Thursday, January 6, 2022

HUMAN BODY

 நம்ம உடம்பு - 7    -    நங்கநல்லூர்  J K  SIVAN


நாம்  எல்லாரும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறோம்?  பெண்ணின் இதயம்  இளகியது.  ஆண்  மாதிரி கடினமில்லாதது என்று தானே.   இதற்கு எது காரணமாக இருந்தாலும்  விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்லும்  ஒரு காரணத்தை  மறுக்க முடியாது.  ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் அதிகமாக துடிக்கிறது. அதனால்  தான் சில பெண்கள்  ஆண்களை துடிக்க வைக்கிறார்களோ?

ஒரு  விசித்திரமான கண்டுபிடிப்பு பற்றி சொல்லட்டுமா?  யாராவது இதை அளந்து பார்த்திருக் கிறீர்களா?  முடிந்தால் இப்போது  செய்து பாருங்களேன்.  இதை யாரோ ஒரு  விஞ்ஞானி கண்டுபிடித்து சொன்னான்  என்றால் அவனுக்கு  இதற்கு எவ்வளவு நாள், நேரம்  தேவைப் பட்டிருக்கும்?  
நமது மணிக்கட்டிலிருந்து நடுவிரல் நுனிவரை உள்ள நீளமும், மேவாய் கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்குமாம்.  ஸாரி   நான்  இதை  நிரூபிக்க அளந்து பார்க்க போவதில்லை.

உடலில் நிறைய  ரோமம்,  கரடி போல்  உள்ளவர்கள்,  இதை நிச்சயம் தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாம்.  உடலில் உண்டாகும் உஷ்ணம் வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது. ஆகவே  அது உங்கள் நன்மைக்குத்தான். 

பகவான்  கிருஷ்ணன் எவ்வளவு  பெரிய  விஞ்ஞானி,  கெட்டிக்காரன்,  விஷயம் தெரிந்தவன் என்பதற்கு ஒரு   சின்ன   உதாரணம்: 

இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல் முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும் இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம் 30 செகண்டு ஆகும்.  அரை நிமிஷம் ஸார் .   எவ்வளவு பெரிய  உடம்பானாலும் இதே  ஸ்பீட்   SPEED தான்.

கோபம்  எதற்கு நமக்கு சுள்ளென்று உடனே  வருகிறது?   நிறைய பேர்  ஏன்  துர்வாசராக இருக்கி றார்கள்?   இதற்கு  ஒரு காரணம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  

மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர் ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான் மனிதனுக்கு கோபம் வருகிறது.

இரும்பு,தங்கம், ஈயம், தாமிரம், கந்தகம்,உப்பு,சர்க்கரை,  மனஸு   தங்கம்.  நெஞ்சம் இரும்பு.  காதிலே ஈயம் என்றெல்லாம் சொல்கிறோம்.   இதெல்லாம் நமது உடம்பிலே நிறைய, அதாவது எவ்வளவு தேவையோ  அந்த அளவு நிரப்பி தான் கடவுள் நம்மை பூமிக்கு அனுப்பியுள்ளான்.
மனித மூளையில் உள்ள  தாமிரத்தின் அளவு 6 கிராம் ஆகும்.  எவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது?

சம்பந்தம் ஏன்  நடை உடை பாவனையில்  ஒரு பெண் போல் இருக்கிறான். பேசுவது,  நடப்பது,உடம்பு அசைவு எல்லாமே  பெண்மையாக  தெரிகிறதே  என்கிறோமே, அதே  போல்   ''ருக்மிணியா, அடேயப்பா, அவள்  வேஷ்டி கட்டாத  ஆம்பிளே''  என்கிறோம்.  அதற்கும்  ஒரு காரணம் இருக்கிறது.   அட்ரீனல்  ADRENAL  சுரப்பி அளவுக்கு அதிகமாக நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால் ஆணுக்கு பெண்குணமும், பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும் என்கிறார்கள்  பல காலம் ஆராய்ச்சி செய்த  விஞ்ஞானிகள்.

மூச்சு நின்றால்  மரணம்  நிச்சயம் என்று எல்லோருக்கும் தெரியும்.  பிராணவாயு நம்மை விட்டு பிரிந்தால் நாம்  கட்டை.   அதற்காக  நாம் மூச்சை விட்டு விட முயற்சித்தால்  அது முடியாது.  ஒன்பது வாசல் திறந்திருந்தாலும்,  மூச்சுக்  காற்று, பிராணவாயு , உடலிலிருந்து எப்போது போகவேண்டும் என்று  கட்டளையோ, அப்போது தான் போகும்.  இந்த காற்று LEAK  ஆகாத காற்று.  

தானாக மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம் ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது. மூச்சை அடக்கினால் ஆயுள் இன்னும் அதிகரிக்கும்!  பிராணாயாமம் இதை சொல்லித் தரும். பல ரிஷிகள் நூற்றுக்கணக்கான  வருஷங்கள்  வாழ  இது ஒரு காரணம்.

இன்னும் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...