ஆதி சங்கரர் - நங்கநல்லூர் J K SIVAN
தோடகாஷ்டகம்
பக்திக்கு வித்து.
ஒரு பள்ளியில் சேர இப்போது என்னென்ன வேண்டும்?. பெரிய இடத்து சிபாரிசு. பணம். அதைத் தவிர ஏற்கனவே படித்ததில் கிடைத்த மதிப்பெண். அதெல்லாம் விட முக்கியம் அவன் மதம், ஜாதி.
இந்த இழி நிலை நமக்கு எப்போது ஏற்பட்டது? வெள்ளைக்காரன் இருக்கும்போது இல்லை. நம்மை நாமே ஆளும்போது என்று சொன்னால் தப்பில்லை. இதை திருத்த முடியும் .மனமிருந்தால்.
ஆதி சங்கரர் சிஷ்யர்களை இப்படி எல்லாம் தேர்வு செய்யவில்லை. யார் அவரிடம் கற்க ஆசைப் பட்டார்களோ அவர்களை சேர்த்துக்கொண்டார். அவர்கள் எல்லோரும் சேர்ந்து எழுதிய பஜ கோவிந்தம் நூலை படித்து நான் வெளியிட்டபோது அறிந்து கொண்ட உண்மை. MS சுப்பலக்ஷ்மி அம்மாள் பத்து ஸ்லோகம் தான் ராகமாலிகையில் பாடியிருக்கிறார். ஒரிஜினல் பஜகோவிந்த ஸ்லோகங்கள் முப்பதுக்கு மேல். அவற்றை மீண்டும் பதிவிடுகிறேன்.
ஆதி சங்கரர் ஸ்ரிங்கேரியில் இருந்த சமயம். கிரி என்ற ஒரு சிஷ்யன் பவ்யமாக அவரிடம் நடந்து கொண்டது அவருக்கு பிடித்ததால் சேர்த்துக்கொண்டார். மற்ற சிஷ்யர்கள் சுரேஸ்வரரைப் போலவோ, ஹஸ்தாமலகர் போலவோ கிரிக்கு அவ்வளவு ஞானம் போதாது. ஆனால் கிரியைப் போல குருவிடம் தேவதா விஸ்வாசம்,பக்தி ஸ்ரத்தை, கைங்கர்ய சேவை மற்ற சிஷ்யர்கள் யாருக்குமே கிடையாது. கிரி தனக்கு மற்ற சிஷ்யர்கள் போல் ஞானம் இல்லை என்று தெரியுமோ தெரியாதோ? கவலையே இல்லாமல் சங்கரருக்கு சிஸ்ருஷை செய்வதில் மட்டுமே குறியாக இருந்தார்.
கிரி ரொம்ப சாது. மற்ற சிஷ்யர்கள் அவரை மதிப்பதில்லை, இளக்காரம் கேலி வேறு. மக்கு பிளாஸ்திரி என பட்டம் .. பாவம் சிரித்துக்கொண்டே அங்கிருந்து நழுவி விடுவார். கோபமே வராது. சங்கரருக்கு அவரிடம் ஒரு தனி ப்ரீதி. கிரி மாங்கு மாங்கு என்று எல்லா வேலையும் இழுத்துப் போட்டுக்கொண்டு குருவுக்கு உழைப்பவர். குரு சேவா ரத்னம்.
