Tuesday, March 1, 2022

LINGASHTAKAM. 1


ஆதி சங்கரர்  -   நங்கநல்லூர் J K  SIVAN
லிங்காஷ்டகம்    1

ஆதி அந்தமில்லாத  முழு முதற் கடவுளே, மகாதேவா,  அடி முடி  காண முடியாத  விஸ்வ ப்ரம்மமே,   உன்னை ஸ்லோகங்களில்  பாடித்  தொழுதவர்கள்  எண்ணற்றவர்கள். எண்ணிப் பார்க்கக் கூட  முடியாத  அளவுக்கு  உன்  பக்தர்கள்  உலகெங்கும்  உள்ளார்கள்.  ஒரு  எட்டு ஸ்லோகம் மஹா சிவராத்திரி அன்று  உன்னை  நினைத்து மகிழ வைத்தது.  எல்லோரும் பாடுவது. அதைப்பற்றி கொஞ்சம் சொல்ல, ரொம்ப  ஆவல்.  

மஹாலிங்கமே ,  உன்னைப்  பாடும்  இந்த  எட்டு  ஸ்லோகங்களின் பெயர்  லிங்காஷ்டகம்.  எல்லோருக்கும்  தெரிந்திருந்தாலும் கேட்கக் கேட்க  அலுக்க வில்லை.  பாடப் பாட  நா மணக்கிறதே  தவிர  அலுக்கவில்லையே. என்ன  ரகசியம்  இதில்?

சிவனை விஷ்ணுவும்  பிரம்மாவும்  வணங்குகிறார்கள். விஷ்ணுவை  சிவனும் பிரம்மாவும் கோடானு  கோடி  தேவர்களும் வணங்குகிறார்கள். இவ்வாறு  ஒருவரை  ஒருவர் வணங்குவதால்  யாரும் யாருக்கும் இளைத்தவர்களோ  சளைத்தவர்களோ இல்லை என்றும் பொருள் கொண்டாலும்,  மகாதேவா , நீ  ஒன்றே சாஸ்வதம், வேண்டுவோர்  வேண்டிய வண்ணம்  பலராக, பலவாக, நிறை வாகத் தோன்றுகிறாய்  என்று  புரிந்து நமஸ்காரம் பண்ணுகிறேன்.  நீ  சர்வ துக்க நாசனம் பல ஜன்மாக்களில் பிறவிகளில் சேர்த்து வைத்துக்   கொண்ட , சர்வ  பாப நாசனம் பண்ணுபவனல்லவா?.      ஆத்ம  ஒளி தரும்  ஜாஜ்வல்ய லிங்கமல்லவா?.  லிங்கமென்றாலே   எனக்கு  என்ன  தோன்றுகிறது?   அருவத்தை  ஏதோ  ஒரு  உருவாக  ஸ்வரூபமாகக் காட்டுவது என்று. ஆனால் பார்க்கும்போதே  உன் லிங்க வடிவம் மனத்தை காந்தமாக  ஈர்க்கிறதே. இனம்  புரியாத பக்தி, பரவசம், உள்ளே உலவுகிறதைப்  புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் வெளியே சொல்லத்  தெரியவில்லையே.பொங்கி வரும்  நன்றிப் பெருக்கால்  நான் சொல்ல முடிந்தது ''சிவ சிவா'' ஓம்  நமசிவாய''   ஒன்றே தான்.    இது தான்  என் ஜபம்.  இதைச் சொன்னாலேயே கேட்டதெல்லாம் கொடுப்பவனாச்சே நீ.  எத்தனை  ராக்ஷசர்களும் கொடியவர்களும்  கூட  உன்னை வேண்டினதும்  அருள் புரிந்தவனல்லவா?

ह्ममुरारिसुरार्चितलिङ्गं निर्मलभासितशोभितलिङ्गम् ।
जन्मजदुःखविनाशकलिङ्गं तत् प्रणमामि सदाशिवलिङ्गम् ॥१॥


brahma muraari suraarchitha lingam  nirmaala bhaasita shobhita lingam
janmaja duhkha vinaashaka lingam tatpranamaami sadaasiva lingam    ( 1 )

''பிரம்ம முராரி சுரார்ச்சித  லிங்கம் நிர்மல பாசித சோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ  லிங்கம்''

பிரம்மனும்  விஷ்ணுவும்  தேவர்களும்  மனிதர்களும்  வணங்குமே  லிங்கமே   எண்ணுவோர்
 எண்ணமாய்  விகசிக்கும்  நிம்ர்மலமான  ச்வயம்ப்ரகாசமான  லிங்கமே  
பிறப்பறுக்கும்  பிஞ்ஞகா   ஜரை  மூப்பு துக்கம்  இவற்றின்  துன்பத்திலிருந்தெல்லாம்  விடுவிக்கும் விஸ்வநாதா,  நினைத்தாலே  இனிக்கும்  நிர்மலா  சதாசிவ லிங்கமே     -- உனக்கு  நமஸ்காரம்  
 
லிங்காஷ்டகம் மொத்தத்தில் சின்ன சின்னதாக  ஒரு  எட்டு  குட்டி  ஸ்லோகங்கள்.  அவற்றுள்  அடக்கம் இந்த  பிரபஞ்சமே என்கிற மாதிரி  எளிதில்  புரிகிற  வார்த்தைகள்.  இதை படித்தோ புரிந்து கொள்ளவோ  ஸமஸ்க்ரிதம்  விசேஷமாக  தெரியவேண்டியதே இல்லை.  அன்றாட  வாழ்க்கையில்  காதில்  விழும்  சில  வடமொழிச் சொற்கள் புரிந்தால்  அதுவே  போதும்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...