ஸூர்தாஸ் - நங்கநல்லூர் J K SIVAN
5. ப்ருந்தாவனமும் நந்தகுமாரனும் .....
தினமும் ஒரு நாள் விடாமல் சாப்பிடுகிறோமோ அலுப்பு தட்டுகிறதா? காலையில் காப்பி கேட்கிறதே? குடிக்காமல் இருக்கிறோமா? நேற்று வரை நிறைய குடித்தாயே போதாதா? என்றா கேட்கிறோம். அது போல் தான் திரும்ப திரும்ப கிருஷ்ணனை பற்றி சொல்வது, எழுதுவது, பேசுவது நினைப்பது எதுவுமே அலுக்கவில்லை . அதுவும் ஸூர்தாஸ் பாரதியார், ஊத்துக்காடு போன்றவர்கள் எழுதது கிடைத்தால் விட மனசில்லை. அதனால் தான் உங்களையும் சேர்த்து கட்டி இழுக்கிறேன் இத்தகைய பதிவுகளால்.
பிருந்தாவனத்திலிருந்து கண்ணன் புறப்படுகிறான். '' போகிறேன்'' மட்டும் தானா.
போய் '' வருகிறேன்'' இனி கிடையாதோ? இனி கண்ணன் பிருந்தாவனத்துக்கு திரும்பி வர மாட்டானோ?.
மதுராவுக்கு பிரயாணம் துவங்கி விட்டான். ஒளியும் வெளிச்சமும் இல்லாமல் சூரியன் உண்டா?
கிருஷ்ணன் இல்லாத கோபியர்கள் மனதில் மகிழ்ச்சி உண்டா?
கிருஷ்ணன் இல்லாத பிருந்தாவனத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியாதே .
கண் என்று ஒன்று இருந்தால் அது கண்ணனை தேடாவிட்டால் பயனில்லை. கண் இல்லாவிட்டாலும் கண்ணனை உள்ளே நிறுத்தி பிடித்து வைத்துக்கொண்டு பாடுவதற்கு ஸூர் தாஸ் என்கிற பக்தரால் மட்டுமே முடியும்.
காட்சி ஏதாவதைக் காண கண் ஏங்கினால் அது அந்த கண்ணனையே தேடும். அவனுக்கு கண் என்றால் நமக்கு இருப்பது போலவா?
ஆஹா, செந்தாமரையின் அழகல்லவோ அவன் கண்களின் அழகு. முழு நிலவின் குளிர்ச்சி அல்லவோ அவன் கண் வீச்சில் நாம் பெறுவது.
அவனைக் காண, நெருங்க, அணைக்க இரவும் பகலும் துடிக்கிறார்கள் கோபியர்.
ஆஹா! என்ன அழகு அவன்!. ஆளோ கருப்பு. அதில் ரத்த சிவப்பில் நெற்றியில் சிந்தூர திலகம். கருப்பு கழுத்தில் மார்பில் நிறைய பளபளக்கும் வெண்ணிற முத்து மாலைகள்.
இந்தப் பயல் பிருந்தாவனத்தில் இருந்தால் அது ஸ்வர்க லோகம் அல்லவோ நமக்கு? . இத்தனை காலம் நம்மோடு இருந்து நம்மை மகிழ்வித்தவன் ஒரு தூசியாய், ஒரு புல்லாய் நம்மை மதித்து தூர எறிந்து விட்டு பிருந்தா வனத்தையே விட்டு பிரிந்து விட்டானே. நம் கழுத்தை சுற்றி அவன்
இருக்கிக் கட்டிய கயிறு மட்டும் தான் இருக்கிறது. நம்மை ஆட்டுவித்தவன் செல்கிறானே. என்ன மனதில் நினைப்பு அவனுக்கு ? ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் அறியமுடியுமா?
கண்ணற்ற சூர்தாசர் என்ன சொல்கிறார் கடைசியில்
''அடே கிருஷ்ணா, நீ இல்லையேல், உன்னைக் காணாத கண்ணிருந்து என்ன பயன். உன்னைக் காணாவிட்டால் இந்த உடலில் உயிர் தான் இருந்து என்ன பிரயோசனம்?
உள்ளே இருக்கும் சோகத்தைக் காட்டிக்கொள்ளாமல் ஒருவரை ஒருவர் பார்த்து மேலுக்கு சிரித் தாலும் உள்ளே கண்ணனைக் காணாத ஏக்கமும் துக்கமும் நிறைந்தவர்கள் அல்லவோ கோபியர்கள்.
உன் பிரிவால் காசி க்ஷேத்ரமே காளை இழந்து விட்டது என்று சொல்லும்போது பாவம் அந்த பிருந்தாவன வாசிகளின் துயரத்தைப் பற்றி என்ன சொல்வது?
இது தான் சூர்தாஸ் பாடல்:
अखियाँ हरि दर्शन की प्यासी।
देखो चाहत कमल नयन को, निस दिन रहत उदासी॥
केसर तिलक मोतिन की माला, वृंदावन के वासी।
नेहा लगाए त्यागी गये तृण सम, डारि गये गल फाँसी॥
काहु के मन की कोऊ का जाने, लोगन के मन हाँसी।
सूरदास प्रभु तुम्हरे दरस बिन लेहों करवत कासी॥
Hari darshan ki pyaasi,
akhiyan hari darshan ki pyaasi,
dekhyo chaahat kamal nayan ko,
nisdin rehet udaasi.
akhiyan hari darshan ki pyaasi.
Kesar tilak motin ki mala,
vrindavan ke vaasi,
neh lagaaye tyaag gaye trinsam,
daal gye gal phaansi.
akhiyan hari darshan ki pyaasi.
Kaahu ke man ki ko jaanat,
logan ke man haasi,
surdas prabhu tumhre daras bin,
leho karwat kashi.
akhiyan hari darshan ki pyaasi.
No comments:
Post a Comment