ஒருநாள் குருவின் வஸ்த்ரங்களை மூட்டை கட்டிக்கொண்டு ஆற்றங் கரையில் எதிர்பக்கம் போய் ஒரு கல்மேல் துவைத்துக் கொண்டிருந்தார். அந்த நேரம் மற்ற சிஷ்யர்கள் குருவைச் சுற்றி அமர்ந்து கொண்டு அவரிடம் பாடம் கேட்க தயாராயினர். சங்கரர் பாடம் ஆரம்பிக்க வில்லை. எல்லோரையும் நோக்கின அவர் கண்கள் கிரியைத் தேடின. துணி துவைக்கப் போன கிரியும் வரட்டும் என்று காத்திருந்தார். மற்ற சிஷ்யர்களுக்கு ஆசார்யன் அவர் எதற்காக கிரிக்காக காத்திருக்க வேண்டும்? அவனுக்கு குரு உபதேசம் புரியவா போகிறது ? என எண்ணினார்கள். .
பத்மபாதர் பளிச்சென்று கேட்டு விட்டார்:
''குருநாதா, எதற்கு கிரிக்காக காத்திருக்க வேண்டும். அவன் இங்கு இருந்தாலும் நீங்கள் இன்று உபதேசிக்கப்போகும் உயர்ந்த பொருள் கொண்ட கடினமான தோடக மந்திரத்தின் பொருள் விளங்கப் போவதில்லை. கிரி ஒரு மண் சுவர். அவனுக்கு எதற்கு இதெல்லாம் ?''
இந்த வார்த்தை ஆதி சங்கரரைத் துளைத்தது. ஒரு கணம் கண்ணை மூடினார். அவரது மனதிலிருந்து சகல ஞானமும் அப்படியே ஆற்றின் மறு கரைப்பக்கம் துணி துவைத்துக்
கொண்டிருந்த கிரியின் மனதில் புகுந்தது. சற்று நேரத்தில் அழுக்கு மூட்டையோடு சென்ற கிரி அஞ்ஞான அழுக்கு நீங்கி அதி உன்னத ஞானத்தோடு திரும்பி வந்தான். குருவை சுற்றி வணங்கினான். தங்கு தடை இன்றி தோடகம் எனும் கடின உச்சாடன ஸ்ருதியில் (TODAKA METRE ) குருவை வணங்கி ஒரு ஸ்லோகம் பிரார்த்தித்தான்.ஆச்சர்யத்தோ டு பார்த்தனர் மற்ற சிஷ்யர்கள். அவனை வணங்கினர். அன்று தான் தோடகம் பாடிய கிரி இனி தோடகாச்சார்யர் ஆனார். தோடகர் சங்கரரின் ஒரு பிரதம சிஷ்யாரானார். உபநிஷத சாரத்தை ''சுருதி சார சமுத்தரணம்'' எனறு தோடக ஸ்ருதியில் (TODAKA METRE )ல் அமைத்தார்.
அன்று முதல் பக்தியுடன் எப்போதும் முதலில் குருவந்தனமாக நாம் எல்லோரும் பாடும் தோட காஷ்டகம் எட்டு ஸ்லோகங்கள் கொண்டது. அருமையாக இருக்கும் கேட்பதற்கு. நிறைய பேர் கேட்டிருப்பீர்கள். கேட்காதவர்கள் முயற்சித்து கேளுங்கள்.
विदिताखिलशास्त्रसुधाजलधे महितोपनिषत् कथितार्थनिधे । हृदये कलये विमलं चरणं भव शंकर देशिक मे शरणम् ॥ १॥

