில்,  நாம்  சொல்கிற   'நடு சென்டரில்''    உள்ள நாடு  எது என்றாவது  தெரியுமா?

இன்னும்  கொஞ்சம்  ரகசியமான  கேள்வி?   அப்படி  உலகின் மையத்தில்  உள்ள  நாட்டில்  ''நடு சென்டரில்' உள்ள  இடத்தின் பெயர்  என்ன?'

'மேற்கண்ட  கேள்விக்குகெல்லாம்   ''இந்தியா''   பாரதம்''  என்று  விடை தெரிந்தவர்கள்  அந்த  விடையேறிய உமை பங்கனின்  அருளைப் பெறுவார்கள். மூன்றாவது கேள்விக்கு  

ரகசியமான விடை  ''சிதம்பரம்''  -- இது தெரிந்தவர்களுக்கு  சிதம்பர  ரகசியமே  தெரிந்துவிட்டதாகக்   கொள்ளலாம்.

ரகசியம்  தெரிந்தால்  மட்டும் போதுமா?   பரம  ரகசியம்  தெரிய வேண்டுமே  என்று  ஆசைப்படுவோர்களே ,  இதோ  தெரிந்து கொள்ளுங்கள்.

உலகத்தின்  நாடுகளில்  நடுவில் இருப்பதை  மத்யமத்தை, புள்ளியாக  துல்லியமாக  சுட்டிக்காட்டுவது எது  தெரியுமா   சிதம்பரம்  ஸ்ரீ  நடராஜரின்  தூக்கிய திருவடியின்  கால்  கட்டைவிரல் நுனி.

இதை  அறிந்து சொன்னவர்கள்  ஞானிகள் மட்டுமல்ல,  ஸயன்ஸ்  படித்து  ஊறினவர்கள் .

 உலகம்  உருள்வது, நகர்வது, எல்லாமே  சாக்ஷாத்   நடராஜனின் கால் கட்டைவிரல் நுனியிலிருந்து தான்.    தெரியாமலா  மகான்கள்  தீர்க்க தரிசியாக  பாடியிருக்கிறார்கள்   ''மானாட,  மயிலாட, மங்கை  சிவகாமியாட...   என்று.   சகலமும்  ஆட,  ஆடும் அந்த  சுழற்சியில்  தான்  பிரபஞ்சமே ஆடுகிறது.  அசைவில்  தான் அகிலம்  தழைக்கிறது.  ஆட்டுவிப்பவன்  ஆடலரசன்.   ''நான் அசைந்தால்  அசையும் அகிலமெல்லாமே ...''திருவிளையாடல் சினிமா பாடல் நினைவிருக்கிறதா? சிவாஜி கண்ணை உருட்டி விழிப்பாரே!

அந்த நடம் புரியும்  நடராசன்.  அவனைத்தான்  லிங்காஷ்டகத்தின்  4 வது  சுலோகம்  மூலம் வணங்குகிறோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...