viditákhilashastrasudhájaladhe mahitopanisatkathitárthanidhe hrudaye kalaye vimalam charanam bhava Shañkara deshika me sharanam.(1)
விதி³தாகி²லஶாஸ்த்ரஸுதா⁴ஜலதே⁴ மஹிதோபனிஷத் கதி²தார்த²னிதே⁴ ।ஹ்ருʼத³யே கலயே விமலம் சரணம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 1॥
'என் குருநாதா, ஓ சங்கரா, வேதம் சாஸ்திர உபநிஷத் சாகரத்தில் விளைந்த அமிர்தமே, உன்னை த்யாநித்தேன். உன் தாமரை திருவடிகளில் சரணடைந்தேன். என் இதயத்தை புதைத்தேன். என்னை ரக்ஷிப்பாயாக ''.
करुणावरुणालय पालय मांभवसागरदुःखविदूनहृदम् । रचयाखिलदर्शनतत्त्वविदं भव शंकर देशिक मे शरणम् ॥ २॥

karunávarunalaya pálaya mám bhavaságaradukhavidünahrudam rachayákhiladarshanattattvavid am bhava Shañkara deshika me Sharaïam.(2)
கருணாவருணாலய பாலய மாம் ப⁴வஸாக³ரது:³க²விதூ³னஹ்ருʼத³ம் । ரசயாகி²லத³ர்ஶனதத்த்வவித³ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 2॥
''கருணைக் கடலே, அடுத்து அடுத்து வரும் பிறவித் துன்பத்திலிருந்து என்னை மீட்டு உன் அருளால் உன்னையே சரணடைந்த என் மனத்தில் ஞானம் பெற அருள்வாயாக.
ஒன்றுமறியாத இந்த ஞானசூன்யத்தில் மேல் கருணை கொண்ட கருணாசாகரமே, என் குருநாதா, போதும் இந்த பிறவித்துயர். பிறப்பு இறப்பற்று விடுபட்டு, உன் தாள் சரணடைந்து பணிந்து ஞானம் பெற அருள்வாய்.
भवता जनता सुहिता भविता निजबोधविचारण चारुमते । कलयेश्वरजीवविवेकविदं भव शंकर देशिक मे शरणम् ॥ ३॥
bhavatá janatá suhitá bhavitá nijabodhavichárana chárumate kalayeshvarajivavivekavidam bhava Shañkara deshika me sharanam.(3)
ப⁴வதா ஜனதா ஸுஹிதா ப⁴விதா நிஜபோ³த⁴விசாரண சாருமதே ।கலயேஶ்வரஜீவவிவேகவித³ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 3॥
''என் குருநாதா, எண்ணற்றோர் பயன்பெறும் எப்படிப்பட்ட ஞானகுரு நீ எனக்கு. இந்த முட்டாளுக்கு. ஆத்மவிசாரத்தில் தேர்ந்த ஆத்ம ஞானி உன் நிழல், காற்று என் மேல் சிறிதளவு பட்டால் கூட நான் ஞானம் பெற முடியுமே. உன் திருவடிகளை பற்றிக்கொண்டு சரணடைந்துவிட்டேன்.
भव एव भवानिति मे नितरां समजायत चेतसि कौतुकिता । मम वारय मोहमहाजलधिं भव शंकर देशिक मे शरणम् ॥ ४॥

bhava eva bhavániti me nitarám samajáyata chetasi kautukitá mama váraya mohamahájaladhim bhava shankara deshika me sharanam.(4)
ப⁴வ ஏவ ப⁴வானிதி மே நிதராம் ஸமஜாயத சேதஸி கௌதுகிதா ।மம வாரய மோஹமஹாஜலதி⁴ம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 4॥
''என் தெய்வமே, சங்கர ஞானகுருவே, நீதான் சாக்ஷாத் பரம சிவன் என்று என் நெஞ்சம் உணர்த்துகிறதே. பரமானந்தத்தில் திளைக்கிறதே. என்னை சூழ்ந்துள்ள மாயத்திரை விலக அருள்புரிவாய் கருணைக்கடலே.
सुकृतेऽधिकृते बहुधा भवतो भविता समदर्शनलालसता ।अतिदीनमिमं परिपालय मा ंभव शंकर देशिक मे शरणम् ॥ ५॥

sukrute dhikrute bahudhá bhavato bhavitá samadarsanalalasata atidinamimam paripálaya mám bhava Shañkara deshika me sharanam.(5)
ஸுக்ருʼதே । அதி⁴க்ருʼதே ப³ஹுதா⁴ ப⁴வதோ ப⁴விதா ஸமத³ர்ஶனலாலஸதா । அதிதீ³னமிமம் பரிபாலய மாம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 5॥
''எனக்குத் தெரியும் என் ஞானகுருவே, நிறைய, எங்கும் நல்ல எண்ணங்களையே பரப்பவேண்டும், நல்ல செயல்களே விளையவேண்டும், புரியவேண்டும், அதன் பரிசு தான் மனதில் உன் அருளால் ப்ரம்மஞானம் தோன்றும். எப்பாடு பட்டேனும் உன் திருவடி பற்றி அதை அடைய முயற்சிப்பேன். நீதான் கருணை கொண்டு அருள்புரியவேண்டும்.
जगतीमवितुं कलिताकृतयो विचरन्ति महामहसश्छलतः । अहिमांशुरिवात्र विभासि गुरो भ शंकर देशिक मे शरणम् ॥ ६॥

jagatimavitum kalitákrutayo vicharanti mahamahasashchalatah abhimámsurivatra vibhási guro bhava Shañkara deshika me sharanam.(6)
ஜக³தீமவிதும் கலிதாக்ருʼதயோ விசரந்தி மஹாமஹஸஶ்ச²லத: ।அஹிமாம்ஶுரிவாத்ர விபா⁴ஸி கு³ரோ ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 6॥
' லோக சம்ரக்ஷண கார்யமாக ஆசார்யர்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள். அவருள் உன்னதமான என் சங்கர குருவே, ஒளிவீசும் சூர்யனே, எனை ரக்ஷி '
''என் குருவான தெய்வமே, நீ யார் என்று அறிவேன். லோக சம்ரக்ஷணத்துக்கு அவ்வப்போது தோன்றும் பகவான் ஒரு ஆசார்யனாக எனக்கு காட்சி தந்தாய். ஞான சூரியனே, உன் திருவடி பற்றினேன். என்னை ரக்ஷி சங்கர குருவே.
गुरुपुंगव पुंगवकेतन ते समतामयतां नहि कोऽपि सुधीः । शरणागतवत्सल तत्त्वनिधे भव शंकर देशिक मे शरणम् ॥ ७॥

gurupuñgava puñgava ketana te samatámayatám nahi ko pi sudhi: Sharanágatavatsala tattvanidhe bhava Shañkara deshika me sharanam.(7)
கு³ருபுங்க³வ புங்க³வகேதன தே ஸமதாமயதாம் நஹி கோ । அபி ஸுதீ:⁴ ।ஶரணாக³தவத்ஸல தத்த்வனிதே⁴ ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 7॥
'ஓ, குரு திலகமே, சரணமடைந்தோர்களின் வத்ஸலா , ரிஷப த்வஜம் (காளைக்கொடி) கொண்ட
ஈடிணையற்ற ஞானியே, சத்ய நிதியே. என் சங்கர குருவே, உன் தாள் பணிந்தேன் ரக்ஷிப்பாயாக '

विदिता न मया विशदैककला न च किंचन काञ्चनमस्ति गुरो ।द्रुतमेव विधेहि कृपां सहजां भव शंकर देशिक मे शरणम् ॥ 8॥
viditá na mayá vishadaikakalá na cha kimchana kánchanamasti guro drutameva vidhehi krupám sahajám bhava Shañkara deshika me sharanam.
விதி³தா ந மயா விஶதை³ககலா ந ச கிஞ்சன காஞ்சனமஸ்தி கு³ரோ ।த்³ருதமேவ விதே⁴ஹி க்ருʼபாம் ஸஹஜாம் ப⁴வ ஶங்கர தே³ஶிக மே ஶரணம் ॥ 8॥
''ஓ என் தெய்வமே, சங்கர ஞான தேசிகா, சொல்லியா உனக்கு தெரியவேண்டும்?. நான் மூடன். அஞ்ஞானி, என்னையும் தேர்ச்சி பெற செய்து ரட்சிக்கவேண்டும். நின் திருவடிகளே சரணம்.
நண்பர்களே, நாம் எல்லோரும் கூட இப்போது ஒன்று மறியாதா சாதாரண ''கிரி '' யாக இருந்தாலும் ஒருநாள் ''தோடக'' ராக மாற வழி உண்டு. அவருடைய தோடகாஷ்டகம் படித்து மனப்பாடம் செய்தாலே வழி எதிரே தெரியும்.

No comments:
Post a Comment